நான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வலையுலகில் அடியெடுத்து வைத்தேன்.என்னுடைய சிறு வயதில் இருந்தே பொதுநலக் கருத்துகள் அரசுக்கும் அரசியலுக்கும் எதிராக
இருந்தாலும் அதை அனைவரின் பார்வைக்கும் கவனத்திற்கும் கொண்டு வர வேண்டியதற்காக நான்
என்ன செய்ய வேண்டும் என்று யோசித்த போது தான் என்னுடைய கல்லூரியின் முதல் பருவத்தில் தமிழ் ஆசிரியர் தமிழுக்கு மட்டுமின்றி எனது கருத்துக்களுக்கும் முழு சுதந்திரமும் ஆதரவும்
வழங்கி தொடர்ந்து ஊக்குவித்தும் ஒரு வழிக்காட்டியாக வந்துக் கொண்டு இருக்கிறார்.இவரை
தமிழ் ஆசிரியர் என்பதா..?? கணினி ஆசிரியர் என்பதா..?? என்று பலமுறை நான் யோசித்ததுண்டு.காரணம்
அவர் தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றும் இன்று எல்லாம் கணினி என்ற நிலை இருக்கையில்
தனது மொழிக் குறித்து கணினி உலகில் ஒரு மாற்றம் கொண்டு வரவேண்டும் என்ற ஆர்வத்தையும்
கண்டு நான் வியந்ததுண்டு.அவரின் உதவிகளுடன் நான் எனது கருத்துகளை வலையுலகில் பதிக்க
ஆரம்பித்தேன்.எனது நெறியாளரும் வழிக்காட்டியும் இன்னொரு தந்தையுமாகிய முனைவர்.இரா.குணசீலன்
இவரை தங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும்.இவரும் ஒரு வலைப்பதிவரே.
என்னடா உலகத் தமிழ் வலைப்பதிவர் கையேடு-னு தலைப்பு வைத்துவிட்டு
எதையோ சொல்லுறாங்களே என்று நினைக்க வேண்டாம்.வலையுலகில் எனது எழுத்தைப் பதிக்க ஆரம்பித்த
போது நான் வாசித்து வந்தது எனது குருவின் பக்கம் மட்டுமே பிறகு அவரின் உதவியோடு அவரின்
நண்பர்களை தொடர ஆரம்பித்தேன்.பிறகு வலையுலகில் எனக்கென்று ஒரு நண்பர் வட்டத்தை உருவாக்கிக்
கொண்டேன்.இதன் மூலம் எனக்கு பலத்துறைச் சார்ந்த அறிவும் ஒரு உத்வேகமும் கிடைத்தது.எனவே
எனது முதல் கையேடு எனது குருவே அதனால் தான் முதலில் எனது குருவை பற்றி தங்களிடம் பகிர்ந்துக்
கொண்டேன்.இப்போது இந்த தலைப்புக்குள் போலாம்...,
ஆரம்பத்தில் நான் நினைத்தேன் வலைப்பூ என்பதை தமிழ்நாட்டில்
உள்ள தமிழர்களால் தான் எழுதப்பட்டு வருகின்றன என்று.பிறகு எனக்கு நா.முத்துநிலவன் ஐயா
அறிமுகமானார். அவர் எனக்கு “உலகத் தமிழ் வலைப்பதிவர் கையேடு” என்ற ஒரு நூலை அன்பளிப்பாக
அளித்தார்.அந்நூலைப் படித்த பிறகே எனக்கு தெரிந்தது வலையுலகில் எழுதி வருப்பவர்கள்
“ஏழு கடல் தாண்டி…ஏழு மலை தாண்டி..” வாழ்பவர்களாலும் தனது தாய்மொழியின் பற்றாலும் உலகில்
பலப் பகுதிகளில் வசித்து வருபவர்களாலும் எழுதப்பட்டு
வருகின்றன என்று தெரிந்துக் கொண்டேன்.இந்நூல் எனக்கு வலையுலகில் பலரை தொடர்வதற்கும்
அவர்களின் துறைச் சார்ந்தும் துறைச் சாராமல் பல அரசியல் மற்றும் அரசு-க்கு தொடர்பான கருத்துகளையும் தொடர்ந்து வாசித்து, எனது
கருத்துகளையும் மறுமொழியாக கொடுக்கவும், உதவியாக இருந்து வருகின்றது.
இன்றைய தலைமுறை தங்களது நேரத்தை அதிகமாக இணையத்தில் தான்
செலவிடுகிறார்கள்.அதிலும் குறிப்பாக முகநூல்(face book),கட்செவி(whats app) மற்றும்
பொழுதொரு கட்டுரை(twitter) போன்ற சமூக வலைத்தளங்களில்
நேரத்தை செலவிடும் பட்சத்தில் இதுப் போன்ற வலைப்பூவிலும் தனது படைப்புகளை பலரும் படித்து
பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் கடந்த நான்கு ஆண்டுகளாக வலைப்பதிவர் சந்திப்பு நடைபெற்று
வருகின்றன.
நமக்கு பழகிப் போன ஒன்று ’கையேடு’ என்பது, பள்ளிக் காலத்தில்
இருந்து இன்று வரை எதற்கு எடுத்தாலுமே கையேடு என்று, இதே போல் தான் கடந்த வலைப்பதிவர்
சந்திப்பு-2015-ல் வலைப்பதிவர் கையேடு என்ற
ஒன்றை யோசித்து, இது வலையுலகில் புதியதாக என்னை போல் வருபவர்களுக்கு பெரிதும் உதவியாகவும்
வழிக்காட்டுதலுமாக இருக்கும் என்ற நோக்கில் வெளியிடப்பட்டுள்ளன.இதனை தங்களின் கவனத்திற்கு
கொண்டு வருவதன் நோக்கமே இப்பதிவு.எனது கருத்துக்களையும் எனது சகோதரிகளின் கருத்துகளுக்கும் தொடர்ந்து ஆதரவும்,ஊக்கமும் அளித்து வரும் அனைவருக்கும் இக்கணம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
’சுடர் விளக்காயினும், தூண்டுகோல் ஒன்று வேண்டும்’ என்ற பழமொழிக்கு
ஏற்ப எங்களை ஆதரித்து வரும் அனைத்து வலைப்பதிவர்களுக்கும் எனது சகோதரிகளின் சார்பிலும்
எனது சார்பாகவும் நெஞ்சம் கனிந்த நன்றிகளை
தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி...!!!