புதன், 5 ஏப்ரல், 2017

வாக்கியத்தை முடிக்கத் திணறிய அறிஞர்

           டென்மார்க்கைச் சேர்ந்த நீல்ஸ்போர் என்ற அறிவியல் அறிஞர் நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். ஆனால், அவர் தன்
மாணவர்களிடம் கட்டுரைகளை எழுதுவதற்காக குறிப்புகளை சொல்லும் போது சில நேரங்களில், ஏற்கனவே எழுதச்சொன்ன வார்த்தைகளை
மாற்ற சொல்வார். நீண்ட நேரம் ஆராய்ச்சி செய்து சமன்பாடுகளை உருவாக்குவார். பான்னர் மீண்டும் கட்டுரைகளை சரிபார்த்து விட்டு மேலும்
செய்திகளை சேர்க்கச் சொல்வார். புத்தக அலமாரிக்குச் சென்று புத்தகங்களை எடுத்துக் குறிப்புகளை எடுத்துக் கொண்டு அவற்றைக் கட்டுரைகளில்
சேர்த்து விடுவார்.
           இதற்கு நேர்மாறானவர் டிராக். அவர் எதையுமே துல்லியமாக சிந்திக்கக்கூடியவர். தேவையான குறிப்புகளையும், வார்த்தைகளையும்
முறையாக தயார் செய்த பின்னரே கட்டுரைகளை எழுதத் தொடங்குவார். அதன் பிறகு எந்தக் காரணத்தைக் கொண்டும் திருத்தம் செய்ய மாட்டார்.
           ஒருமுறை டிராக், நீல்ஸ்போரை பார்க்கச் சென்றார். நீல்ஸ்போர் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டு இருந்தார். “ஏன் இப்படி கஷ்டப்படுகிறீர்கள்?”
என்று கேட்டார். அதற்கு, “ஒரு வாக்கியத்தை ஆரம்பித்தால், அதை திருப்திகரமாக முடிக்க வேண்டும். இல்லாவிட்டால், எனக்கு உறக்கமே வராது. நீ
இப்படி ரிஸ்க் எடுக்க மாட்டாயா?” என்று கேலியுடன் கேட்டார்.
           அதற்கு டிராக், “எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர், ஒரு வாக்கியத்தை எப்படி முடிப்பது என்று தெரியாமல், அதைத் தொடங்காதே

என்று தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்” என்றார், அமைதியாக.    

செவ்வாய், 4 ஏப்ரல், 2017

கால்சியம் பற்றாக்குறைக்கு புரோக்கோலி முட்டைகோஸ் காலிஃபிளவர் போன்றவற்றை பயன்படுத்தி உடலுக்கும் மண்ணுக்கும் தீங்கிழைக்கும் உற்பத்தி கலாச்சாரத்தினை ஊக்குவிக்காமல் .......

அகத்தீ கீரையை பயன்படுத்தலாமே .....

அகத்தில்"தீ"சக்தியை உருவாக்குவதாலேயே இந்த பெயர் இருக்க கூடும் உடலுக்கு தேவைப்படும் எரிசக்தி ஆற்றலை வழங்குவதால் இதனை கீரைகளில் முதன்மையானதாகவே கருதி இருக்க கூடும் ....

"அகத்தி கீரை"நோய் எதிர்பாற்றலை உடலில் உருவாக்கும் இரத்தத்தை சுத்திகரித்து கழிவுகளை வெளியேற்றம் மனநிலையை சரியாக வைத்துகொல்லும் திறன் அகத்தி கீரைக்கு உண்டு அகத்தி கீரையில் கால்சியம் அதிகம் அதனால் குடல் புண்களை போக்கும் உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களையும் தருகிறது விட்டமின்"A"அதிகம்.....மணதக்காளி கீரையை சாப்பிட்டால் அல்சர் குணமாகும் என்பதற்கு காரணமே அவற்றில் உள்ள மிகையான கால்சியம் என்பது நமக்கு தெரியும் அதைவிட இதில் கால்சியம் அதிகம் அதனால் தான் பால் கறக்கும் மாடுகளுக்கு அதிகபடியான அகத்தி கீரையை தருகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுவோம் ....

நாட்டு மருந்து சாப்பிடும் போது இதை சாப்பிட்ட கூடாது என்பதற்கு காரணம் மருந்தில் உள்ள சத்துக்களை வெளியேற்றம் செய்துவிட கூடும் அதனாலேயே அளவாக மாதத்தில் இரண்டு முறை மட்டுமே உட்கொள்ள வேண்டும் ...

அகத்தி பூவை சூப்பாக செய்து சாப்பிட்டால் குடல் புழுக்களையும் வேண்டாத பாக்டீரியாக்களை கொள்ளும் திறன் இந்த பூவிற்கு உண்டு ....

இறப்பு நடந்த வீட்டில் உள்ளவர்களுக்கு ஒன்பதாம் நாள் இறுதி காரியத்திற்கு பயறுவகைகளுடன் இந்த அகத்தி கீரையை சாப்பிட கொடுப்பது துக்கத்தில் துவண்டு போயிருந்த உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுவதற்காக தானே ...!!
கால்சியம் பற்றாக்குறைக்கு புரோக்கோலி முட்டைகோஸ் காலிஃபிளவர் போன்றவற்றை பயன்படுத்தி உடலுக்கும் மண்ணுக்கும் தீங்கிழைக்கும் உற்பத்தி கலாச்சாரத்தினை ஊக்குவிக்காமல் .......

அகத்தீ கீரையை பயன்படுத்தலாமே .....

