மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (Indian Institute of Technology Bombay - IIT-B) 'விண்மீன் கனவுகள்' இறுதியாக ஒன்பது ஆண்டு காத்திருப்பிற்கு பின், அடுத்த மாதம் விண்ணை தொட இருக்கிறது.
10 கிலோ எடைகொண்ட அந்நிறுவனத்தின் 'மாணவர் செயற்கைக்கோள்' (Studebt Satellite) ஆன 'ப்ரதம்' (Pratham), இஸ்ரோ நான்கு கட்ட போலார் எஸ்.எல்.வியை (பி.எஸ்.எல்.வி.) உதவியுடன் வரும் செப்டம்பர் மாதம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்த இருக்கிறது.
இஸ்ரோவின் முக்கிய செயற்கைக்கோள்கள் ஆன ஸ்காட்சாட் (ScatSat) மற்றும் பிற சில முக்கியமான செயற்கைக்கோள்களுடன் சேர்த்து ப்ரதம் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. முதலில் 2007-ஆம் ஆண்டில் இஸ்ரோவினால் உறுதி செய்யப்பட்ட 'ப்ரதம்' செயற்கைக்கோள் பல்வேறு காரணங்களுக்காக தாமதங்கள் உண்டாகி , அதன் வெளியீட்டு அட்டவணை தேதியானது பின்தங்கிகொண்டே போனது.
'ப்ரதம்' ஒரு அயன்மண்டலத்துக்குரிய ஆய்வு செயற்கைக்கோள் என்பதும் இதன் முக்கிய பணி பூமியின் மண்டிலத்தின் (Earth's ionosphere) எலக்ட்ரான்களை எண்ணுவதென்பதும் குறிப்பிடத்தக்கது. நான்கு மாத பணி காலம் கொண்ட ப்ரதம் விண்வெளியில் 720 கி.மீ. என்ற உயரத்தில் நிறுத்தப்படும். அதன் தரவுகள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் மற்றும் ஜி.பி.எஸ் தகவல்களில் உள்ள பிழைகளை திருத்த உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.