பணம் இருந்தால் தூரத்து சொந்தம் கூட நெருங்கிய சொந்தம் ஆகும். பணம் இல்லையென்றால் நெருங்கிய சொந்தம் கூட தூரம் ஆகிவிடும். சொந்ததிர்கே உதவ மறுக்கும் இந்த சூழ்நிலையில் யாரென்று தெரியாத கேரளத்து மக்களுக்கு உதவிய சிறு பிள்ளை நிச்சயம் பாராட்ட படவேண்டியவர் தான். தான் சிறுக சிறுக சைக்கிள் வாங்க சேமித்த பணத்தை கேரளத்து மக்களுக்கு தர வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது அரிது. அந்த மாணவி செய்த உதவிக்காக பிரபல சைக்கிள் நிறுவனம் அவளின் எண்ணத்தை பாராட்டி சைக்கிள் ஒன்றை பரிசாக தந்தனர். அவளின் தொண்டு மேலும் சிறக்கட்டும்.
வியாழன், 6 செப்டம்பர், 2018
உதவி
பணம் இருந்தால் தூரத்து சொந்தம் கூட நெருங்கிய சொந்தம் ஆகும். பணம் இல்லையென்றால் நெருங்கிய சொந்தம் கூட தூரம் ஆகிவிடும். சொந்ததிர்கே உதவ மறுக்கும் இந்த சூழ்நிலையில் யாரென்று தெரியாத கேரளத்து மக்களுக்கு உதவிய சிறு பிள்ளை நிச்சயம் பாராட்ட படவேண்டியவர் தான். தான் சிறுக சிறுக சைக்கிள் வாங்க சேமித்த பணத்தை கேரளத்து மக்களுக்கு தர வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது அரிது. அந்த மாணவி செய்த உதவிக்காக பிரபல சைக்கிள் நிறுவனம் அவளின் எண்ணத்தை பாராட்டி சைக்கிள் ஒன்றை பரிசாக தந்தனர். அவளின் தொண்டு மேலும் சிறக்கட்டும்.
புதன், 5 செப்டம்பர், 2018
ஞாயிறு, 2 செப்டம்பர், 2018
அன்பு
ஆறு வயது சிறுவன் ஒருவன் தன் நான்கு வயது தங்கையைஅழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான். ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மைகளை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து 'எந்த பொம்மை வேண்டும்?' என்றான். அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரனையுடன் கடையின் முதலாளியை பார்த்து "அந்த பொம்மை என்ன விலை?" என்று கேட்டான். அதற்கு சிரித்துக்கொன்டே அந்த முதலாளி, 'உன்னிடம் எவ்வளவு உள்ளது?"என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன் தன விளையாட, சேர்த்து வைத்து இருந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான். இது போதுமா என்று கவலையுடன் கேட்டான். அதற்கு அந்த கடைக்காரர் அவனின் கவலையான முகத்தை பார்த்து கொன்டே எனக்கு நான்கு சிப்பிகள் போதும் என்றார். சிறுவன் மகிழ்யோடு தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்து கொண்டு சென்றான். இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த அந்த கடையின் வேலையாள் முதலாளியிடம். அய்யா ஒன்றுக்கு உதவாத சிப்பிகளை வாங்கிக்கொண்டு விலை உயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டீர்கள் என்றான். அதற்கு அந்த முதலாளி அந்த சிறுவனுக்கு பணம் கொடுத்தால் தான் பொம்மை கிடைக்கும் என்று புரியாத வயது. அவனுக்கு அந்த சிப்பிகள் தன் உயர்ந்தவை. நாம் பணம் கேட்டால்வவன் எண்ணத்தில் பணம் தன உயர்ந்தது என்ற மாற்றம் வந்து விடும் அதை தடுத்து விட்டேன். என்றோ ஒரு நாள் அவன் பெரியவன் ஆகி இந்த சம்பவங்களை நினைத்து பார்க்கையில் இந்த உலகம் நல்லவர்கலால் ஆனது என்ற நல்ல எண்ணம் அவன் மனதில் தோன்றும். ஆகையால் அவன் எல்லோரிடமும் அன்பு காட்ட தொடங்குவார். உலகம் அன்பினால் கட்டமைக்கப்பட வேண்டும் என்றார். அன்பு என்ற ஒரு வார்த்தையில் தான் இன்னும் இந்த உலகமும் உயிரங்களும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.
வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018
உளறல்களுக்கு பேச்சு வடிவம் கிடைத்த மேடை
எங்க அம்மாவுக்கும் எனக்கும் உள்ள உறவு தொப்புள்கொடி உறவு
திருப்பூர் குமரனுக்கும் இந்த தேசத்துக்கும் உள்ள உறவு தேசியக்கொடி உறவு.
கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள உறவு தாலிக்கொடி உறவு.
இந்த மாதிரி எந்த ஒரு இணைப்பும் இல்லாமல் நண்பர்களிடையே மலர்ந்து மணம் வீசுகின்ற உறவு தான் நட்பு எனும் நேசக்கொடி உறவு.
இந்த வரிகளை என் வாழ்வில் எந்நாளும் மறக்க மாட்டேன் .
ஏனென்றால்
முதன்முதலாய்
தொலைக்காட்சி கேமாராவைப் பார்க்கிறேன்.
சந்தித்திராத கூட்டத்தை சந்திக்கிறேன்.
பெற்றோரை நீங்கள் பேசுவதைப் பார்க்க அழைத்து வாருங்கள் என்று சொல்லி கொடுக்கப்பட்ட சீட்டு இரண்டு கைப்பையிலே கண்ணுறங்குகிறது.
எட்டாம் வகுப்பு பாப்பா என்ன பேசப் போகுது என பார்க்கும் பெருங்கூட்டம்.
பேச்சாளர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் ஒருஙங்கிணைப்பாளர் வாசிக்க என் பெயரை மட்டும் காணவில்லை.
அழுகை கலந்த பயம்.
எல்லா பெயரும் சொல்லி முடித்த பிறகு மேடையில் இருக்கின்ற பேச்சாளர்களின் பெயரையெல்லாம் சொல்லிவிட்டேன்.
இந்த மேடையில் ஒரு கத்தி அமர்ந்திக்கிறது என்று சொல்லி என்னை அறிமுகம் செய்தார்.
இப்படியெல்லாம் சொல்லுகிறாரே திக்காமல் ஒழுங்காக பேசி முடிப்போமா எனும் பயம் ஆழ்மனதில்...
பேசும் போது லியோனி ஐயாவிடம்
உங்களுக்கு எதாவது கஷ்டம் னா அதப்போய் உங்க அம்மா அப்பா கிட்ட சொல்லுவீங்களா.
இல்ல உங்க அண்ணன் தம்பி கிட்ட சொல்லுவீங்களா.
சொல்ல முடியாதுங்க ஐயா.
நமக்கு ஏற்படுற கஷ்டத்தையும் நஷ்டத்தையும் பகிர்ந்து கொள்ளக் குடிய உறவு ஒன்னு இந்த உலகத்துல இருக்குணா அது நட்பா மட்டுந்தாங்கயா இருக்க முடியும் என நான் இந்த வரியை முடிக்கும் போது அரங்கமை கையொலியால் நிரம்பிப் போனது.
இதற்குப் பின் லியோனி ஐயா என்னிடம் என்ன பத்தி எப்டிமா இவ்ளோ கரக்டா தெரிஞ்சு வைச்சுருக்க என கேட்ட போது ஒரு குழந்தையோட மனது தாய்க்கு தான் தெரியும்.
தாயோட மனது புள்ளைக்கு தான் தெரியும்.
அது போல ஒரு பேச்சுத் தலைவரோட மனசு இன்னொரு பேச்சாளருக்கு தானங்கய்யா தெரியும் என சொல்லினேன். மீண்டும் அரங்கம் கையொலியால் நிரம்பியது.
எப்படியொ வெற்றிகரமாக பேசி முடித்து விட்டேன் என்னும் மனமகிழ்வோடு
சிறந்த பேச்சாளருக்கான விருதையும் அந்த அரங்கத்தில் வாங்கி விட்டேன்...
முதன்முதலாய் தொலைக்காட்சி காட்டிய கொடுத்த அணுபவம் தற்போது கூட இதை எழுதும் போது அந்த நினைவுகள் ஊசலாடிக் கொண்டே செல்கிறது.
நினைவுகள் மகதாதானவை தான்..
அஞ்சல் குறியீட்டு எண்
அஞ்சல் குறியீட்டு எண் அல்லது பின்கோடு என்பது இந்தியாவில் அஞ்சல்துறைகாக அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் எண் ஆகும். இந்த முறை ஆகஸ்ட் 15 1972ஆம் நடைமுறைக்கு வந்தது. இதில் மொத்தம் ஆறு எண்கள் உள்ளது. அஞ்சலக சுட்டு எண்ணின் முதல் இலக்கம் அஞ்சலகம் அமைந்துள்ள மண்டலம். இரண்டாவது இலக்கம் உள் மண்டலம். மூன்றாவது இலக்கம் மாவட்டத்தையும் குறிக்கிறது. இறுதி மூன்று இலக்கங்கள் குறிப்பிட்ட அஞ்சலகத்தை குறிக்கும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)