புதன், 6 டிசம்பர், 2017

காலம்

பயன்படுத்தாமலே
இருக்கிறோம்
ஒவ்வொரு
நாளும்
கைக்கே
கிடைக்கின்ற
86400ரூபாயை..

# காலம் #

---மு. நித்யா. 

செவ்வாய், 5 டிசம்பர், 2017

பன்னாட்டுக் கருத்தரங்க அறிவிப்பு


கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில்,வணிகவியல் துறை சார்ப்பில் நடத்தும் முதலாமாண்டு பன்னாட்டுக் கருத்தரங்கம்.
தலைப்பு - "EARNINGS MANAGEMENT PRACTICES IN INDIA"
கருத்தரங்க நாள் - 05.01.2018


கட்டுரை வழங்க இறுதி நாள் - 20.12.2017

தொடர்புக்கு - 8807473229 ( Dr.R.Vasuki - Head, Department of Commerce )

தாங்கள் கட்டுரை வழங்கி கருத்தரங்கை சிறப்பிக்குமாறு 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




சனி, 2 டிசம்பர், 2017

பெண் காமத்துக்கா.? காதலுக்கா.?




India's daughter documentary film..

இன்று தான் இந்த குறும்படத்தை பார்த்தேன்.என்னுள் அடக்க முடியாத அளவுக்கு கோபமும் தாங்கி கொள்ள முடியாத அளவுக்கு கோபம் கலந்த கண்ணீருமே இந்த பதிவுக்கு காரணம்.

பெண்களுக்கும் உணர்வுகள் உண்டு. ஆனால்  அவளை காமப் போதைக்கு ஊறுகாயாகப் பயன்படுத்துவது தனது அம்மாவை விற்றுக் குடிப்பதற்கு சமம். இதற்கு காரணம் யார். ? ஒரு குழந்தை நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னையின் வளர்ப்பு தான் என்று நாம் யாவரும் அறிவோம். ஆனால்  ஒரு குழந்தையின் வளர்ப்புக்கு அன்னையை தவிர இன்னும் சிலருக்கு பங்கு உண்டு. ஆம் அது அந்த குழந்தையின் தந்தை அவரை அடுத்து அவளது ஆசிரியர்கள் இவர்கள் மூவரின் வளர்ப்பில் தான் ஒரு குழந்தை வளரும்.கல்வி இல்லாத குழந்தைகளும் இந்த சமூகத்தால் வளர்க்கப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் லட்சுமி குறும்படம் நம்மை கோவத்திலும் சிந்திக்க வைத்தது.ஒரு சராசரி  அலுவலகம் சென்று நடுத்தர வாழ்க்கையை நடத்தும் பெண்ணை குறித்து இருந்தது.

இந்த  இரண்டு குறும்படத்தையும் பார்த்த பிறகு தான் எனக்கு புரிந்தது ஒவ்வொரு பெண்ணையும் தசையாக மட்டுமே பார்க்கும் ஆண்களுக்கு மத்தியில் ஒரு இலட்சுமி உருவாக்கப்படுகிறாள். உணர்வுகளையும் அன்பையும் சேர்த்து ஒரு ஆண் பெண்ணை நெருங்கும் போது அவள் தாய்மை அடைகிறாள். ஆனால்  அதே பெண்ணை வெறும் காமத்தோடு மட்டும் நெருக்கடி கொடுக்கையில் அவள் விலைமகளை விட இழிவான நிலைக்கு தள்ளப்படுகிறாள்.

பெண்ணியம் பற்றி இன்று நிறைய பேசுகிறோம். பெண்ணின் சுதந்திரம் அவளிடம் உள்ளது ஆனால் சில பெண்களின் சுதந்திரம் சமூகத்தை சார்ந்தே உள்ளது. பெண்மையை சதையாகவும் ஆண்மையை தவறாகவும் சித்தரிக்கும் ஊடகங்களின் விளைவும் ஆசிரியர்களின் கவனக் குறைவும் தான் இதற்கு காரணம் என்பது எனது கருத்து. ஆம் ஆசிரியர்களை நான் குறிப்பிடுவதற்கு காரணம் பாலியல் என்பது உடலை மட்டும் அல்ல உணர்வுகளையும் குறித்தது.

