பிரபல வயலின் இசைக் கலைஞரான குன்னக்குடி வைத்தியநாதன் 1935ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் பிறந்தார். இவரது சகோதர, சகோதரிகள் அனைவருமே இசைக் கலைஞர்கள்.
ஒருமுறை இவர்களது கச்சேரிக்கு வயலின் கலைஞர் வரவில்லை. காரணம் கேட்டதற்கு, 'ஏன் உங்கள் வீட்டு கடைசிப் பையனை வயலின் வித்வான் ஆக்கிவிட வேண்டியதுதானே!" என்றார். அதையே சவாலாக எடுத்துக் கொண்ட தந்தை 8 வயதே ஆன மகனுக்கு வயலின் கற்றுத் தந்தார்.
வயலின் கற்றுக்கொண்டு தனது 12-வது வயதில் முதல் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று தந்தைக்கு பெருமை சேர்த்தார். 1976 முதல், வயலின் இசையை கொண்டு கச்சேரி செய்தார்.
1969-ல் 'வா ராஜா வா" என்ற திரைப்படத்துக்கு முதன்முதலாக இசையமைத்தார். இசைப் பேரறிஞர், சங்கீத நாடக அகாடமி, சங்கீத கலாசிகாமணி, கலைமாமணி உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
'வயலின் சக்கரவர்த்தி" என்று போற்றப்பட்ட குன்னக்குடி வைத்தியநாதன் 73-வது வயதில் (2008) மறைந்தார்.