ஞாயிறு, 28 ஜனவரி, 2018

ரோமனானிய வியக்கத்தக்க புகைப்படம்

                                ரோமனானிய வியக்கத்தக்க புகைப்படம்



இனையத்தில் செய்தி படிக்கும்போலும் இந்த ஓவியத்திற்க்கு பின்பு உள்ள பாசமான மகளின் கதை நெகிழ வைத்தது. அதாவது சைமன் என்ற வயதான மனிதன் ஒருமுறை சிறை அலுவலரால் உணவின்றி சாக உத்தரவிட்டிருந்தார். ஆனால், அந்த வயதான மனிதரை பார்க்க அவரது மகள் பேரூவிற்க்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. சில நாட்கள் ஆகியும் அவர் முன்பு போலவே இருப்பதை சிறை அலுவலர் கவனித்தார். பின்பு மறைமுகமாக உண்மையை அறிந்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். பேரு(PERO) தனது தந்தைக்கு தாயாக மாறி ஆகாரம் அளித்து பிழைக்கவைத்த்தை அனைத்து அரசவை அதிகாரிகளும் அறிந்து சைமனை அவரது மகளின் பாசத்திற்க்காக விடுவித்தனர்.

புதன், 24 ஜனவரி, 2018

நம்பிக்கை


பசியின்பொழுது உண்டசோறு
தன்தந்தையின் உழைப்பிள்
பாசத்தில்தவித்த பொழுது
தன்தாயின் அரவணைப்பு
கஷ்டம்என்றுவரும்போது
என் நண்பனின் நம்பிக்கை.

சு.சுபத்ரா,
முதலாம் ஆண்டு கணினி அறிவியல் துறை,

தாயும், தந்தையும்


பத்து மாதம் வயிற்றில் சுமப்பவள்  தாய்
வாழ்வுமுழுவதும் தன் நெஞ்சில் சுமப்பவர் தந்தை
அன்பை ஊட்டியவள் தாய்
அறிவை ஊட்டியவர் தந்தை
உலகில் எந்த துன்பமும் நேராமல்
என்னை காத்தவர்கள் நீங்களே
ஒரு நொடி என்னை காணவில்லை 
என்றாலும் வருந்தியவள் தாய்
                                            கவி லாவண்யா     
                                      முதலாம் ஆண்டு வணிகவியல்

தங்கை



தேவையற்ற சேட்டைகள் செய்தாலும்
தேவையான அன்பு கொள்வாள்
என் மேல்… ஒரு தங்கையான
அவளுக்காக திட்டல்கள் ஏற்பேன்!
அவளுக்காக விட்டுக் கொடுப்பேன்!
அவளுக்காக அனைத்தையும் செய்வேன்!ஏன்… 
அவளுக்காக தாயாக மாறுவேன்!
அவளுடைய அன்பு அக்காவாக
எக்காலத்திலும் என்றும்!     
                                  
ர.விஜயா                             
   முதலாம் ஆண்டு வணிகவியல்

அவருக்கான உலகம்..




இங்கு தான் எங்காவது
அவரைப் பார்த்திருப்பீர்கள்...
வாட்டர் பாட்டிலை எடுத்தபடி..
குப்பையைக் கிளறியபடி..
அதில் ஒரு பேப்பரைப் 
படித்துச் சிரித்தபடி
இயலாமையில் அதைக் கிழித்தபடி.. 
வெறிச்சோடி தாடியைக் கோதியபடி
இறுகிப் போன முடியை நீவியபடி..
இங்கு தான் எங்காவது பார்த்திருப்பீர்கள்...
கடந்த மாதமோ
சென்ற வாரமோ
மூன்று நாட்களுக்கு முன்போ
அல்லது இன்று காலையிலோ பார்த்திருப்பீர்கள்...
ஒருவேளை உங்களில் 
யாரேனும் பார்க்கவில்லை என்றால்
உடனே போய்ப் பார்த்துவிடுங்கள்
அவர் இன்னும் சாகவில்லை
நிச்சயமாக அவர் இன்னும் சாகவில்லை...
மற்றுமொன்று
போகும் போது
தனியாகச் செல்லுங்கள்
குழந்தைகளை அழைத்துச் செல்லாதீர்கள்..
குழந்தைகளைக் கண்டதும் 
அவர் மனிதனாக மாறிவிடுவார்...
தயவுசெய்து
அவரை அப்படியே
விட்டுவிட்டு வாருங்கள்..
அது அவருக்கான உலகம்..

ம.லோகேஸ்வரன்
தமிழ் உதவிப் பேராசிரியர்