பெரும்பாலும் அறிவியல் பாடத்தில் பாலியல் குறித்த விவரங்களை அடக்கிய பாடங்களை கற்றுத் தரும்  ஆசிரியர்கள்  அதனை மேற்கொள்ளும் போதே சீ... ஐ..யோ... என்றும் அதனை மாணவர்களுக்கு எடுக்க கூச்சப்படுவதால் தான் அவர்களுக்கு பாலியல் என்றாலே பெரும் குற்றாமகவும் பெண்களிடம் தான் அதனை அடைய முடியும் அதற்காக அவர்களை பயன்படுத்தலாம் என்ற தாக்கமும் ஆண்கள் மத்தியில் ஏற்படுகிறது ( ஒரு சில ஆண்களுக்கு  மட்டும் ) என்பது எனது கருத்து.

பெண்களை போற்றும் பெண்ணியம் தான் வேண்டும்.. பெண்களின் சுதந்திரம் அவளிடம் தான் உள்ளது.. கல்வியின் மூலம் தான் தீர்வு காண முடியும்.. இன்று பெரும்பாலும் இணையத்தில் தான் உலவுகிறோம். சினிமாவிலும் சரி, விளம்பரத்திலும் சரி, படுக்கையறை காட்சிகளை  ஆபாசமாக காட்டுவதே இதற்கு முக்கியக் காரணம். முத்தக் காட்சியில் ஆரம்பித்து பாலியல் வரை அனைத்தும் ஒவ்வொரு சிறுவர்களையும் பாதிக்கிறது. இரண்டு வயது சிறுவன் முதல் கட்டையில் போகும் மனிதன் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்த மாதிரியான காட்சிகள்.

இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு பெற்றோர்களும் தனது குழந்தைகளின் முன்பு சண்டைகள் மட்டுமின்றி பாலுறவு வைத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இன்றைய குழந்தைகளுக்கு வீட்டில் கற்று தரும் பாடத்தை விட இணையத்திலும் சமூகத்திலும் கற்று கொள்ளும் பாடமே அதிகம்.

ஆசிரியர்கள் மட்டும் இதை கற்றுத் தர வேண்டும் என்று இல்லை.  பெற்றோர்களும் தனது குழந்தைகளுக்கு ஆண் பெண் உடலமைப்பு, ஹார்மோன் மாற்றங்கள், ஆண் பெண் வித்யாசம், ஆண் பெண் பருவமடைதல் மற்றும் உடலுறவு பற்றிய விழிப்புணர்வை போன்ற நல்ல முறைகளை சொல்லிக் கொடுத்து வளர்க்கவும்.

இன்னும் எழுதவே நினைக்கிறேன்.. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதும் ஆச்சிரியக்குறி வைப்பதும்  ஒவ்வொருவரின் மனதில் தான் உண்டு..

வெள்ளி, 1 டிசம்பர், 2017

அன்று இன்று !

அன்று ஒரு பெண் எங்கோ பிறந்து,வளர்ந்து,கல்வி கற்று,
             வேலைக்கு செல்லமுடியாமல்!
இன்று அவள் திருமணம் முடிந்து பின்  

அவள் இருந்தால் சமையல் அறையில்!!

Related image



நிலா

சித்திரை வானத்தில் முத்து போன்ற உருவம் கொண்டு
                           பளபளப்பாக ஒளி தரும் சந்திரனே!
சிவன் தலைமேல் அரை வடிவமாய் காட்சியளிக்கும் நீ!
                        இனி வரும் காலங்களில் என்ன செய்யப்போகிறயோ!!