ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

தன்னம்பிக்கை 10




Image result for rama kaviyam
(தன்னம்பிக்கை தொடர்கிறது…)

உங்கள் உறவினர்களில் யாருடனாவது உங்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டிருக்குமெனில், சற்று நினைவுபடுத்திப் பாருங்கள். அதிகப்படியான பேச்சுதான் அதற்கு மூல காரணமாக இருந்திருக்கும்.

எவ்வளவு அதிகமாக வீண் வார்த்தைகளைப் பேசுகிறோமோ, அவ்வளவு அதிகமாகப் பாவம் செய்கிறோம் என்று பொருள். எவ்வளவு கண்ணியத்துடன் அமைதி காத்துக் கொள்கிறோமோ அவ்வளவு புண்ணியம் செய்கிறோம் என்று பொருள்.

நம்உடம்பிலுள்ள கெட்ட கொழுப்புகள் ஏற்படுத்தக்கூடிய பிரச்சனைகளைவிட, ‘வாய்க்கொழுப்பு’ ஏற்படுத்துகின்ற பிரச்சனைகள் மிகக் கொடியவை. எனவே நாம் எதை அடக்குகிறோமோ இல்லையோ நாவை அடக்குவது அவசியம்.

‘அவரை மாதிரி ஒரு ஆளை நீங்க பார்க்கவே முடியாது. வம்புதும்பு கிடையாது. அளவோட அருமையா பேசுவாரு. ரொம்ப அமைதியான மனுஷன்’ என்று ஒருவரைப் பற்றிச் சொல்லக் கேட்கும்போது, அந்த மனிதர் மீது தானாக ஏற்பட்டுவிடுகிறது.

எந்தச் சூழ்நிலையிலும் உணர்ச்சிவசப்படாமல் அமைதியாக இருந்து பாருங்கள். அநீதியாகப் பேசுகிறவர்களும் அக்கிரமக்காரர்களும் உங்களை விட்டு விலகி ஓடிவிடுவார்கள்.

எனவே அளவோடு பேசி, உங்கள் மதிப்பையும் மகிழ்ச்சியையும் காத்துக் கொள்ளுங்கள்.

அதுதான் வாழ்வெனச் சொல்லுகிறேன்.
நீங்கள் வாழ்வாங்கு வாழ்ந்திடச்  சொல்லுகிறேன்.
                     
                        நன்றி!!!



தன்னம்பிக்கை 9

                 Image result for rama kaviyam

(தன்னம்பிக்கை தொடர்கின்றது..)

பரதா ! நம் தந்தை நான்கு பிள்ளைகளைப் பெற்றார். மூத்தவன் ‘எனக்கு நாடு வேண்டாம். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றக்கூடிய காடுதான் வேண்டும்’ என்று சொல்லிச் சென்றுவிட்டான். அவனுக்கு உறுதுணையாக இருப்பதே பெருமை என்று இலக்குவன் அவனுடன் சென்று விட்டான். இப்படிச் சென்றவர்கள் இருவரும் உரிய காலம் கடந்தும்கூட இன்னும் வரவில்லை என்பதால் நீயோ  நெருப்பில் விழப்போவதாகக் கூறுகிறாய். அப்படியானால் ஆட்சியை ஏற்றுக்கொள்ள நான்தான் கிடைத்தேனா?’ என்று கேட்கிறான்.

ராம காவியத்தில் சத்ருக்கனன் பேசியது இவ்வளவுதானே. ஆனால் சரியான நேரத்தில் நறுக்கென்று பேசிகிறான் அவ்வளவுதான்!

ஆனால் இங்கே நிலைமை வேறு. நாம் பார்க்கும் இடங்களிலெல்லாம், பெரும்பாலான மனிதர்கள் நிறைய பேசிகிறார்கள்; பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

அவர்கள் பேச்சுகளில் பெரும்பகுதி வீண்கதைகள்; பொய்யான தகவல்கள்; அர்த்தமற்ற வாக்குகள்வாதங்கள்.

அடுத்தவரைக் கெடுத்துப் பேசுவதென்றால் விடியவிடிய ஒரு சொட்டுத் தண்ணீர்கூட குடிக்காமல் பேசுவார்கள். வீண்பழி சுமத்துவதென்றால் அது அவர்களுக்குத் தேன் குடிப்பதுபோல்.

‘புறம் பேசுதல் என்பது இறந்துபோன தன் சகோதரனின் இறைச்சியைப் புசிக்க விருப்பம் கொள்ளுதலுக்கு சமம்’ என்று திருக்குர் ஆன் கூறுகிறது. ஒருவரை ஒருவர் நிந்தனை செய்தால், வீண்பழி சுமத்தினால், அதனால் விளைகின்ற பாவம், யார் அந்தச் செயலை முதலாவது தொடங்கினாரோ அவரையே சாரும் என்றும் அது நம்மை எச்சரிக்கிறது.

