ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை... !!



வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை.

இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின்
பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது:

* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு.

அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். 




அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக
போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.


* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத வேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள்.

எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண்
பரிசோதனை செய்வது நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது.

இது முற்றிலும் தவறு.

மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு
எச்சரிக்கை சின்னம்.

ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர
நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.



* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும்.

அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும்.

அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும்.

ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து
திரும்புகின்றனர்.

இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

* கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது

சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது.

அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர்.

காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில்
இருந்து கண்களை பாதுகாக்கும்.

வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின்
வேர்கள் அதிகம் வெளி வராது.

இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை
அதிகம் "அப்சார்ப்' செய்கிறது.

விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.


* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது.

மொபைல் போன் "சிக்னல்' இல்லாத
இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு' இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.

மொத்தத்தில்விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து

நம்மை பாதுகாக்கும்.

Thank info

Puthiya Thalaimurai TV

இந்த நல்ல விஷயத்தை பலருடன் பகிரலாமே!!!!



சனி, 13 பிப்ரவரி, 2016

விவசாயிகள் உருவான கதை..






ஒரு கத சொல்லுவாங்க ஊர்ல.
எமலோகம் இருக்கே எமலோகம் அங்க பாவ புண்ணியக் கணக்குப் பாப்பாங்களாம்.பாவம் பண்ணுன ஆளுக இடபக்கம் நிப்பாகளாம்; புண்ணியம் பண்ணுன ஆளுக வல பக்கம் நிப்பகளாம்.
புண்ணியம் செஞ்சவக சொர்க்கத்துகுப் போங்கன்னு அனுப்பிச்சிருவாகளாம்; ஊர்வசி ரம்பையெல்லாம் வருவாகளாம் ஒத்தாசைக்கு.
பாவம் செஞ்ச ஆளுகள எமதர்மன் ஆளுக ரெண்டு கையும் புடிச்சி ‘வாங்கய்யா வாங்க’ன்னு கூட்டிட்டுப் போயிக் கொதிக்கற எண்ணெய்க் கொப்பரையில வீசுவாகளாம்;பாம்பு புத்துக்குள்ள படுக்கப் போடுவாகளாம்;எரியற தீயில தலைகீழாக் கட்டித் தொங்கவிடுவாகளாம்.
இப்படி எமதர்மன் ‘நல்லாட்சி’ நடத்தி வந்த காலத்துல ஒரு நாளு பெருங்கூத்தாகிப் போச்சாம் எமலோகத்துல.
அந்த வருசம் ஏடு போட்டுப் பாத்ததுல புண்ணியம் பண்ணுனவக ஏழெட்டுப் பேர்தானாம். பாவம் பண்ணுனவக பட்டியல் எடுத்து பாத்தா அது போகுதாம் லட்சக்கணக்குல.
எமதருமருக்கு தல சுத்துது;கூடவே கிரீடமும் சேந்து சுத்துது.
கொப்பர கட்டுபுடியாகுமா எண்ணெ விக்கிற வெலையில?
அத்தன பாம்புகளுக்கு எங்க போறது? நாகலோகத்துல வேற நாலுமாசமாப் பாலுக்கு வெல கூட்டச் சொல்லிப் பசுமடுக வேல நிறுத்தமாம்.
புத்திக்கு ஒண்ணும் எட்டல; யாரை யோசனை கேக்கறது?
சிவபெருமானைக் கேக்கலாம்ன்னா மார்க்கண்டேயன் விவகாரத்துல ஏற்பட்ட மனதாங்கல் இன்னும் தீரல.
விஷ்ணுவப் போய்க்கேட்டு வரலாம்னா நம்ம எருமைக்குப் பாற்கடல் நீந்திப் பழக்கம் இல்ல. பிரம்மாவப் போய்க் கேக்கலாம்னா அந்தாளு எந்த மூஞ்சிய எங்க வச்சிருப்பாருன்னே தெரியமாட்டேங்குது.
ஒண்ணும் புடிபடல எமதருமருக்கு.
பாசக்கயித்துல அவரா முடிச்சிப் போட்டு அவரா அவுத்துக்கிட்டிருக்காரு ரொம்ப நேரமா.
திடீர்னு தம்புராவோட ஒரு பாட்டுக் கேக்குது. நிமிந்து பாத்தா வைகுண்டத்துல வடை சாப்பிட்டுட்டுக் கைலாசத்துக்குக் காப்பி சாப்பிடப் போய்க்கிட்டுருக்காரு நாரதரு.
‘வாய்யா வாய்யா’ன்னாரு எமதர்மரு,
வந்தாரு நாரதரு.
“எனக்கொரு பிரச்சன” இழுத்தாரு எருமைகாரரு.
“என்ன? கள்ளக் கணக்கு எழுதிக் காசு சம்பாரிச்சு இந்திரலோக வங்கியில போட்டு ஏமாத்துறானா சித்ரகுப்தன்?”
“அட அதில்ல நாரதரே. பாவகணக்குப் பண்ணுனவக எண்ணிக்கை கூடிப்போச்சு; எடமில்ல நரகத்துல; என்ன பண்றதுன்னு யோசிக்கறேன்”.
“அட நீங்க ஒண்ணு… இவுகள நரகத்துல தள்ளணும் அவ்வுளவுதானே? நான் பறந்து பறந்து பாத்த அளவுல பூலோகத்துல இந்தியா இந்தியான்னு ஒரு தேசம் இருக்கு. இவுகளப் பூரா அங்க வெவசாயம் பண்ண அனுப்பி வச்சீங்கன்னு வச்சீக்குங்க வேலை முடுஞ்சது.”
“ஆகா ஒம்மக் கட்டித் தழுவணும் போல இருக்கு”ன்னு எந்திருச்சாரு எமதருமரு.
தம்புராவத் தவற விட்டுட்டு ஓடி ஒளிஞ்சு போனாரு நாரதரு.
நாரதர் சொன்ன யோசனப்படி இந்தியாவுல விவசாயம் பண்ண நரகத்துல இருந்து அன்னைக்கு அனுப்பிவைக்க ஆரம்பிச்சது இன்னைக்கு வரைக்கும்
நின்னபாடில்ல.
                            (மூன்றாம் உலகப் போர் - வைரமுத்து)

