வெள்ளி, 18 மார்ச், 2016

எழில் நிரலாக்க மொழி



எழில் (Ezhil), தமிழில் எழுதும்வகையில் உருவாக்கப்பட்டுள்ள நிரலாக்க மொழியாகும்.[4]. இதில் தமிழ் கலைச் சொற்களைக் கொண்டே நிரல்கள் எழுத முடியும். இது இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஒரு நிரல் மொழியாகும். இம்மொழி இன்னோர் பிரபல மொழியாகிய பைத்தானு(Python)டன் ஒத்து இயங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. பைத்தானின் நிரலகங்களைப் பயன்படுத்தி இயங்கும் இந்த மொழியில், ஆங்கிலத்திலும் நிரல்களை எழுதமுடியும்.
தற்சமயம் சோதனை அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த மொழி, விரைவில் முழுச் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு எழில் நிரலாக்கம்

செவ்வாய், 15 மார்ச், 2016

மீத்தேன் திட்டம் ,மக்கள் திண்டாட்டம்..!!


தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டியதாம் என்ற ஒரு பழமொழி உண்டு.இப்போது அந்த பழமொழி உண்மையாகி வருகிறது.ஆமாங்க தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சையில் தான் இது நிலவுகிறது.இந்த கட்டுரையில் மீத்தேன் எரிவாயு குறித்த சிறிய விழிப்புணர்வை பகிரவுள்ளேன்.

திங்கள், 14 மார்ச், 2016

ரசத்தின் மகிமை


Image result for இரசம்

மிளகு:
     சுவை அரும்புகள் தூண்டுவது; புரதத்தை உடைத்துச் செரிக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் கொண்டது.
சீரகம்:
     செரிமானத்திற்கான வயிற்றுச்சுவர்களைச் சரி செய்வது. மனிதத் தேவைக்கான மக்னீசியம் கொண்டது.
பூண்டு:
     கிருமிகளின் முதல் எதிரி. கொழுப்புகளை உடைப்பது; பக்கவாதம் தடுப்பது; ரத்த அழுத்தம் சீர் செய்யும் செலினியம், கால்சியம், பொட்டாசியம்
கொண்டது.
கடுகு:
     எட்டு மடங்கு உமிழ்நீர் சுரக்க வைப்பது; நல்ல கொழுப்பு உடையது.
புளி:
     வயிற்றுக் கோளாறு சரிசெய்து, இருதயம் வலிமை செய்வது.
தக்காளி:
     வெய்யிலுக்கெதிராய்த் தோல்நலம் காப்பது; வைட்டமின் ஏ, டி இரண்டும் உடையது. மாரடைப்பு புற்றுநோய் இரண்டையும் தடுப்பது.
மிளகாய்:
     வைட்டமின் ஏ, சி இரண்டும் கொண்டது. ரத்த ஓட்டம் அதிகரிப்பது.
கருவேப்பிலை:
     தோல் தொற்று தடுப்பது; சிறுநீரக வலி நிவாரணியாய்ச் செயல்படுவது; தாதுக்களும் நார்ச்சத்தும் மிக்கது.
மல்லித்தழை:
     இரும்புச்சத்து மிக்கது; எழும்புத் தேய்மானம் தடுப்பது.
                                           (படித்ததில் பிடித்தது)

நாம் அன்றாடம் உட்கொள்ளும் ரசத்தில் இவ்வளவு மகிமை இருக்கிறது என்று தெரிய வரும் போது ஆச்சரியமாய் இருக்கிறது. நம் முன்னோர்கள் உணவு பொருட்களில் கையாண்டுள்ள அறிவியலும் தெரியவருகிறது.

உன்னை உலக்கிற்கு அறிமுகம் செய்

   உன்னை உலகிற்கு அறிமுகம் செய்
 
Image result for அப்துல் கலாம்


v  துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு,ஆனால் அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே!

v  ஒரு முறை வந்தால் கனவு! இருமுறை வந்தால் ஆசை! பலமுறை வந்தால் லட்சியம்!

v  உலகம் உன்னை அறிவதைவிட உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்!

v  வெற்றி என்பது உன் நிழல் போல, நீ அதை தேடிப்போகவேண்டியதில்லை. நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது, அது உன்னுடன் வரும்!

v  கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே. உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார்; காணாமல் போய்விடும்.




                          -டாகடர் அப்துல் கலாம்

ஞாயிறு, 13 மார்ச், 2016

பொன்மொழிகள்

                                              
Image result for புத்தகங்கள்

   புத்தகங்கள்

“இறவாத புகழுடைய புது நூல்கள்
தழிழ் மொழியில் இயற்றல் வேண்டும்”
-    மகாகவி பாரதியார்
“மூலையிலோர் சிறுநூலும் புதுநூலாயின்
முடிதனிலே சுமந்துவந்து தருதல் வேண்டும்”
-    பாவேந்தர் பாரதிதாசன்
“ஊர்செல்லக் காட்டும் வழிபோல வாழ்வுக்கு
நேர்பாதை சொல்வதே நூல்”
-    சாமி சிதம்பரனார்
“புத்தகங்கள் மனித சமுகத்திற்காகப் பேரறிஞர்கள் விட்டுச்
சென்றுள்ள பரம்பரைச் சொத்தாகும்”
-    அடிஸன்
“உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே!”
-    கதே
 “பிறர் எழுதியுள்ள புத்தகங்களைக் கொண்டு உங்களைத்
திருத்திக் கொள்வதில் நேரத்தைச் செலவிடுங்கள்; பிறர்
வருத்தி உழைத்ததைக் கொண்டு நீங்கள் எளிதில் பெறக்
கூடிய பயன் இது!”
-    சாக்ரடீஸ்
 “புத்தகங்களை இரவல் கொடிக்காதீர்கள். யாரும்
அவற்றைத் திருப்பிக் கொடுப்பதில்லை. என் நூல் நிலையத்தில்
உள்ள புத்தகங்கள் எல்லாம் பிறரிடமிருந்து இரவல் வாங்கியவை
மட்டுந்தான்!”.
-    அனடோல் பிரான்ஸ்
“என் மனதுக்கு உகந்த நூல்களை மட்டும் கொடுத்து,
என்னை என் வாழ்வு முழுவதும் சிறையிட்டாலும் நான்
கஷ்டப்பட மாட்டேன்”.
-    மாஜினி
“புத்தகம் என்பது வெறும் புத்தகம் மட்டும் அன்று. புத்தகத்தை
தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”.
-    வால்ட் விட்மன்
“ஒரு புத்தகம் எழுத அரைவாசி நூல் நிலையத்திற்கு மேல்
படிக்க வேண்டும்”.

-    ஜான்ஸன்