தூங்கிற நேரம் தவிர மீதி நேரமெல்லாம் பேசிக் கொண்டே இருப்பவர்கள் பிரச்சினைக்குரியவர்கள். அநீதியான வார்த்தைகளும், பொய்யும் புரட்டும் அவர்களிடமிருந்து வெளிப்படும்.

                    
                                         (தொடரும்..)     

சனி, 17 செப்டம்பர், 2016

மொபைல் வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு! ! ! !



Photo

சில நாட்களுக்கு முன் பெண் ஒருவருக்கு நடந்த நிகழ்வு இது.அவர் வைத்திருக்கும் மொபைல்-க்கு  தேவை இல்லாத SMS மற்றும் தவறான கால்கள் வந்துள்ளது. இவர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து வந்துள்ளது. வீட்டில் சொன்னால் நீ இனி மொபைல் பயன்படுத்தாதே என சொல்லி விடுவார்கள் என பயந்து இவர் வேறு எண் மாற்றி விட்டார் .

ஆனால் சில நாட்கள் கழித்து மீண்டும் அதே எண்ணில் இருந்து பிரச்சனை.நம்பர் மாற்றியும் எப்படி இதுபோல கால் ,SMS வருகிறது என குழம்பி போனார். தனது நண்பரிடம் என்ன செய்யலாம் என கேட்டார் . அவருக்காக அவருடைய நண்பர்கள் துணையுடன் விசாரித்ததில் சில அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.
இவர் வழக்கமாக ரீ- சார்ஜ் செய்யும் இடத்தில் இவர் நம்பரை கொடுத்துவிட்டு E.C பண்ண சொல்லிவிட்டு போய் விடுவார் . இந்த நம்பரை வைத்து அங்கு உள்ள சிலர் செய்த செயல்தான் இது.

இதுபோல ஆபத்தில் நீங்கள் மாட்டாமல் இருக்க சில வழிமுறைகள்



*முடிந்த வரை ரீ-சார்ஜ் கார்ட் வாங்கி ரீ –சார்ஜ் செய்யுங்கள்

*E.C செய்யவேண்டிய நிலை வந்தால் முடிந்த வரை நன்றாக தெரிந்த கடையில் மட்டும் செய்யவும் இல்லை என்றால் உங்கள் சகோதரர்களை அல்லது ஆண் நண்பர்களை விட்டு செய்ய சொல்லவும்

*பேருந்தில் அல்லது கூட்டமாக உள்ள இடத்தில் சத்தமாக உங்கள் நம்பரை சொல்லாதிர்கள்

*தெரியாத நபர்களிடம் நம்பர் தராதீர்கள்.உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் நண்பர்கள் உங்கள் நம்பரை யாரிடமும் கொடுக்ககூடாது என சொல்லுங்கள்

*தவறான SMS வந்தால் யார் என கேட்டு பதில் அனுப்பாதிர்கள் , அப்படி அனுப்பினால் அதுமுலமாக உங்களிடம் தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள்.

*WRONG CALL வந்தால் உடனடியான துண்டித்து விடுங்கள், அடிகடி வந்தால் வீட்டில் உள்ளவர்களை அல்லது உங்களுக்கு நம்பிக்கையான ஆண்களை பேச சொல்லுங்கள்.

*பேருந்தில் அமர்ந்து SMS அனுப்பினால் சுற்றுபுறம் பார்த்து அனுப்புங்கள், நீங்கள்அனுப்பும்  செய்தியை  அடுத்தவர்கள்  படிக்க வாய்ப்புள்ளது.

*மொபைலை பழுது பார்க்க கொடுத்தால் அதில் உள்ள SIM கார்டு மற்றும் Memory Card இரண்டையும் கழட்டிவிட்டு கொடுக்கவும், இல்லை எனில் நீங்கள் அழித்த புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தையும் திருப்ப எடுத்துவிடுவார்கள்

முக்கிய பின்குறிப்பு : இது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் பொருந்தும்.

இது போன்ற பயனுள்ள செய்தியை எனக்கு தொடர்ந்து வழங்கி வரும் எனது நண்பர் தினேஷ் அவர்களுக்கு நன்றிகள் பல..

புதன், 14 செப்டம்பர், 2016

நல்ல நோட்டுக்களுக்கென்றே சில பாதுகாப்பு அம்சங்கள்...!!!

இன்று நான் பகிரவுள்ள தகவல் எனது நண்பர் மூலம் எனக்கு அறிய கிடைத்தவை..இதனை தங்கள் பார்வைக்கும் கொணர்வதன் நோக்கமே இப்பதிவு..

திங்கள், 12 செப்டம்பர், 2016