ஆரம்பத்தில் உதட்டில் புன்னகையை தவழ வைத்த வரிகள் இறுதியில் கண்களை கலங்க வைத்தது.




வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

உலக வானொலி தினம்..!!






நவீன உலகில் டிவி,மொபைல்,ஸ்மார்ட்போன்.ஐ.பேட் மற்றும் இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு சாதனங்கள் அதிகரித்துவிட்ட போதிலும் வெகுஜன ஊடகத்தின் முன்னோடியாக திகழ்வது வானொலி தான்.

இத்தகைய அரிய கண்டுப்பிடிப்பை இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற இத்தாலியைச் சேர்ந்த குலீல்மோ மார்க்கோனி என்பவர் கண்டறிந்தார்.


தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு மிகவும் அளப்பரியதாகும்.இன்று உலகம் முழுவதும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் உள்ளன.

முந்தைய காலங்களில் பேரிடர் குறித்த தகவல்கள், போர் அறிவிப்புகள் போன்றவற்றை விரைந்து அளித்தது வானொலி என்றால் அது மிகையாகாது.

அத்தகைய வானொலியின் சிறப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்தும் விதமாக 2012-ம் ஆண்டு ஐ.நாவால் பிப்ரவரி 13-ம் தேதி உலக வானொலி தினம் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.


இத்தினத்தின் நோக்கம் என்னவென்றால் குறைந்த செலவில் தகவல்களை பரப்பி ஒலிபரப்பாளர்களிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தி வானொலி வலையமைப்புக்களை ஊக்கப்படுத்துவதே ஆகும்.

