என்று பாரதியாரால் போற்றப்பட்ட தமிழ்மொழி மனிதன் முதன் முதலில் பேசிய பழம்பெரும் மொழிகளில் ஒன்றாகும்.
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்க ளோடும் பொங்குகடல் இவற்றோடும் பிறந்ததமிழ் என்று பாரதிதாசன்
பாடுகின்றாரென்றால், அதற்குத் தமிழ் மிகத் தொன்மையானது என்ற கருத்து, பரவலாக மேலோங்கி இருப்பதே காரணம்.
அகச் சான்றுகள்:
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றிய மூத்த குடி.
என்று புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியரும்,
சேர சோழப் பாண்டியர் போலப் படைப்புக்காலந்தொட்டு
மேம்பட்டு வரும் குடி.
எனப் பரிமேலழகரும் கூறுவன தமிழ்க்குடி மக்களின் தொன்மையைப் பறைசாற்றும். இவ்வாறு பல சான்றோர்கள் தமிழின் தொன்மையை வலியுறுத்தி வருகின்றனர்.தொன்மைக் காலத்து வாழ்ந்த தொல்காப்பியரே தமிழைத் ‘தொன் மொழி’ எனக் கூறுவதை நோக்குங்கால் தமிழின் பழமையை நாம் உணர முடிகிறது.
தொன்மைச் சான்றுகள்:
உலகத் தோற்றத்தின் போது. சிவபெருமானின் உடுக்கையிலிருந்து ஒரு புறம் தமிழும். மறுபுறம் வடமொழியும் தோன்றின என்று தொன்மத்தார் கூறுவார். இச்செய்தியினையே,
ஆதிசிவன் பெற்று விட்டான் – என்னை
என்று தமிழன்னை கூறுவதாக பாரதியார் வழிமொழிகின்றார்.
வடமொழிச்சான்று:
ஒரு காலத்தில் இந்தியாவின் இலக்கிய மொழிகளாக இருந்தவை தென்தமிழும், வடமொழியாகிய சமஸ்கிருமும் ஆகிய இரண்டு மட்டுமே.
கி.மு.ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன் ஆக்கப்பட்ட வால்மீகி இராமாயணத்தில், வானரவீரர்களைப் பார்த்து சுக்ரீவன்,"பொன்னும் முத்துமுடைய பாண்டியனது பொன்மயான கபாடத்தை பார்ப்பீர்கள்" என்று கூறுவதும், அனுமன் அசோகவனத்தில் சீதையிடம் அரக்கர்க்குத் தெரிந்த வட மொழியை விடுத்து மதுரமான தமிழில் உரையாடினான் எனக் கூறுவதும் இராமாயண செல்வாக்குப் பெற்ற மொழி தமிழ் என்பதனைத் தெளிவிக்கின்றன.
திராவிட மொழியிற் சான்று:
திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழி தமிழ் என்றும்,
தொல் திராவிட வடிவங்கள் பெரும்பாலும் தமிழோடு ஒத்துள்ளன
என்றும், மொழியியலாளர் கருதுவர்.
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத்து உதித்தெழுந்தே ஒன்றுபல ஆய்டினும்.
என்ற பேராசிரியர் சுந்நரம்பிள்ளையின் கூற்று திராவிட மொழிகளின் தாய் தமிழே என வலியுறுத்தும்.
ஒரு மொழிக் குடும்பத்தின் தாயாகவும், பரந்துபட்ட இந்தியாவின் அடிப்படை மொழியாகவும் தமிழ் விளங்குதலால், அது தொன்மை
வாய்ந்த மொழி என்பதில் ஐயமில்லை.
தொல்பொருள் ஆய்வுச்சான்று:
சிந்து சமவெளியில் புதையுண்ட மொகஞ்சதாரா, அரப்பா
நகரங்களில் தமிழ் முத்திரைகள் காணப்படுகின்றன என
ஈராசு பாதிரியார் கருதுகிறார்.
இந்தியாவின் முதன்மொழி தமிழ் என்பதும் , அது காலப்போக்கில்
மேற்கு ஆசிய நாகரிக நாடுகளிடையே பரவி மாற்றமுற்றது என்பதும் தெளிவாகிறன.
புவியியற் சான்று:
"இலெமூரியாவே பழைய தமிழகம்" என்பார்,
மாணிக்கவேலுநாயக்கர், தண்டகாரிணியத்துக்கும்
கடலுக்குமிடையே ஆதி மாந்தர் தோற்றம் உண்டாயிற்று என்றும்
பி.டி.சீனிவாச ஐயங்கார் கூறுவதிலிருந்து, தமிழினத்தின் தொன்மையையும் தமிழின் தொன்மையும் உணர முடிகிறது. எனவே தமிழ் நாகரிகம், ஏனைய நாகரிகங்களினும் தொன்மையானது என்பதும்,
அத்தொல் பழங்காலத்திலேயே தமிழ் செந்தமிழ், கொடுந்தமிழ் என
இரு பிரிவாகப் பரந்து விரிந்து இருந்தது என்பதும் புலனாகின்றன.
