திங்கள், 16 டிசம்பர், 2019

தேடியது கிடைக்குமா

கண்கள் தேடியபொழுது
பார்வை கிடைக்கவில்லையே
கால்கள் நடக்கும்போது
பாதை தெரியவில்லையே
பேசத் துடித்தபோது
வார்த்தை தோன்றவில்லையே
எண்ணம் மாறிவிட்டது
மனம் மட்டும் மாறவில்லையே

-கன்னிகா, இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்.

கதிரவன்

மலர்கள் பூக்கத் தொடங்கின
சேவல் கூவத் தொடங்கியது
இருள் மறையத் தொடங்கியது
உலகம் விழிக்கத் தொடங்கியது
செங்கதிரவன் வருகிறான்

-கன்னிகா, இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்.

பெண் ஒருத்தி

தேன் வடியும் மலரைச் சூடி
செங்கதிரவனைப் பொட்டாக வைத்து
கார் இருள் மேகங்களைக் கண்களுக்கு மையாகத் தீட்டி
விண்மீனைத் தோடாக அணிந்து
சங்குக்கழுத்தில் முத்துகளைச் சேர்த்து
வானவில்லை வளைக் கரங்களில் பூட்டி
செந்தாமரைபோல் கன்னம் சிவக்கப்
பெண்னொருத்தி வந்தாள்

-கன்னிகா, இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்.

சிவபெருமான்

காலத்தைக் கண்ணில் காட்டியவன்
கதிரவனுக்கே ஒளியைக் கொடுத்தவன்
கங்கையைச் சடைமுடியில் வைத்திருப்பவன்
இதயத்தில் குடிகொண்டவன்
வாழ்க்கையின் அர்த்தத்தைத் தெரிந்தவன்
வானத்தைவிட உயர்ந்தவன்
நெடிய கூந்தலை உடையவன்
நஞ்சினை உண்டு தேவர்களைக் காத்தவன்
நாகத்தை மாலையாகச் சூடியவன்
உமையம்மைக்கு இடது பாகத்தை அளித்தவன்
உள்ளத்தில் சிறந்தவன்
அன்பால் இணைந்தவன்
அறிவில் உலகைவிடப் பெரியவன்
அவரே நம் எம்பெருமான்

செவ்வாய், 10 டிசம்பர், 2019

வல்லவர்கள்

தமிழில் வெண்பா பாடுவதில் புகழ் பெற்றவர்கர் புகழேந்தி
விருத்தம் பாடுவதில் வித்தகர் கம்பர்
அந்தாதி பாடுவதில் உயர்ந்தவர் ஒட்டக்கூத்தர்
வசை பாடுவதில் வல்லவர் காளமேகப்புலவர்