வியாழன், 11 பிப்ரவரி, 2016

ஆண்ட்ராய்ட் போனில் தமிழ் தட்டச்சு

                   ’யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்’ - திருமூலர்

எங்கள் வீட்டில் இருப்பது ‘டெஸ்க் டாப்’ கம்ப்யூட்டர். எனவே அதில் தமிழில் தட்டச்சு செய்ய NHM Writer 1.5.1.1 Beta என்ற தமிழ் எழுதியைப் பயன்படுத்தி வருகிறேன். இதிலுள்ள English - Tamil Phonetic முறை எனக்கு எளிதாகவும் இருக்கிறது. ஸ்மார்ட் போன் (ஆண்ட்ராய்ட்) வாங்கிய பிறகு, அதில் தமிழில் தட்டச்சு செய்ய, எந்த தமிழ் எழுதி நல்லது என்று தெரியாமல் இருந்தேன். 

தமிழ் எழுதிகள்:

இது விஷயமாக கூகிளில் தேடியதில், பல்வேறு தமிழ் எழுதிகளைக் காண முடிந்தது. 

Ezhuthani – Tamil Keyboard
Tamil Unicode Keyboard free
Tamil Keyboard
Google Handwriting Input
PaniniKeypad Tamil IME
Sellinam
Tamil Writer
Tamil Pride Tamil Editor
Tanglish – Tamil Editor
Tamil Unicode Font – Donated
Tamil Keyboard Unicode
Type Tamil Offline
Tamil Wrier
Google Indic Keyboard
Types In Tamil
Indic Keyboard

இவற்றைப் பற்றி, நமது வலைப்பதிவு நண்பர்களிடம் விசாரித்ததில், ஒவ்வொருவரும் அவரவர் பயன்படுத்தும் தமிழ் எழுதிகளைத்  தெரிவித்தனர்.

செல்லினம் (Sellinam 4.0.7)


ஒருமுறை புதுக்கோட்டையில் ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தபோது ‘செல்லினம்’ (Sellinam)  பற்றி சொன்னார். நான் உடனே கூகிள் தேடலில் போய் Sellinam 2.0.1 என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து கொண்டேன். அது அவ்வளவாக திருப்தி இல்லாத படியினால், மீண்டும் வேறொரு தமிழ் எழுதிக்குப் போனேன். அதுவும் சரிப்பட்டு வராததால், அண்மையில், திண்டுக்கல் தனபாலன் அவர்களிடம் ஆலோசனை கேட்டேன். அவர் செல்போனில், செட்டிங்ஸ் சென்று ஆப்ஸில் செல்லினத்தை (புதியது) தரவிறக்கம் செய்து கொள்ளச் சொன்னார். அவ்வாறே செய்தேன். 


இப்போது எனது ஆண்ட்ராய்டு செல்போனில் இருப்பது Sellinam 4.0.7 என்ற மென்பொருள் ஆகும். இது நன்றாகவே செயல்படுகிறது. இதில் தமிழ் 99 மற்றும் முரசு அஞ்சல் என்று இரு விசைப்பலகைகள் (KEY BOARD) உள்ளன. 

தமிழ் 99 - இதில் தமிழிலேயே தட்டச்சு செய்யலாம்
முரசு அஞ்சல் - இதில் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழ் தட்டச்சு செய்யலாம் ( உதாரணம் ammaa > அம்மா)


நான் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு , Phonetic முறையில் தட்டச்சு செய்யும் முரசு அஞ்சல் முறையை பயன்படுத்துகிறேன். இதில் வேண்டும்போது தமிழுக்கும் ஆங்கிலத்திற்குமாக விசைப்பலகையை (KEY BOARD) மாற்றிக் கொள்ளலாம். நான் இப்போது பெரும்பாலும் நேரம் இருக்கும்போது வலைப்பதிவுகளுக்கான தமிழ் கருத்துரைகளையும் மற்ற குறுஞ்செய்திகளையும் (SMS) எனது செல்போன் மூலமாகவே டைப் செய்து அனுப்புகிறேன். மேலும் இந்த செல்லினத்தை ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியவற்றிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