கல்வெட்டுச் சான்று:
கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்து செதுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் தமிழின் வரிவடிவம் காணப்படுகிறது.இப்பழைமை எழுத்து முறைக்கு ‘தென் பிராமி’ என்று கூறி, வட மொழிக்கு உரியதாக்க முனைந்தனர். இப்போது ஆய்வு வல்லுநர்கள் பிராமி எழுத்துமுறையை தமிழருடையது எனவே கருதுகின்றனர்.இதனால் தமிழ்நாடு
தொல்பொருள் ஆராய்ச்சித் துறையும் தென் பிராமி என்றதை
இன்று"தமிழி" என்றே குறிப்பிடுகின்றது. 3000ஆண்டுகட்கு முன்னைய தொல்காப்பியத்தில் வரிவடிவங்கள்
செய்திகள் விரிவாக இருப்பதும், சிந்து சமவெளியின் முத்திரை
எழுத்து, தமிழ் எழுத்துக்களே என ஈராசு பாதிரியார் தெரிவிப்பதும்,
தமிழ்மொழியின் வரிவடிவ எழுத்துத் தொன்மையை
நிலை நாட்டுவன ஆகும்.
அயல்நாட்டுச் சான்று:
சீனம் மலேசியா சாவா போன்ற கீழை நாடுகளோடு தமிழர்
பழங்காலத்தில் கடல்வழித் தொடர்பு கொண்டிருந்தனர்.சுமேரிய
மொழிக்கு தமிழோடு தொடர்புடையது. ஐரோப்பிய மொழிக்கும்
தமிழுக்கும் பழைய தொடர்பு உண்டு.இவ்வாறு எல்லா மொழிக்கும், அடிப்படையில் தமிழோடு தொடர்பு காணப்படுகின்றது என்பார்
ந.சி.கந்தையாபிள்ளை.
சிறப்பு:
மாந்த நாகரிக வளர்ச்சியின் முதற்படி, தமிழ் என்றும், அஃது
உலகின் முதற்றாய் மொழி என்றும் தமிழின் தொன்மையைப்
பற்றிக் கூறுவனவெல்லாம், ஒருவகையில் தமிழின்
தனிச்சிறப்பை பறைசாற்றுவனவேயாகும்.
இனிமை:
எல்லா இனங்களும் சீர்மை பெற்றுத் திகழுமாறு தமிழ் என்னும் சொல்லே இனிமை எனப் பொருளுடையது எனபர்.
இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்
என்று பிங்கல நிகண்டு இயம்பும்.
பாராட்டு:
தன்னேரி லாத தமிழ்
என்றும்,ஒண்டமிழ், வான்றமிழ், தேன்றமிழ், பைந்தமிழ் என்றும் பலவாறு பாராட்டும் தமிழ்ப் புலவர்களேயன்றிப் பிற நாட்டாரும் நற்றமிழின் ஏற்றத்தைப் போற்றிப் பரவியுள்ளனர்.
தமிழே மிகவும் பண்பட்ட மொழி
என்றும் கூறுவர்.
வழக்கிறாமை:
உலகின் மிகப் பழைய மொழிகளில் இன்றும் பேச்சு வழக்கில் நின்று நிலவிவரும் மொழி, தமிழ் ஒன்றே.இலக்கிய வழக்கு பேச்சு வழக்கு என்னும் இருவகை வழக்கிலும் தொடர்ந்து பரவலாக நிலைப்பெற்று வாழ்ந்து வருகிறது.
சொல்வளம்:
எண்ணற்ற வேர்ச் சொற்களால் புதிய புதிய சொற்களை ஆக்கிக்
கொள்ளும் திறன் படைத்தது, தமிழ்.
எண்கள்:
ஒன்று, இரண்டு எனப் பத்துவரை எண்ணும் பதின்கூற்று
எண்மானம் தமிழருடையது.
பதின்கூற்று எண்மானம் உலகுக்குத் தமிழ் ஈந்த தனிக்கொடை.
எழுத்து-வகையும் வரிசையும்
தமிழின் எழுத்து வகைப்படும் வரிசை முறையும், மொழியியலாரையும் வியக்க வைப்பன.ஆங்கிலம் போன்ற ஆரிய மொழிகளிலும், பிறமொழிகளிலும் இச்சிறப்புகளைக் காண இயலாது.
இலக்கிய இலக்கணங்கள் :
திருக்குறள் முதலிய நீதி நூல்களும் உலக அறிஞர்களால்
முதன்மை நூலாகப் போற்றப்படுகிறது.
கம்பனைப் போல் வள்ளுவன்போல் இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை.
என்ற பாரதியின் மொழி பொய்யன்று; மெய்ம்மையானது.
எழுத்து வடிவம்:
வட்டெழுத்து, கண்ணெழுத்து, கோல் எழுத்து,கிரந்த எழுத்து என்று பல்வேறு வடிவங்களைத் தமிழ் அவ்வப்போது பெற்றுத் திகழ்கிறது.தமிழ் ஏறத்தாழ 5000 ஆண்டுகட்கு முன்பேயே வரிவடிவம்
பெற்றுவிட்டது.
தனித்தமிழ்:
தமிழ், பிறமொழிக் கலப்பின்றி இயங்கும் திறனுடையது.தனித்தமிழ்ச் சொற்களையும், தனக்கே உரிய தொடர் அமைப்புகளையும் பெற்றுப் பீடுநடைபோட்டு வரும் தமிழில், வெண்பா ஆசிரியம் போன்ற செய்யுள் வடிவங்களும் தமிழுக்கே உரியனவாய் உள்ளன.
தமிழே உலகின் முதற்றாய் மொழி என்பதற்குக் கலப்பற்ற தனித்
தமிழே சான்றாகிறது.
இவ்வாறு தமிழ் மொழி மிகவும் தொன்மையையும், சிறப்புகளையும் பெற்று திகழ்கிறது.