ஞாயிறு, 28 ஜனவரி, 2018

இந்த குடியரசு தினத்தில் புதிய காட்ச்சி

                                                இந்த குடியரசு தினத்தில் புதிய காட்ச்சி



இந்த குடியரசு தினத்தில் 27பெண்கள் கொண்ட எல்லை பாதுகாப்பு பணியாளர்கள், இந்திய வரலாற்றில் முதல் முறையாக ``சீமா பவாணி” என்ற பெயர் கொண்டு ROYAL ENFIELD என்ற இரு சக்கர வாகனத்தில் 16 வகையான களரி விளையாட்டுகளை காட்டினார்கள். அதற்க்கு வானொலி செய்தி பரப்பும்(Broadcasting minister)அமைச்சர் ஸ்மிரிட்டி ஈரானி உள்பட பல அமைச்சர்களும் எழுந்து நின்று அவர்களுக்கு மரியாதை செய்தனர்.

ரோமனானிய வியக்கத்தக்க புகைப்படம்

                                ரோமனானிய வியக்கத்தக்க புகைப்படம்



இனையத்தில் செய்தி படிக்கும்போலும் இந்த ஓவியத்திற்க்கு பின்பு உள்ள பாசமான மகளின் கதை நெகிழ வைத்தது. அதாவது சைமன் என்ற வயதான மனிதன் ஒருமுறை சிறை அலுவலரால் உணவின்றி சாக உத்தரவிட்டிருந்தார். ஆனால், அந்த வயதான மனிதரை பார்க்க அவரது மகள் பேரூவிற்க்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. சில நாட்கள் ஆகியும் அவர் முன்பு போலவே இருப்பதை சிறை அலுவலர் கவனித்தார். பின்பு மறைமுகமாக உண்மையை அறிந்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். பேரு(PERO) தனது தந்தைக்கு தாயாக மாறி ஆகாரம் அளித்து பிழைக்கவைத்த்தை அனைத்து அரசவை அதிகாரிகளும் அறிந்து சைமனை அவரது மகளின் பாசத்திற்க்காக விடுவித்தனர்.

புதன், 24 ஜனவரி, 2018

நம்பிக்கை


பசியின்பொழுது உண்டசோறு
தன்தந்தையின் உழைப்பிள்
பாசத்தில்தவித்த பொழுது
தன்தாயின் அரவணைப்பு
கஷ்டம்என்றுவரும்போது
என் நண்பனின் நம்பிக்கை.

சு.சுபத்ரா,
முதலாம் ஆண்டு கணினி அறிவியல் துறை,

தாயும், தந்தையும்


பத்து மாதம் வயிற்றில் சுமப்பவள்  தாய்
வாழ்வுமுழுவதும் தன் நெஞ்சில் சுமப்பவர் தந்தை
அன்பை ஊட்டியவள் தாய்
அறிவை ஊட்டியவர் தந்தை
உலகில் எந்த துன்பமும் நேராமல்
என்னை காத்தவர்கள் நீங்களே
ஒரு நொடி என்னை காணவில்லை 
என்றாலும் வருந்தியவள் தாய்
                                            கவி லாவண்யா     
                                      முதலாம் ஆண்டு வணிகவியல்

தங்கை



தேவையற்ற சேட்டைகள் செய்தாலும்
தேவையான அன்பு கொள்வாள்
என் மேல்… ஒரு தங்கையான
அவளுக்காக திட்டல்கள் ஏற்பேன்!
அவளுக்காக விட்டுக் கொடுப்பேன்!
அவளுக்காக அனைத்தையும் செய்வேன்!ஏன்… 
அவளுக்காக தாயாக மாறுவேன்!
அவளுடைய அன்பு அக்காவாக
எக்காலத்திலும் என்றும்!     
                                  
ர.விஜயா                             
   முதலாம் ஆண்டு வணிகவியல்