தைமாத மேகமெனத்
தவழ்ந்தாடும் பூங்கொடியே
கையோடு நீ இணைந்தால்
கற்பனைகள் ஊறுமடி!
முக்காடு நீக்கியுள்ளேன்
முகநிலவைப் பார்த்த பின்பு
எக்காடு வந்தாலும்
ஏக்கமெனக் கில்லையடி!
ம.சன்மதி II-BSC CS Ksrcasw
வின் கண்ட நிலவில்
கணவில் ஒரு பயணம்...!!
நிலையற்ற கால்கள்
நிலவைத் தேடி
ஒரு தேடல்....!!!
உறங்கச் சென்ற விழிகள்... !!
உனைக் காண விளித்தன... !!
சிறு ஒளியில்
ஒரு விளிப்பு...!!!
நிஜத்தில் கனவாய்
கறைந்ததேனோ...!!