செவ்வாய், 24 அக்டோபர், 2017

வாழ்க்கை நம் வசம்

        கருவறையில் இருந்து இறங்கி கல்லறையை நோக்கி நடந்து செல்லும் தூரம் தான் வாழ்க்கை...
அதற்குள் ஒருமுறை நல்லா வாழ்ந்து பார்த்திட வேண்டும் ...
நம்மால் சாதிக் முடியாதது இந்த உலகில் எதுவும் இல்லை ...அப்படி இருந்தால் அதை வேறு யாராலும் சாதிக்க முடியாது...
நீங்கள் தோல்வி  பெறும்பொழுது உங்கள் இலக்கை நினைத்து கொள்ளுங்கள்
அது உங்களை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும்....

vaalkai க்கான பட முடிவு

குறைகள்

போதகர் ஒருவரிடம் கேட்டாள் ஒரு பெண்.." என் கணவர் நிறைய குறைகளோடுஇருக்கிறார்...அவரோடு என்னால் இனிஎன்னால் வாழமுடியாது,எனவே நான்அவரைவிட்டு விலகி விடட்டுமா?"..அவளுக்கு நேரடியாக பதில்சொல்லாத போதகர்."அம்மா! இங்குள்ள செடிகளில்ஏதாவது ஒன்றை உங்களுக்கு தர விரும்புகிறேன்,எது வேண்டும் கேளுங்கள்?" என்றார்..அப்பெண் ரோஜா செடியைக்கேட்டாள்...." அதைப் பராமரிப்பது மிகவும் கடினம், அதோடுஅதில் நெறைய முட்கள் வேறு இருக்கிறதே?இதுவா வேண்டும்?" என்று போதகர் கேட்டார்.."எனக்கு ரோஜாவை மிகவும் பிடிக்கும், அதனால் அதனிடம் உள்ள குறைகள்பெரிதாகத் தெரியாதுஎன்றாள்.".புன்னகைத்த போதகர் சொன்னார்:." வாழ்க்கையும் அப்படிதான்!பிறரை நேசிக்கக் கற்றுக்கொண்டால்அவர்கள் குறை பெரிதாக தெரியாது !!!
kuraigal க்கான பட முடிவு

திங்கள், 23 அக்டோபர், 2017

படித்ததில் பிடித்தவை

உங்களுக்கு எந்தெந்த உரிமைகள் தேவை என்று கருதுகிறீர்களே...
அதே உரிமைகளை பிறருக்கும் வழங்குங்கள்...

சிறகடிக்க தொடங்கியவுடன் எந்த பறவை குஞ்சும்,
அதன் தாயிடம் கூட, இரையை பிச்சை கேட்பதில்லை...

வாழ்க்கை ஒரு வரம்.. காத்திருக்க, நினைக்க, மகிழ, வருந்த, விரல்கோர்த்து நடக்க, பழைய கதைபேச, ஊர் சுற்றித்திரிய... ஒரு உயிர்த்தோழி/தோழன் அமைந்தால்..

குறைகளை காண்பதை விட..
நிறைகளை கண்டு மகிழ்ச்சி அடைவோம்...!!!
படம்

பணம் / மனம்

ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்' ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..!

சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண்
rich க்கான பட முடிவுவருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்..!

இதில் யார்_பணக்காரர்...?!!

வெற்றியின் ரகசியம்



வாழ்க்கையில் வெற்றி அடையவே எல்லோரும் விரும்புகின்றனர். ஒரு சிலர் துடிக்கின்றனர் என்றும் சொல்லலாம். ஆனால் ஒரு சிலரே வெற்றிக் கனியைப் பறிக்கின்றனர். பலர் தோல்வியைத்தான் தழுவுகின்றனர்.

ஒரு சிலரால் மட்டும் எப்படி வாழ்க்கையில் வெற்றி பெற முடிகிறது? வெற்றி சூத்திரம் தான் என்ன?


வெற்றி சூத்திரம்:

வெற்றி என்னும் முக்கோணத்திற்கு கடின உழைப்பு, புத்திசாலித்தனம், வெற்றியை மட்டுமே பற்றிய சிந்தனை என்னும் மூன்று விஷயங்கள் தேவை.


vetri க்கான பட முடிவு