(தன்னம்பிக்கை தொடர்கின்றது…)
அடிதடி, கூச்சல்,
அலறல், அழுகை – நிம்மதியற்ற வீடுகள். அந்தக் குடும்பங்களிலுள்ள பிள்ளைகள்தான் பாவம்!
எப்படி படிப்பார்கள்? அமைதியான சூழலும் மகிழ்ச்சியும் இல்லையென்றால் அவர்கள் எப்படித்தான்
வளர்ச்சியடைவார்கள்!
இருவரில் ஒருவர் அமைதியாக
இருந்துவிட்டால் போதும். இன்னொருவரின் பயங்கரமான வார்த்தைகள் எல்லாம் பலமிழந்து விழுந்துவிடும்.
தெருவீதிகளில் திடீர்
திடீரென சண்டை சம்பவங்களைப் பார்க்க முடியும். இருவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அவர்களில்
இன்னொருவனை அரிவாளால் வெட்டிவிடுகிறான். எதிர்பாராதவிதமாக ஒரு கொலையே நடந்து முடிந்துவிடுகிறது.
காரணம் என்ன? அனல்தெறிக்கும்
வார்த்தைகளின் மோதல்கள். எனவே எப்போதும் அமைதி காப்பதே நலம்.
(தொடரும்..)