வியாழன், 3 ஆகஸ்ட், 2017

தமிழை காப்போம்





          நம்மில் பலர் ஆங்கிலம் தான் பெரியது என்று எண்ணி தமிழ் மொழியை கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்கின்றோம். ஆங்கிலம் என்பது மொழி தமிழ் என்பது நம்முடைய அடையாளம் என்பதை நாமும் மறந்து நம்முடைய சந்ததியினரும் மறக்க ஏதுவான வழியை உருவாக்கி கொண்டிருக்கிறோம். தமிழை வளர்க்க ஒரு சிறந்த வழி நம்முடைய தொலைக்காட்சியில் சன்சிங்கர், சூப்பர் சிங்கர் போன்று பாடும் நிகழ்ச்சிகளில் சினிமா பாடலை பாடுவது போல தமிழில் உள்ள “ திருக்குறள், இராமாயணம், பாரதியார், பாரதிதாசன் பாடல் தேவாரம்” போன்ற தமிழ் இலக்கிய பாடல்களை தன் சொந்த நடையில் பாடினால் தமிழ் வளர பெரிய உதவியாக இருக்கும்.

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

இட்லிப் பூ



         
          சர்க்கரை நோய், தோல் வியாதிகள், இரத்த பேதி வயிற்றுப் போக்கு, இரத்த மூலம், சிறு நீரக தொந்தரவுகள், போன்ற வியாதிகள் குணமடைய உதவும்.          
             1)நீரிழிவு, சிரங்கு, சொறி: 1 தேக்கரண்டி பொடியுடன் மிதமான நீர் சேர்த்து பருக வேண்டும்.
           2)இரத்த பேதி அல்லது சீதபேதி: கால் தேக்கரண்டி பூச்சாறுடன் சூடான நீர் சேர்த்து சில நாட்களுக்கு பருக வேண்டும்.
          3)இரத்த மூலம், சிறுநீரக தொந்தரவு: 1 தேக்கரண்டி பொடியுடன் 1 கப் பால் சேர்த்து கொதிக்க வைக்கவும். பின் ஒரு நாளைக்கு இரண்டு முறை பருகவும்.

அறிவுள்ள ஐந்தறிவு விலங்குகள் அறிவில்லா ஆறறிவு மனிதன்



   

           காட்டில் சுட்டெரிக்கும் வெயில். அங்கு வாழும் விலங்குகளுக்கு புலி தான் தலைவன். ஒரு நாள் புலி சொன்னது நாம் வாழ்வதற்கு நீர் வேண்டும் ஆனால் மழை இப்பொழுதெல்லாம் அவ்வளவாக பெய்வதில்லை காரணம்காடுகள் அழிவதேஎன்றது. அப்போது யானை காட்டை அழிப்பது நாம் இல்லை மனிதர்கள் தான் மரங்களை வெட்டி காட்டை அழிக்கின்றனர் என்றது. மேலும் அங்குள்ள விலங்குகள் அனைத்தும் அவர்கள் தங்கள் எதிர்காலத்தை பற்றி நினைப்பதில்லை. அவர்களாக திருந்தினால் தான் உண்டு என்று கூறியது. உடனே புலி கிளி, காகம் போன்ற பறவையிடம் கூறியது கிடைக்கும் பழங்களை தின்று அவற்றின் விதைகளை காட்டில் பரப்புங்கள் என்றது. நாங்கள் தும்பிக்கையால் தண்ணீர் ஊற்றுகிறோம் விதைகள் முளைக்கட்டும், செடிகள் வளரட்டும், காடே பசுமையாகட்டும் என்றது யானைகள். நாம் அனைவரும் உயிர்மூச்சாக கொண்டு காட்டை காப்போம் என்றது புலி. சில ஆண்டுகள் கழிந்தன. காடெங்கும் பசுமை திடீரென வானம் இருண்டது மழை கொட்டியது. காட்டில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பின. விலங்குகளும் பறவைகளும் மகிழ்ச்சியால் ஆடிப் பாடின. அவை புதிய உலகை உருவாக்கி விட்டன. ஆனால்மனிதனாகிய நாம்???????????”

அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவல்கள்...


நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன.

ஒரு பட்டுப்புழுவின் கூட்டில் 32 ஆயிரத்து 500 கெஜம் நூல் இருக்கும்.

கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன.

ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 450 அடி நீளம் கொண்ட வலையைப் பின்னு

ஆந்தையால் ஓரே நேரத்தில் இரு கண்களாலும் இரு வேறு காட்சிகளைக் காண முடியும்.

பெண் சிலந்திப் பூச்சிகள், ஆண் சிலந்தியுடனான உறவுக்குப் பின் அதைக் கொன்று விடுகின்றன.

மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு. 

பூனைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்குகின்றன.
கிறது. 

வெள்ளி, 28 ஜூலை, 2017

காமராஜர் ஒரு நாள் வீட்டில் அமர்ந்து மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் . அப்பொழுது அவரைப் பார்க்க ஒரு சிறுமியும் சிறுவனும் உள்ளே .வந்தனர் பரட்டை தலையும் அழுக்குத் துணியும் அவர்களின் ஏழ்மையை பறைசாற்றின . பணியாளர் ஒருவர் அவர்களை விரட்ட , முற்பட , கேட் வரை ஓடிய குழந்தைகள் தயங்கி தயங்கி நின்றார்கள் . தம்மை பார்க்க வரும் பிரமுகர்களை வாசல் வரை வந்து வழியனுப்பிய காமராஜர் , அந்தக் குழந்தைகளை கவனித்து விடுகிறார் . அடுத்த நிமிடம் உற்சாகம் பொங்க " என்ன யாரை பார்க்க வந்தீங்க ?"" என்று கேட்டப் படி அவரே குழந்தைகளிடம் வந்து விட ...

அப்பொழுது அந்தச் சிறுமி தயங்கி பேசினாள் " உங்களைத் தான் பார்க்க வந்தோம் . எங்களுக்கு அப்பா இல்லை . அம்மா மட்டும் தான் . அண்ணனுக்கு டைப்ரைட்டிங் பரீட்சை பீஸ் கட்ட பணம் இல்லை . உங்களை பார்த்தா உதவி செய்வீங்கன்னு எல்லோரும் சொன்னாங்க அது தான் வந்தோம்" என்றாள் ...

அவர்களை அன்போடு தட்டிக் கொடுத்தப் படி , " அம்மா தான் அனுப்பிச்சாங்ளா ? என்று காமராஜர் கேட்க ... அந்த குழந்தைகளோ " இல்லை அய்யா , நாங்களாகத் தான் வந்தோம் . அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாக விக்கறாங்க அதுல தான் எங்களை படிக்க வைக்கிறாங்க """ என்று சொல்ல . அதற்கு மேல் கேட்க முடியாமல் . மாடிக்கு சென்ற அவர் ஒரு கவருடன் .வந்தார் சிறுமியிடம் கொடுத்து " இதில் கொஞ்சம் பணம் இருக்கு . அண்ணனுக்கு பீஸ் . கட்டிடுங்க அம்மா பேச்சை கேட்டு நல்ல பிள்ளைங்களா நடந்துக்கணும் என்று சொல்லி அனுப்பி வைத்தார் ...."

மறுநாள் மீண்டும் அந்தக் குழந்தைகள் வந்தனர் . உதவியாளர் வைரவன் குழந்தைகளை உள்ளே அழைத்து வந்தார் .... " வாங்க வாங்க " என்று அவர்களை வாஞ்சையுடன் அழைத்த காமராஜரிடம் அந்தக் குழந்தைகள் . " பரீட்சைக்கு பணம் கட்டி விட்டோம் அய்யா . அந்த ரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க என்று காமராஜரிடம் அந்தச் சிறுமி ரசீதை நீட்டினாள் .... காமராஜர் கண் கலங்கி விட்டார் .

ஏழ்மையிலும் இவ்வளவு நேர்மையா ? குழந்தைகள் அவரை ...வணங்கினார்கள் அவரும் குழந்தைகளை வணங்கினார் .... வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.