ஞாயிறு, 28 ஜனவரி, 2018

நேரம்

                                                                                நேரம்

வாழ்வில் இதை சரியாக பயண்படுத்தியவர் எவரும் தோற்றதில்லை. பெளும்பாலான மக்கள் எனக்கு இது போதவில்லை இது சரிவர வில்லை, என்னிடம் இது இல்லை என்று சாக்குகள் கூறியே காலத்தை களிக்கின்றனர்.
நம்மிடம் இல்லாததை நினைத்து வருந்துவதை காட்டிலும் இருக்கும் பொன்னான நேரங்களை சரியான முறையில் பயண்படுத்தினால், வாழ்க்கை அற்த்தமுல்லனவாய் அமையும். வாழ்வில் எந்த சூழலிலும் பிறறை பார்த்தோ, பின்னே செல்லவும் கூடாது. எல்லாரும் எதோ ஒரு வகையில் தனிதுவம் வாய்ந்தவராக தான் இருக்கிறோம். அதனை புரிந்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். வெற்றி என்பது வியர்வை சிந்தி, உழைத்து, அவமானங்களை சந்தித்து, போராடி, கிடைக்கும்போதுதான் அதனை ஒருவனால் முழுமையாக புரிந்துகொள்ள முடியும். வலிகளில் சிக்கித் தவித்வனுக்கே உழைப்பின் வெற்றியை முழுமையா ருசிக்க முடியும்.

நான் வேண்டாம்!!

                                                                நான் வேண்டாம்!!

இந்த உலகில் நாம் அனைவரும் தோன்றியதற்க்கு நிச்சையமாக ஒரு காரணம் இருக்கும். அதனை நாம் சாவதற்க்கு முன்பு கண்டறிந்து அந்த துறையில் நாம் நம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இருங்கள், வளர்த்த பின்பு, அந்த துறையில் தலைசிறந்த மனிதராக மாறிய பிறகு, நம்மை வளர்த்த இந்த சமூகத்திற்க்கு திரும்ப செய்ய நாம் மறந்து விடுகிறோம். இந்த உலகிற்க்கு வந்துள்ளொம், அதற்க்காக கட்டாயம் எதாவது செய்துவிட்டுதான் செல்லவேண்டும். நாம், நம் வேலை, நம் குடும்பம், என்று வாழ்பவர்கள் தேவையில்லை இந்த தமிழ் சமுதாயத்திற்க்கு. நாம், நமது மக்கள், நமக்கு சஞ்சலம் அதனை சரிசெய்யும் கடம் நாம் அனைவருக்குமே உண்டு என்று நமது ஒற்றுமை மனப்பான்மையுடன் இறங்கி செய்தால் இந்த சமுதாயத்தில் நிறைய பல இன்னல்களுக்கு என்றோ தீர்வு கிடைத்திருக்கும்.

நான் எப்படி எனக்கு பாதுகாப்பு இல்லை என்ற எண்ணத்திலிருந்து வெளிவருவேன்?

நான் எப்படி எனக்கு பாதுகாப்பு இல்லை என்ற எண்ணத்திலிருந்து வெளிவருவேன்?


இந்த நாட்டில் நாம் விரும்போது யாரையும் நாம் அழைத்துவரவில்லை, பாதுகாப்பு என்பது ஒரு வேலி அதற்க்குள் இருக்கும் வரை நாம், நமது குடும்பம், நமது வாழ்க்கை, நமது முன்னேற்றம், என்று பலரால் சுயநலவாதிகலாக்கப்படுவோம். ஆனால், என்று என்னை பார்த்துக்கொள்ள எனக்கு தெரியும்!!!! நான் இந்த உலகில் என்னைபோன்று வாழ வந்தவர்களுக்கும், இந்த சமூதாயத்திற்க்கும் கடமைபட்டிருக்கறேன் என்ற உண்மையை உணர்ந்து செயல்படுவோர் வாழ்வில் எவ்வளவு பெரிய இன்னல்கள் வந்தாலும், துச்சமென மதித்து செல்வர்.

மாற்றம் வேண்டும்!!!

                                                        மாற்றம் வேண்டும்!!!


நாம் எப்போழுது அடுக்கு மொழிகளையும், பொய்யான வாக்குருதிகளையும், கண் கவரும் காட்சிகளையும், பொய்யான பாசங்களையும், பொய்யான மனிர்களையும், தற்காளிக இன்பத்தையும் நம்பாமல் இருக்கிறோமோ அப்பொழுதுதான் நாம் தெளிவாக செயல்பட இயலும். இன்னும் எத்தனை காலம் விடியல் பிறக்கும் என்று காத்துக்கொண்டே இருப்போமோ? இன்னும் எத்தனை காலம் இவர் நம்மை மாற்றுவாரா?அவர் நமக்கு உதவுவாரா இவர் நமக்கு உதவுவாரா?இவர்களின் பார்வை நம் மீது விழாதா? அவர் நமக்கு இரக்கம் காட்ட மாட்டார்? என்று பிறரை எதிர்ப்பார்த்து, எதிர்த்து ஏமாந்து போவதே அதிகமாயிற்று. தன்னம்பிக்கையுடனும், நம்மை நம்மால் மட்டுமே திருத்த இயலும் அந்த ஆற்றல் நமக்குள்ளே புதைந்து கிடக்கிறது என்று கண்டுகொள்கிறோமோ!!! அன்று நல்ல ஒரு சமுதாயம் பிறக்கும்.

தமிழகத்தை பற்றி சில புள்ளி விவரங்கள்

                                தமிழகத்தை பற்றி சில புள்ளி விவரங்கள்
1.இந்தியாவில் மகாராஷ்ராவை இடுத்து பெரிய ஒழுக்கமைவு(economy) கொண்ட மாநிலம்.
2.மனிதவள மேலான்மை பொருளடக்க அட்டவனையில் 6ஆம் இடம் பிடித்துள்ளது தமிழகம்.

3.81%படித்தவர்களை கொண்ட மாநிலம்.
4. ஐ.டி.வணிகத்திலும், BPO சேவைகளிலும் சென்னை மாநகரம் தான் இந்தியாவிலேயே இரண்டாம் இடம் வகிக்கிறது.

5.கமுதி, என்னும் தமிழகத்தை சேர்ந்த பஞ்சாயதில் 648மெகாவாட்ஸ் சோலார் சக்தியுடன் 150,000ஆயிரம் வீடுகளுக்கு வழங்கும் அளவிற்க்கு தயாரிக்கின்றனர்.