வியாழன், 16 ஜூன், 2022

அப்பா

 உனது கரம்பிடித்து செல்லும் .....

ஒவ்வொரு கரடுமுரடான பாதையும்....!
என் வெற்றியின்
மிக பெரிய பாதைதான் அப்பா......!

                                                                Ramya.m 1st B.sc.,CDF    KSRCASW

கல்வியும் இன்று காசானது

 மனிதர்களைப் படிக்க வைத்த ஏடுகளை...! 

இன்று மடிக்கக் கிழிக்கிறார்கள் 

மளிகைப் பொருளுக்கு, 

"கல்வியும் இன்று காசானது"!!!                 A.Sowndarya 1st B.COM  KSRCASW

புதையல்

 *கொள்ளைபோன கொள்ளையன்!*


உன் கருங்கூந்தற்கடலில்
என் விரல் கப்பலென;

முத்துமணிகளைத் தேடி
உன் கண்மணிகளில்
உன் விழியின் வழியில்
வழிமாற;

உன் கன்னக்குழியின்
கடுஞ்சுழலில் மூழ்க;

கண்டேன்,
கல்நெஞ்சையும் கவரும்
சிவந்த செந்தேன் செவ்விதழும்
அதனுள் செறிந்த முத்துமணியையும்;

புதையலைக் கண்ட புத்துணர்வில்
புத்தழகில் புதையுற புதையுற
பிறைநுதழில் மனம் பிறழ்ந்தேன்!
அச்சிறு நுதழில் அச்சிழந்து
சில்லறையாய் சிதறினேன்!
புதையலைத் தேடிய நான்
அவளழகில் 
புதையலானேன்!

- என் ஆருயிர் நண்பனின் 
மணிச்சொற்கள்                            K.T.Mekanthini  - 2nd English KSRCASW

மழை

 விவசாயத்தின் உயிர் ஆதாரம் நீ...

விவசாயிகளின் வாழ்வாதாரம் நீ.....

வனத்தில் வசிக்கும் உயிர்களுக்கு உயிர் கொடுப்பதும் நீ......

நீயே இப்புவியுலகின் பேரழகி .....

இசையில் மகிழ்ச்சி

 மகழிசை கணக்கில் மகிழ்ச்சியோ மாயமல்ல...!!

இசையின் பொருட்டு கரணமாயினும் 
கண்ணே...!
இசையுடன் ஒளியும் வந்தனவோ..!
தொன்றுதொட்டு ஏனோ
சிகரமோ நீயே மண்ணில் துளித்து
மரமாய் தளிர்ந்தே
தளர்ந்தனவோ...!
உன்னால் அசிரமே வீசும் என்னில் மாயமே...!!
என் இசையில் மகிழ்ச்சி இவள்...!


                                                                    Yamini. R 1st CDF KSRCASW