தி கிலவர்
மேர்சன்ட்
n
டைனி
டாட் ஸ்டோரீஸ்..
ஒரு மழைக்கால இரவில்,இரு ஆண்கள் அந்த இரவை களிக்க வேண்டும் என்பதற்காக வாடகை அறையெடுத்து தங்கினர்.அங்கு ஒரு அறைதான் இருந்த காரணத்தால் ஒருவருக்கு ஒருவர் தெரியவில்லை என்றாலும் ஓறறையில் தங்கினர்.உண்மையில்,அதில் ஒருவன் திருடன்,ஒருவன் மிகப்பெரிய வைர வியாபாரி.சில காலம் அவரை அவன் பின்தொடர்ந்து வந்தான், அந்த வியாபாரி நிறைய தொகையையும் விலைமதிபற்ற வைரங்களையும் தன்னுடன் கொண்டு வந்தார்.
அந்த இடத்து உரிமையாளர் எப்பொழுது இருவருக்கும் தங்க ஒரே இடத்தை கொடுத்தாரோ, அப்போது, அந்த ஒரே அறையில் தங்கள் உடமைகளை வைத்துக் கொண்டனர்.சில நிமிடங்களுக்கு பிறகு உணவு இடைவேளைக்காக வியாபாரி வெளியே சென்றார்.அந்த திருடன் வியாபாரியின் உடமைகளை சோதனை புரிந்தான்,ஆனால்,அவனுக்கு எதுவும் கிடைக்கவில்லை.விரைவில் அவர் திரும்பி வந்தார்.இருவரும் உரங்கச் சென்றனர்.அடுத்த நாள் காலையில் திருடன்,``ஐயா! நான் ஒரு திருடன் உங்கள் உடமைகளை திருடிச் செல்ல முயற்சி செய்தேன்.ஆனால்,எனக்கு எதுவும் கிடைக்கவில்லை’’ என்று கூறினான்.அதற்கு அந்த வியாபாரி``எனக்கு தெரியும் அதனால் தான் என்னுடைய உடமைகளை உன் பையில் வைத்திருந்தேன் என்று கூறினார்.