சுட்டெரித்திடும் சூரியனும் நீ
வளம் தரும் மழையும் நீ
மனதில் விதை விதைத்தவளும் நீ
வாடா மலராக இருப்பதும் நீ
மவுனத்தின் காரணமும் நீ
மகிழ்ச்சியின் காரணமும் நீ
தேவதையின் வடிவமும் நீயே
என் தாயும் நீயே அம்மா
வாழ்க்கையில் வேகமாக
முன்னேறவில்லையே என்று
கவலைப்படுவதைவிட
பின் வாங்காமல்
ஒவ்வொரு நாளும் விடா முயற்சியோடும்
நம்பிக்கையோடும் தொடர்ந்து
முன்னோக்கி நடைபோடுவதே
வெற்றிக்கான வழி
ஏனெனில் உலகில் ஒரே நாளில்
உயர்ந்தவர்கள் யாருமில்லை.