அகத்தில்"தீ"சக்தியை உருவாக்குவதாலேயே இந்த பெயர் இருக்க கூடும் உடலுக்கு தேவைப்படும் எரிசக்தி ஆற்றலை வழங்குவதால் இதனை கீரைகளில் முதன்மையானதாகவே கருதி இருக்க கூடும் ....

"அகத்தி கீரை"நோய் எதிர்பாற்றலை உடலில் உருவாக்கும் இரத்தத்தை சுத்திகரித்து கழிவுகளை வெளியேற்றம் மனநிலையை சரியாக வைத்துகொல்லும் திறன் அகத்தி கீரைக்கு உண்டு அகத்தி கீரையில் கால்சியம் அதிகம் அதனால் குடல் புண்களை போக்கும் உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களையும் தருகிறது விட்டமின்"A"அதிகம்.....மணதக்காளி கீரையை சாப்பிட்டால் அல்சர் குணமாகும் என்பதற்கு காரணமே அவற்றில் உள்ள மிகையான கால்சியம் என்பது நமக்கு தெரியும் அதைவிட இதில் கால்சியம் அதிகம் அதனால் தான் பால் கறக்கும் மாடுகளுக்கு அதிகபடியான அகத்தி கீரையை தருகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுவோம் ....

நாட்டு மருந்து சாப்பிடும் போது இதை சாப்பிட்ட கூடாது என்பதற்கு காரணம் மருந்தில் உள்ள சத்துக்களை வெளியேற்றம் செய்துவிட கூடும் அதனாலேயே அளவாக மாதத்தில் இரண்டு முறை மட்டுமே உட்கொள்ள வேண்டும் ...

அகத்தி பூவை சூப்பாக செய்து சாப்பிட்டால் குடல் புழுக்களையும் வேண்டாத பாக்டீரியாக்களை கொள்ளும் திறன் இந்த பூவிற்கு உண்டு ....

இறப்பு நடந்த வீட்டில் உள்ளவர்களுக்கு ஒன்பதாம் நாள் இறுதி காரியத்திற்கு பயறுவகைகளுடன் இந்த அகத்தி கீரையை சாப்பிட கொடுப்பது துக்கத்தில் துவண்டு போயிருந்த உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுவதற்காக தானே ...!

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க என்ன வழி..?

ரத்த கொதிப்புக்கான மாத்திரைகள் உட்கொண்டு ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். உடல் பருமனை உடற்பயிற்சிகள் மூலம் குறைத்து, சரியான எடை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் உயரத்தை சென்டிமீட்டரில் எடுத்துக்கொண்டு அதிலிருந்து நு}றை கழித்தால் வரும் அளவே உங்களின் சரியான எடையாகும்.

ஒரு கிலோ எடையை குறைத்தால் மூன்றிலிருந்து நான்கு மி.மீ., எச்.ஜி., ரத்த அழுத்தம் குறையும். எடுக்கும் உப்பின் அளவை பாதியாக குறைத்தால், ஏழு மி.மீ., எச்.ஜி., ரத்த அழுத்தம் குறையும். ஊறுகாய், கருவாடு மற்றும் உப்பு போட்டு சமைக்காமல், சாம்பாரில் பாதி உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இரவில், 6-8 மணி நேரம் தூங்குதல், யோகா செய்தல், மன அழுத்தம் வராமல் பார்த்துக் கொள்ளுதல் போன்றவற்றால் ரத்த அழுத்தத்தை குறைக்கலாம். ரத்த அழுத்தம் சிறிதளவு மட்டும் அதிகமாக இருந்தால், மாத்திரை இல்லாமல் உணவு மற்றும் மன கட்டுப்பாட்டால் சரிசெய்யலாம்.

ரத்த அழுத்தத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?

தினமும் டீ, காபி குடிப்பதை தவிர்த்து, 1 டம்ளர் மோரில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து குடித்து வந்தால், இரத்த அழுத்தம் விரைவில் குறையும்.

முருங்கைக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து, அதை உலர்த்தி பொடியாக்கி, தினமும் இரண்டு வேளைகள் 2 கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம் குறையும்.

வெந்தயம், பாசிபயறு, கோதுமை, ஆகியவற்றை சிறிதளவு எடுத்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அதனுடன் மிளகு, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குறையும்.

அருகம்புல்லை நன்கு சுத்தம் செய்து, அதன் சாறு எடுத்து அதனுடன் ஐந்து பங்கு சுத்தமான தண்ணீர் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தம் குறையும்.

அரைக்கீரை சாற்றில் சீரகத்தை ஊற வைத்து, அதை உலர்த்திப் பொடியாக்கி, தினமும் இரண்டு வேளைகள் 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறைந்துவிடும்.

நமது உடல் நலனில் நாம் தனி கவனம் செலுத்த வேண்டும். முறையான தூக்கமும், நிறைவான மன அமைதியும் பல பிரச்சனைகளிலிருந்து நம்மை காக்கும்.

பாசம்

மூலையில் நின்று எட்டிப் பார்க்கும்
முகம் காட்டாமல் அன்பு செலுத்தும்
கண்டதும் இயல்பு நிலைக்கு மாறும்
காரணமின்றி கண்ணீர் சிந்தும்
கஷ்டம் என்றால் உடனிருக்கும்
கனவிலும் கற்பனை செய்யும்
காதல் என்று பெயர் சொல்லும்
பிரிந்தாலும் பாசம் மாறாமல் இருக்கும்
.
.
.
.
அப்பாவாகவும், அம்மாவாகவும், ஆசிரியராகவும், உடன் பிறப்பாகவும், நண்பர்களாகவும் நம்மீது அன்பு செலுத்தும் அனைவருக்கும் நன்றிகள் பல கூற வேண்டிய தருணம். . . . . . .