திங்கள், 29 ஆகஸ்ட், 2016

தன்னம்பிக்கை 3

Image result for தன்னம்பிக்கை

(தன்னம்பிக்கை தொடர்கிறது…)
  
  விஷத்தைக் கக்குவதுபோல் பேசிப்பேசி உங்களைக் காயப்படுத்துகின்றவர்கள் உங்கள் பக்கத்தில், உங்கள் அலுவலகத்தில், உங்கள் உறவினர்களில் இருக்கத்தானே செய்கிறார்கள்.
   
   அவர்களின் வார்த்தைக்கு வார்த்தை நீங்கள் பதில்பேசிக் கொண்டிருந்தால், அதனால் மேலும் மேலும் புண்படப் போவது என்னவோ உங்கள் மனம்தான்.
   
  வீண்பேச்சை வளர்த்துக் கொண்டிருப்பவர்களின் நோக்கமெல்லாம் உங்களைச் சங்கடப்படுத்துவதுதான். எனவே அவர்கள் நல்லிணக்கத்திற்கோ, நல்லுறவிற்கோ ஒரு போதும் வழிவகுக்க மாட்டார்கள்.
   
  அவர்களுக்கு மத்தில் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வதற்கு, மவுனம்தான் மிகச்சிறந்த வழி. அமைதி என்பது ஓர் அற்புதமான ஆயுதம்.  
                      
                       (தொடரும்..)       











































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

தன்னம்பிக்கை 2

  Image result for தன்னம்பிக்கை
  (தன்னம்பிக்கை தொடர்கிறது…)
   இந்த நிலையில் யாரிடம் யார் பேசுவது? இதுதான் பலரின் கேள்வி. சந்தோஷமாகப் பேசி எல்லாரும் சமாதானத்துடன் உறவுகொண்டாடினால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஆனால் பெரும்பாலானோருக்கு அவர்களின் நாவில்தானே பிரச்சினையே இருக்கிறது.
  அப்படிப்பட்டவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்களிடம் அதிக ஜாக்கிரதையாகத்தான் இருந்தாக வேண்டும்.
  ஒவ்வோர் ஆண்டும் பாம்புகளால் கடிபட்டு இறப்பவர்களைவிட, தேனீக்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாம். தேனீ, மனிதனை ஒருமுறை கொட்டினால் அது தன் கொடுக்கை இழந்து விடுகிறது.
  ஆனால் கபட மனிதர்களின் நாவு, ஒருமுறை பேசியதும் அப்படியா விழுந்துவிடுகிறது. தனது வார்த்தைகளால் மற்றவர்களின் மனதை தொடர்ந்து நோகடித்துக் கொண்டால்லவா இருக்கிறது.

                                              (தொடரும்.)

சனி, 27 ஆகஸ்ட், 2016

தன்னம்பிக்கை 01


Image result for thannambikkai images

தன்னம்பிக்கை

   அளவோடு பேசினால் பல பிரச்சனைகளைத் தவிர்த்து விடலாம். பேச வேண்டியவற்றை மட்டும் பேசத் தெரிந்துகொண்டால் நேரத்தை மிச்சப்படுத்தலாம். கூடுமான வரையில் மவுனமாக இருக்கப் பழகிக் கொண்டால் பலரிடமிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.
   
  பேசிப்பேசி பெரிதாக என்ன கண்டுவிடப் போகிறோம்? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நீங்கள் நியாயத்தைப் பேசினாலும்கூட, பல இடங்களில் உங்கள் வார்த்தைகள் அநியாய வார்த்தைகளாகத்தானே விமர்சிக்கப்பகின்றன.
   
  அண்ணனுக்குத் தம்பியிடம் பேச முடியவில்லை; கணவனுக்கு மனைவியிடம் பேசத்தெரியவில்லை; தந்தைக்கு மகனின் பேச்சில் உடன்பாட்டில்லை; பணக்காரனுக்கு ஏழையின் பேச்சில் அக்கறையில்லை; சந்தேகக்காரனுக்கு யாருடைய பேச்சிலும் நம்பிக்கை இல்லை.

                                       (தொடரும்)                       

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

தி ஃபிர்ட்(bird) டாக்டர்

                              தி ஃபிர்ட்(bird) டாக்டர்
ஒரு காலத்தில் ராகுல் என்ற ஒருவனுக்கு பறைவைகள் என்றால் கொள்ளை பிரியம்.தன் வீட்டிலேயே ஒரு அழகான கூண்டு கட்டி வளர்த்தான்,அது மிகவும் பெரிய கூண்டு.அந்த பறைவைகளும் அவனை விரும்பியது தினமும் அதற்கு புதிய தானியங்கள், பருப்புவகை மற்றும் தண்ணீர் கொடுப்பான்.

இந்த பறவைகளை உண்ண பல நாள் பூனை திட்டமிட்டிருந்தது.ஒரு நாள் ராகுல் வெளியே சென்ற நேரம் பார்து தந்திரமான பூனை ஒன்று டாக்டர் போன்று வேடம் அனிந்து ``எனது அன்பான பறவைகளே! நான் உங்ளை பரிசோதிக்க வந்துள்ளேன் உங்கள் உரிமையாளர் என்னை இங்கே அனுப்பியுள்ளார்’’ என்றது.ஆனால்,இந்த பறைவைகள் அழகானவை மட்டுமல்ல அறிவானவையும் கூட``நீ ஒரு பூனை நாங்கள் எங்கள் கூண்டை திறக்கமாட்டோம்’’!அதற்கு பூனை ``நன்பர்களே! நான் ஒரு மருத்துவர் உங்களை துன்புருத்த வரவில்லை’’ என்றது.ஆனால்,பறவைக்கள் கூண்டை திறக்க மறுத்துவிட்டன.

            இந்த கதை சொல்லும் நீதி ``தற்காப்பு’’.
                              தகவல் 100tiny tot bed time stories.