புதன், 22 மார்ச், 2017
திங்கள், 20 மார்ச், 2017
நல்லதை செய் நல்லதே நடக்கும்
ஒரு வகுப்பில்
முத்து, கண்ணன் என்னும் சிறுவர்கள் இருந்தார்கள்.அதில் முத்து என்பவன் நாய், பூனை,
அணில், ஓணான் போன்ற வாயில்லா பிராணிகளை கண்டால் கல்லால் அடித்து மகிழ்வான். அவனுடைய
பெற்றோர் எவ்வளவோ அறிவுரை கூறியும் அவன் திருந்தவில்லை. ஒரு நாள் அவன் தன் வீட்டின்
முன் உட்காந்து வாழைப்பழம் சாப்பிட்டான். சாப்பிட்டு விட்டு அத்தோலை தெருவில் வீசினான்.
ஒருவர் அதில் வழுக்கி விழுவதைக்கண்டு அவன் சிரித்து மகிழ்ந்தான். மீண்டும் ஒரு வாழைப்பழத்தை
சாப்பிட்டு விட்டு தோலை தெருவில் வீசினான் வழியே வந்த ஒருவர் அதில் வழுக்கி விழுவதைக்
கண்ட முத்து மிகவும் மனம் வருந்தி அழுதான் காரணம் அது அவனுடைய ”தந்தை”.
கண்ணன்
என்பவன் அனைவரிடமும் அன்பாக பழகுவான். ஒருவருக்கு உதவி செய்ய எந்த நிலையிலும் தயங்க
மாட்டான். ஒருமுறை அவனுடைய நண்பன் ஒருவன் மதிய உணவு கொண்டு வரவில்லை. அவன் மிகவும்
பசியினால் வாடினான். அதையறிந்த கண்ணன் தன்னுடைய உணவை நண்பனிடம் கொடுத்தான். இருப்பினும் அவனுக்கு பசி இதையெல்லாம்
பார்த்துக் கொண்டிருந்த ஒரு மாணவன் கண்ணனை அழைத்து அவனுடைய உணவை இருவரும் பகிர்ந்து
உண்டார்கள். இதனால் அவனுடைய பசியும் அடங்கியது.
மையக்கருத்து: நாம் செய்கின்ற செயல் நல்லதாக
இருந்தாலும் தீயதாக இருந்தாலும் அது நமக்கே திரும்பும்.
ஞாயிறு, 19 மார்ச், 2017
விண்வெளி களஞ்சியம்
பீடல்ஜீயஸ் (BETELGEUSE)
விண்வெளியில்
எராளமான நட்சத்திர குழுக்கள் உள்ளன. அவற்றில் நேர்த்தியுடன் அமைந்த நட்சத்திர குழு
‘ஆல்பா ஒரியனிஸ்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த நட்சத்திரக்குழு பூமியில் இருந்து 640
ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரக்குழுவில் உள்ள ஒரு நட்சத்திரம்
தான் பீடல்ஜீஸ்.
இந்திய
வானியல் மரபு மற்றும் ஜோதிட மரபுப்படி தமிழில் இது ‘திருவாதிரை’ என்றும் ’சிவப்பு
அரக்க விண்மீன்’ என்றும் அழைக்கப்படுகிறது . இரவு நேரத்தில் வானில் இது சிவப்பு
புள்ளியாக காட்சியளிக்கும். இந்த நட்சத்திரத்தின் ஆயுள் இன்னும் பத்து லட்சம் ஆண்டுகளில் முடிந்துவிடும் என்றும்
அதன்பிறகு இது வெடித்துச்சிதறும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
தடைபடும் சுழல் பால் மண்டலம்;
விண்வெளியில்
நமது சூரியக்குடும்பம் உள்பட பல் வேறு கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் கொண்ட அண்ட வெளிக்கூட்டங்கள்
உள்ளன. இந்த அண்டவெளிக்கூட்டங்கள் இருக்கும் பகுதி பால்வெளி வீதி (மில்கி வே) என்று அழைக்கப்படுகின்றன. இதில் உருண்டையான வடிவத்தில் நட்சத்திரங்கள் கூட்டம்
அமைக்கப்படுகின்றன. இந்த நட்சத்திரங்கள் ஒரு மத்திய சட்டத்தின் பிணைப்பில் அமைந்துள்ளது
போல இந்த மண்டலம் உருவாகி இருக்கிறது. இது தடைபடும் சுழல் பால் மண்டலம் என்று அழைக்கப்படுகிறது.
