முரட்டுத் தோள்கள் கருப்பு நிறத்திலே
மலைபோல் திமில் ஏற்றிச்
சிங்கம்போல் பாய்ந்து வரும்
உன்னோடு வாடி வாசலில் நின்று
ஏறுதழுவி விளையாடி
இரும்புக்கரம் கொண்டு அடக்கி
உன்னை வீழ்த்தியதால்
நான் வீரன் ஆகவில்லை காளையே
உன்னைத் தோற்க வைத்தாலும்
வெற்றிபெறச் செய்தாலும்
இந்நாட்டில் சிறந்த வீரன் நீயே
தாயின் உருவத்தைப் பெற்றேன்
தந்தையின் குணத்தைப் பெற்றேன்
தம்பியின் ஆற்றல் பெற்றேன்
ஆசிரியரிடம் அறிவைப் பெற்றேன்
தோழிகளிடம் நட்பைப் பெற்றேன்
இறைவனிடம் அருளைப் பெற்றேன்
இவர்கள் அனைவரிடத்திலும்
தூய அன்பைப் பெற்றேன்
மயில் தோகைவிரித்து நடனம் ஆடியது
மான் காடெங்கும் துள்ளி விளையாடியது
கரடி தேனைச் சேகரித்து வைத்தது
குதிரை அணியாக வலம் வந்தது
குரங்கு தோரணம் கட்டி வைத்தது
முயல் மலர்களைப் பறித்து வந்தது
யானை தண்ணீர் கொண்டு வந்தது
அணில் பழங்கள் சேமித்து வைத்தது
குருவிகள் இனிய குரலில் கச்சேரி செய்தன
பறவைகள் அழைப்பிதழ்களை அனைவருக்கும் கொடுத்தன
இவர்கள் எல்லோரும் இணைந்து
காட்டு ராஜா சிங்கத்தின் பிறந்தநாளைக் கொண்டாடினர்