திங்கள், 3 பிப்ரவரி, 2020

சிறையில் பிறந்த இலக்கியங்கள்.

திலகர் - கீதை ரகசியம்.
வ.உ.சி - மெய்யறிவு,மனம் போல வாழ்வு.
ராஜேந்ததிர பிரசாத்  - தனது சுயசரிதை.
ஹிட்லர் - மெயின் கேம்ப்.
தாமஸ் பெயின்  - சுதந்திரத்துக்குப் போராட வேண்டும்.
ஒ ஹென்றி   - சிறுகதைகள்..

மலர்களின் இளமைப் பருவம்

அரும்பு
நனை
முகை
மொக்குள்
முகிழ்
மொட்டு

தவிப்பு

சில சமயங்களில்
சிலர்
நம் நலன் கருதியே கூறினாலும்
மனம் ஏற்க மறுக்கின்றது

அம்மா

சுட்டெரித்திடும் சூரியனும் நீ
வளம் தரும் மழையும் நீ
மனதில் விதை விதைத்தவளும் நீ
வாடா மலராக இருப்பதும் நீ
மவுனத்தின் காரணமும் நீ
மகிழ்ச்சியின் காரணமும் நீ
தேவதையின் வடிவமும் நீயே
என் தாயும் நீயே அம்மா

சனி, 1 பிப்ரவரி, 2020

வெற்றிக்கான வழி

வாழ்க்கையில் வேகமாக
முன்னேறவில்லையே என்று
கவலைப்படுவதைவிட
பின் வாங்காமல்
ஒவ்வொரு நாளும் விடா முயற்சியோடும்
நம்பிக்கையோடும் தொடர்ந்து
முன்னோக்கி நடைபோடுவதே
வெற்றிக்கான வழி
ஏனெனில் உலகில் ஒரே நாளில்
உயர்ந்தவர்கள் யாருமில்லை.