புதன், 24 ஜனவரி, 2018

மழை


மழை என்பது கடவுளால் உண்டான
நீரினால் ஆன ஐம்பூதங்கள் அடங்கிய ஓர்
சக அற்புதப் படைப்பு மழை!
இவை அனைத்தும் அடங்கிய வருண
தேவரால் பொழியப்பட்ட மழை!
அனைத்து மக்களின் மகிழ்ச்சி மட்டுமல்ல
மக்களின் தாகமும் மழை!
விவசாயிகளின் உயிர் மூச்சும் மழை!
விவசாய மக்களின் பெரும் வீழ்ச்சும் மழை!
மக்களின் துயர்நீங்கா உயிர் பறிப்பதும் மழை!
மக்களின் மகிழ்ச்சியும் மழை! துன்பமும் மழை!
இன்பமும் மழை! சோகமும் மழை!

ரா.ரம்யா
முதலாமாண்டு ஆடை வடிவமைப்புத் துறை

இளைய சமுதாயமே கைகொடுப்பீர்



சிந்தையில் சிந்தித்தால்,
நன் மந்திரம் போதித்தால்,
விந்தையால் விதை விதைத்தால்,
மந்தையில் வளம் நீ படைத்தால் 
சந்தையில் சாதிப்பாய், சரித்திரம் நீ படைப்பாய்,
சாகச உடை உடுப்பாய், சாதியை நீ உடைப்பாய், 
சமரசம் அதை தொடுப்பாய,; சங்கமம் நீ தொகுப்பாய்,
சங்க நூல் வழி மதிப்பாய் - நீ
    தழிழனாய் தடம் பதிப்பாய்.     
                                   
பவித்ரா வெங்கடேசன்              
                    முதலாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்

பூமித்தாய்


பூமித்தாயே! நீ மக்கள் அனைவரையும்
உன் குழந்தையாக நினைத்து அவர்களைத் தாங்கினாய்
ஆனால் அவர்களோ உன்னைத் தாய் என்று பாராமல்
உன்னை அவமதித்தனர் இருந்தும் நீ அவர்களை 
கீழே விழாமல் தாங்கினாய்
இதுதான் தாயின் அன்போ? என்று வியந்தேன்..  

                                          வர்சிதா 
முதலாம் ஆண்டு கணிதவியல் ஆ பிரிவு

அன்பு



நம்வாழ்க்கையில் பல மனிதர்களை சந்திக்கிறோம்
அவர்களிடம் இருந்து நாம்அன்பு. ,  பாசம் போன்ற பல குணங்களைப் பார்க்கிறோம் 
இதை விட ஆயிரம்குணங்களைநம்மிடம்  காட்டுவது நம் பெற்றோர்கள் தான்
இவர்களை விட உலகில் வேறெதுவுமில்லை..
உலகத்தில் பல்வேறு வார்த்தைகள் உள்ளன. 
மிக சிறந்ததாக மதிக்கப்படுவது 
அம்மா என்ற வார்த்தை மட்டுமே 
அம்மாவுக்கு ஈடு வேறு எதுவுமில்லை.

வ..ரூபிகா              
                         முதலாம் ஆண்டு கணிதம் இ

உறவுகள்


உன்னைத் திட்டினாலும் அடித்தாலும் உன்
  நலம் நாடும் தந்தை
நீ அழும் போதெல்லாம் உன்னுடன்
  சேர்ந்து அழும் தாய்
என்றும் உனக்காகவே பேசும் தங்கை
  நீ விலகி விலகிப் போனாலும்
  உன் அன்பைத் தேடும் தம்பி
நீ விழும் போதெல்லாம் தோல்
  கொடுக்கும் தோழிகள்
உன்னை நல்வழிப்படுத்தி 
  உயர வைக்கும் ஆசிரியர்கள்
உன் வெற்றியைக் கண்டு 
  பெருமிதம் கொள்ளும் உறவுகள்
இத்தனை உறவுகள் இருக்கும் போது
உன்னை அழவைக்கும் காதல் எதற்கு..?       
                                
தாமரைச்செல்வி                  
            முதலாம் ஆண்டு கணிதவியல் ஆ பிரிவு