பியோன் (BION):
சோவியத்
யூனியன் கூட்டமைப்பின் (ரஷ்யா) விண்வெளி ஆய்வுத் திட்டத்தின் பெயர் தான் “பியோன்” என்பதாகும். நுண்ணுயிர்கள் தொடர்பான
ஆய்வுகளை விண்வெளியில் நடத்தியதால் அதற்கு இந்த பெயர் வந்தத . 1973 முதல்1966 வரை இந்த ஆய்வுகளை ரஷ்யா நடத்தியது.
இந்த காலகட்டத்தில் பல்வேறு உயிரிகள் கொண்ட செயற்கை கோள்களை ரஷ்யா விண்வெளிக்கு அனுப்பி
ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வுக்காக முதலில் அனுப்பட்ட செயற்கைகோளின் பெயர் காஸ்மோஸ் 605. இதில் பூஞ்சை காளான், பூச்சின், எலிகள் மற்றும் ஆமைகள்
போன்றவை அனுப்பி வைக்கப்பட்டன. இந்த உயிரினங்கள் விண்வெளியில் எப்படி செயல்படுகின்றன
என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்றது. இந்த உயிரினங்கள் சுமந்து கொண்டு காஸ்மோஸ்
605 செயற்கைகோள் விண்ணில் செலுத்தி வைக்கப்பட்டது. சுமார் 22 நாட்கள் இந்த செயற்கைகோள் விண்ணில் சுற்றிவிட்டு பூமிக்கு திரும்பியது.
நீல நிலவு (BLUE MOON);
ஒரு மாதத்தில்
இரண்டு பவுர்ணமிகள் வந்தால் இரண்டாவதாக
வரும் பவுர்ணமி ‘நீல நிலவு’ என்று அழைக்கப்படுகிறது.
இது போன்று நிகழ்வு ஒவ்வொரு 2% ஆண்டுகளுக்கு
ஒரு முறை நிகழ்கிறது. இதனால் தான் அபூர்வமாக
நடைபெறும் நிகழ்வுகளை ‘ஒன்ஸ் இன் எ புளூ மூன்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன.
பெர்னார்ட் எட்வர்டு எமர்சன்
(BARNARD EDWARD EMERSON):
பெர்னார்ட் எட்வர்டு எமர்சன் அமெரிக்கா
வானியல் ஆய்வாளர் ஆவார். 1829 ம் ஆண்டு
இவர் வானில் உள்ள 16 வால் மீன்களை கண்டுபிடித்தார்.
அதுபோல ஜீபிடர் கோளுக்கு துணைக்கோள் இருப்பதையும்
கண்டுபித்தவர் இவர் தான். 200 ஆண்டுகளில்
அதிகபட்சமாக கோள்களை கண்டுபிடித்தவர் என்ற பெருமையும் உண்டு. சூரியனுக்கு அருகே உள்ள
நட்சத்திரம் ஒன்று குறித்து அவர் ஆய்வுகள் நடத்தினார். இதனால் அந்த நட்சத்திரத்திற்கு
இவரது பெயரான பெர்னார்ட் என்ற பெயரே சூட்டப்பட்டது.
தமிழ்
தமிழ் வளர போராடுவோம்!
தமிழ் மறைந்துக்கொண்டுவரும் இக்காலத்தில்
இளைஞர்கள் அனைவரும் ஒன்றுகூடி
தமிழை வளர்க்க வேண்டும்.
எவ்வாறு தமிழர் பண்பாடான ஜல்லிக்கட்டுக்காக ஒன்றுகூடினோமோ
அதே போன்று தமிழுக்காகவும் ஒன்றுக்கூட வேண்டும்.
உதாரணமாக சொல்ல வேண்டுமானால்
தமிழ் என்பது பழச்சாறு மாதிரி,
ஆங்கிலம் என்பது பெப்சி கொக்ககோலா மாதிரி
எது ஆரோக்கியமானது என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.
தமிழை அழிக்க நினைப்பது
தமிழர்களின் உயிரை எடுப்பது போன்றது.
விடமாட்டோம் தமிழர் உயிர் உள்ளவரை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)