*கொள்ளைபோன கொள்ளையன்!*
உன் கருங்கூந்தற்கடலில்
என் விரல் கப்பலென;
முத்துமணிகளைத் தேடி
உன் கண்மணிகளில்
உன் விழியின் வழியில்
வழிமாற;
உன் கன்னக்குழியின்
கடுஞ்சுழலில் மூழ்க;
கண்டேன்,
கல்நெஞ்சையும் கவரும்
சிவந்த செந்தேன் செவ்விதழும்
அதனுள் செறிந்த முத்துமணியையும்;
புதையலைக் கண்ட புத்துணர்வில்
புத்தழகில் புதையுற புதையுற
பிறைநுதழில் மனம் பிறழ்ந்தேன்!
அச்சிறு நுதழில் அச்சிழந்து
சில்லறையாய் சிதறினேன்!
புதையலைத் தேடிய நான்
அவளழகில்
புதையலானேன்!
- என் ஆருயிர் நண்பனின்
மணிச்சொற்கள் K.T.Mekanthini - 2nd English KSRCASW