பொருளாதார வளர்ச்சி தேசத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது.அதற்குச் சிறந்த பண மேலாண்மையும்,சரியான முதலீடும் நிச்சயமாக நாட்டின் பொருளாதாரத்தை நல்ல வளர்ச்சிக்குக் கொண்டு செல்லும்.அந்த வகையில் தான் வார வாரம் ஞாயிறு அன்று பங்குச் சந்தை குறித்த தகவல்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த எளிமையான முறையில் பதிவுகளை பகிர்ந்து வருகிறேன்.தவறாமல் படியுங்கள்.எனக்கும் பங்குச் சந்தை பற்றி ஒன்றுமே தெரியாது அதைப் பற்றி இப்போது தான் சிறிது சிறிதாக கற்றுக் கொண்டு வருகிறேன்.எனக்கு தெரிந்ததை தங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சியாக உள்ளது நட்பூக்களே..!!
கடந்த பதிவுகள்;
1.ஏன் தேவை பங்குச் சந்தையில் முதலீடு..??
2.பங்குச் சந்தை வர்த்தகம்.
3.பங்குச் சந்தை வர்த்தகம் தொடர்ச்சி.
கடந்த பதிவுகளை படிக்காதவர்களும் படிக்கலாம்.இன்று எல்லாமே வணிகமாக மாறிவிட்டது.அதைக் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் அனைவருமே ஏமாந்து வருகின்றோம்.சரி வாங்க பங்குச் சந்தைக்கு போகலாம்.
தனி நபர் நிறுவனம் (proprietorship concern) :
ஒரே ஒருவர், தனது கைப்பணத்தை (அல்லது தான் கடன் வாங்கிய பணத்தைப்) போட்டு ஒரு நிறுவனத்தைத் துவங்கி, நடத்திவருகிறார் என்று கொள்வோம், அந்நிறுவனத்தின் லாபமோ நட்டமோ அவரை மட்டுமே சேர்ந்தது. அந்நிறுவனத்தின் முழுப்பொறுப்பும் அவரையே சாரும். இத்தகைய நிறுவனத்தை ' தனி நபர் நிறுவனம் ' (proprietorship concern) என்று அழைப்போம். அந்நிறுவனதாரர் 'உரிமையாளர்' (proprietor) என்று அழைக்கப்படுவார்.
கூட்டு நிறுவனம் (Partnership company) :
ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் கூட்டுச் சேர்ந்து நடத்தும் ஸ்தாபனம், கூட்டு நிறுவனமாகும் (Partnership company). இதன் உரிமைதாரர்கள் கூட்டாளிகள்(partners) எனப்படுவர். லாபம், நட்டம் எதுவாயினும், சமமாகக் கூட்டாளிகளுக்குள் பிரித்துக்கொள்ள வேண்டும். நிறுவன நடவடிக்கைகளுக்கு, அனைவரும் பொறுப்பாவார்கள். நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகளால், ஏதேனும் கடன் ஏற்பட்டாலோ, நிறுவனம் திவாலானாலோ, கூட்டாளிகளின் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் சொத்தைக்கூட பறிமுதல் செய்ய, கடன் கொடுத்தவருக்கு உரிமை உண்டு.
வரையறுக்கப்பட்ட (பங்கு) நிறுவனம். (Limited Company) :
மேற்கூறியவாறு ஒரு கூட்டு நிறுவனம் செயல் படும்பொழுது, தனிப்பட்ட முறையில் கூட்டாளிகள் அந்நிறுவனத்தின் கடன் சுமைக்குப் பொறுப்பாவார்கள் என்று கண்டோம். ஒரு நிறுவனம் விரிவாக்கப் படும்பொழுதோ, பெரிய அளவில் தொடங்கப்படும்பொழுதோ, இத்தகைய பொறுப்புக்களைத் தவிர்க்கவும், மற்றும் பல நிர்வாக வசதிகளுக்காகவும் வரையறுக்கப்பட்ட பங்கு நிறுவனங்கள் தொடங்கப் படுகின்றன. அதாவது கம்பெனியின் கடனுக்கு, பங்குதாரர்கள் பொறுப்பாக மாட்டார்கள். ஏனெனில், கம்பெனி என்பது ஒரு தனி நபராகக் (பங்குதாரர்களிடம் இருந்து வேறுபட்ட) கருதப்படுகிறது. இவற்றை மேலும் இரண்டு விதமாகப் பகுக்கலாம். அவையாவன:
தனியார் பங்கு நிறுவனம் (Private Limited Company) :
அனேகமாக கூட்டு நிறுவனங்கள் விரிவு செய்யப்படும்பொழுது, இவ்வகையான தனியார் நிறுவனங்களாக மாற்றப் படுகின்றன. இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் அநேகமாக, நண்பர்களாகவோ, உறவினர்களாகவோதான் இருப்பர். பொதுமக்களுக்கு பங்குகளை வினியோகம் செய்வதிலிருந்து, தனியார் பங்கு நிறுவனங்கள் தடுக்கப் பட்டுள்ளன. எனினும், தமது முதலீட்டின் அளவு வரை மட்டுமே, பங்குதாரர்கள் கம்பெனியின், கடன்களுக்குப் பொறுப்புடையவர்கள் ஆவர்.

பொதுப் பங்கு நிறுவனம் (Public Limited Company) :
தனியார் பங்கு நிறுவனங்கள் காலப்போக்கில் மிகவும் விரிவாக்கம் பெறும்பொழுது அல்லது ஏற்கனவே சந்தையில் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனங்கள் ஒரு கிளை/புதிய கம்பெனி துவக்கும்பொழுது, பொதுப் பங்கு நிறுவனம் உருவாகிறது. இத்தகைய நிறுவனங்கள் பல சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, தமது நிறுவனத்தின் பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றன. வேறு விதமாகச் சொல்ல வேண்டுமாயின், பொதுமக்கள் பங்குதாரர்களாக, மூலதனத்திற்கும், நிறுவனத்தின் லாப நட்டத்திற்கும் உரியவர்களாக உள்ள நிறுவனமே பொதுப்பங்கு நிறுவனம் ஆகும்..
அடுத்த வாரம் பங்குச் சந்தையின் வகைகள் பற்றி பார்க்கலாம்.தொடர்ந்து இணைந்திருங்கள்.நன்றிகள்..!!