ஞாயிறு, 28 ஜனவரி, 2018

ஒரு இலக்கோடு வாழு!

                                                                ஒரு இலக்கோடு வாழு!


இலக்கு இல்லாத வாழ்க்கை புத்தகம் இல்லாத நூலகம் போல், அது நமக்கும் பயணளிக்காது பிறருக்கும் பயணளிக்காது. ஒரு இலக்கை வைப்பது கூட எளியது, ஆனால் அதனை நோக்கியே சோர்வடையாமல் பயணப்படுவது மிகக் கடினம். நம் இலக்குகள் நமக்கு மட்டும் பயண் தரும் வகையில் இருக்கக் கூடாது.நாம் அதனை அடையும்போது நமக்கும் நமது சமூகத்திற்கும் பயணளிக்க வேண்டும. எவன் ஒருவன் தன்னையும் தன்னை சுற்றி இருப்பவர்களையும் பற்றி சிந்திக்கிறானோ?அவனால் தான் ஒரு உபயோகமான வாழ்க்கையை வாழ முடியும். அப்பொழுதான் நாம் இம்மண்னை விட்டு நீங்கினாலும் நாம் செய்த செயல்களால் பிற சந்ததியனரால் பேசப்படும். எல்லோரையும் பற்றி இந்த உலகம் போசும் ஆனால், அவர்களை எந்த வகையில் நம்மை பற்றி பேச வைக்கிறோம் என்பதிலே அற்த்தம் உள்ளது. ஒருவர் நம்மை இகழ்வதற்கும், புகழ்வதற்க்கும் முழூ பொறுப்பு நாம் தான்.

எவை கடினமானவை?

                                எவை கடினமானவை?
1.பணக்காரர்கள் ஏழைகளை கீழே குனிந்து பார்ப்பது கடினம்.

2.வாழ்வில் உழைத்து முன்னேறி, அந்த நிலையில் நிற்ப்பது கடினம்.
3.சக போட்டியாளரின் வெற்றியை மனநிறைவுடன் பாராட்டுவது கடினம்.
4.நமது இலக்கை கவனச்சிரல் இல்லாமல் ஒரு வழியில் செலுத்துவது கடினம்.
5.அடுத்தவரின் குறையை,நிறையை பற்றி பேசாமல் இருப்பது.
6.உண்மையை கண்டறிவது கடினம்.
7.இரக்க மானப்பான்மையுடன் வாழ்வது கடின்னம்.
8.பிறரை தடுக்கி விழும்போது தட்டிக்கொடுத்து மேலே தூக்க முன்வருவது கடினம்.
9.சமூக அவலங்கள் கண்டும் காணாமல் இருப்பது கடினம்

10.மனிதன் பல நேரங்களில் மனிதனாய் இருப்பதே கடினம்.

எமது பேராசிரியர் கூறிய கவரும் பொன்மொழிகள்

                எமது பேராசிரியர் கூறிய  கவரும் பொன்மொழிகள்
1.``ஒரு வேலையை ஒரு முறை சரியாக செய்தால், தவறுதல் என்று ஒன்று நடக்காது”       -முனைவர்.இரா.குணசீலண்.
பின்புரம்; எங்கள் வகுப்பில் மறு தேர்வு, மறு தேர்வு என்று எழுதிக்கொண்டிருந்த வேலையில் மிக பொறுமையாக, விவேகத்துடன் இயா கூறிய அழகான சிந்திக்கத்தக்க பொன்மொழி அது.
2.``எதையும் தொடங்குவது எளிது ஆனால், அதனை தொரட்ந்து செய்வதே கடிறம்”      -முனைவர்.இரா.குணசீலண்

“எந்த ஒரு புதிய திட்டத்தை வகுப்பில் செயல்படுதினால், இந்த பொன்மொழியோடு வாழ்த்துக்கள்  கூறுவர்.அது பல சமயங்களில் எங்களுக்கு ஒத்தும் போகும். பல முறை தொடங்கிய செயல்களை பல காரணங்களால் அப்படியே நிறுத்தி விடுவோம்.
3.``நமது தேடல் பெரிய அளவில் இருக்க வேண்டும்”
                                     -முனைவர்.இரா.குணசீலண்

இளஞர்களகிய நமது தேடல்களை பொறுத்துதான் நம் வாழ்கை அமையும். நமது தேடல்கள் பெறும்பாலான சமயங்களில் முகநூல், யூ-டியுப்களில் மிமிஸை நோக்கியே இருப்பதால் தான் பலரது நேரமும் திறமையும் வீணாகிறது.

உங்களை எது கவரவில்லை?

உங்களை எது கவரவில்லை?
     திரைப்பட வெளியீட்டின் போது, கட்டப்படும் பெரிய பெரிய பதாகைகளும், செய்யப்படும் அபிஷேகங்களும், பல கல்லாரி மாணவர்களின் கட்செவி(what’s up statusநிலை தகவல்களும், என்னை கவரவில்லை. புகழ்பெற்ற நடிகைகள் படங்களுக்கு தடை விழுந்தால், நாடே பொங்கி எழுகிறது. அதற்கு கூடும் கூட்டம் ஏன் ஒரு பொது சமுதாய நலன் கருதி கூடுவதில்லை. மக்களின் இந்த மடிமைத்தனமான எண்ணம் என்னை கவரவில்லை.

``உலகத்திற்க்கே சோறு போட்ட சோழர்களுக்கு வந்த சோதனை” போன்ற மீமிஸ்களை பார்தால் நமக்கு வரவேண்டியது சிரிப்பல்ல சிந்நணை.


உங்களை எது ஊக்குவிக்கும்?

                                                உங்களை எது ஊக்குவிக்கும்?


என்னதான் தன்னம்பிக்கை மேற்கோள்கள் இருந்தாலும், தன்னம்பிக்கை பேச்சாளர்கள் இருந்தாலும், நமது உற்றார் உறவினர்கள் அனைவரும் நம்மை உற்ச்சாகப்படுத்தினாலும், தனி ஒருவன் மனிதல் எது ஒரு தாக்கைத்தை ஏற்படுத்துகிறதோ, அது தான் அவனை முன்னேறச்சொல்லும். அது சில சமயம் நல்ல அனுபவமாக கிடைக்கும், சில சமயம் கசப்பான நினைவுகளாய் அமையும். நம்மை ஒரு வெறியுடன் செயல்பட்டுத்த நம்மை புகழும் மக்களுடன் இருப்பதைக் காட்டிலும் நம்மை இகழுபவைரை நினைவில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில், புகழ்வோரால் நமக்கு அக்கணம் மனநிறைவு ஏற்பட்டு விடும், ஆனால், இகழ்வோரால் ஒவ்வொறு கணமும் ``நான் அத்தனை இழைத்தவள் அல்ல” என்று நிரூபித்து காட்ட தூண்டும்.