// செல்லினம் என்பது ஒருங்குறியைப் பயன்படுத்தி செல்பேசிகளில் தமிழ் குறுஞ்செய்திகளை அனுப்பும் மென்பொருளாகும்இம்மென்பொருளை மலேசியாவைச்சேர்ந்த முத்து நெடுமாறன் தலைமையிலான முரசு நிறுவனம் உருவாக்கியதுஇதைதைப்பொங்கற் திருநாளான ஜனவரி 152005 முதல் சிங்கப்பூரில் வணிகப் பயன்பாட்டுக்காக வெளியிட்டதுநோக்கியாசாம்சங் போன்ற கருவிகளில் இயங்கிவந்த செல்லினம்பின்னர் ஐபோன்ஐபேடுஆண்டிராய்டில் இயங்கும் கருவிகளுக்கும்அறிமுகப்படுத்தப்பட்டதுதற்போது வரையிலும்ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானோர்இதை பதிவிறக்கி உள்ளனர். //  ( நன்றி https://ta.wikipedia.org/s/1b3v )

செல்லினம் பற்றிய மேலும் அதிக விவரங்களுக்கு: http://sellinam.com/archives/406
             
                                  (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)

 நன்றி திரு.தி. தமிழ் இளங்கோ ஐயா. (  http://tthamizhelango.blogspot.com/2016/02/blog-post_11.html)
இந்த பதிவு என் கல்லூரி தோழிகளுக்கு கட்டாயம் உதவும்.

ஊழல் குறைவான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 76-வது இடம்..!!


உலக நாடுகளின் ஊழல் நிலவரம் குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்னும் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.இதில் அந்த நாடுகளின் ஊழலற்ற நிர்வாகம் ,ஊழலுக்கு எதிரான நடவடிக்கையின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுகிறது.

2015-ம் ஆண்டு இந்த தரவரிசைப் பட்டியல் கணக்கீட்டு 168 நாடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.இதில் 2014-ம் ஆண்டையப் போலவே ஐரோப்பிய நாடான டென்மார்க் ஊழலற்ற நாடாக முதலிடத்தையும்,பின்லாந்துக்கு 2-வது இடமும்,சுவிடனுக்கு 3-வது இடமும் கிடைத்தன.


ஆப்பிரிக்க நாடான சோமாலியாவும்,ஆசியா நாடான வடகொரியாவும் ஊழல் மலிந்த நாடுகள் பட்டியலில் கடைசி 2 இடங்களைப் பிடித்தன.இந்த பட்டியலில்இந்தியாவுக்கு 76-வது இடம் கிடைத்தது.2014-ம் ஆண்டு 85-வது இடத்தில் இருந்த இந்தியா 9 இடங்கள் முன்னேறி இருக்கிறது.


2014-ல் இருந்ததை விட இந்தியாவில் 2015-ல் ஊழல் சற்று குறைந்து காணப்படுகிறது.எனினும் இதில் இந்தியா பெற்றுள்ள மொத்த மதிப்பு 2014-ம் ஆண்டைப் போலவே 100-க்கு 38 ஆக இருக்கிறது.


இது குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் தலைவர் ஜோஸ் உகாஸ் கூறுகையில் ஆசிய நாடுகளில் இந்தியா, இலங்கையைப் பொறுத்தவரை ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தலைவர்கள் அறிவித்த எதிர்ப்புகள் அவ்வளவாக நிறைவேறவில்லை.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2015-ல் 64 நாடுகள் ஊழலை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் கண்டுள்ளன.53 நாடுகள் இதில் பின்தங்கின.மற்ற நாடுகளின் நிலையில் ஏற்ற இறக்கம் எதுவும் இல்லை என்றார். 

Image result for ஊழல்