திங்கள், 29 ஆகஸ்ட், 2016

தன்னம்பிக்கை 3

Image result for தன்னம்பிக்கை

(தன்னம்பிக்கை தொடர்கிறது…)
  
  விஷத்தைக் கக்குவதுபோல் பேசிப்பேசி உங்களைக் காயப்படுத்துகின்றவர்கள் உங்கள் பக்கத்தில், உங்கள் அலுவலகத்தில், உங்கள் உறவினர்களில் இருக்கத்தானே செய்கிறார்கள்.
   
   அவர்களின் வார்த்தைக்கு வார்த்தை நீங்கள் பதில்பேசிக் கொண்டிருந்தால், அதனால் மேலும் மேலும் புண்படப் போவது என்னவோ உங்கள் மனம்தான்.
   
  வீண்பேச்சை வளர்த்துக் கொண்டிருப்பவர்களின் நோக்கமெல்லாம் உங்களைச் சங்கடப்படுத்துவதுதான். எனவே அவர்கள் நல்லிணக்கத்திற்கோ, நல்லுறவிற்கோ ஒரு போதும் வழிவகுக்க மாட்டார்கள்.
   
  அவர்களுக்கு மத்தில் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வதற்கு, மவுனம்தான் மிகச்சிறந்த வழி. அமைதி என்பது ஓர் அற்புதமான ஆயுதம்.  
                      
                       (தொடரும்..)       











































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

தன்னம்பிக்கை 2

  Image result for தன்னம்பிக்கை
  (தன்னம்பிக்கை தொடர்கிறது…)
   இந்த நிலையில் யாரிடம் யார் பேசுவது? இதுதான் பலரின் கேள்வி. சந்தோஷமாகப் பேசி எல்லாரும் சமாதானத்துடன் உறவுகொண்டாடினால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஆனால் பெரும்பாலானோருக்கு அவர்களின் நாவில்தானே பிரச்சினையே இருக்கிறது.
  அப்படிப்பட்டவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்களிடம் அதிக ஜாக்கிரதையாகத்தான் இருந்தாக வேண்டும்.
  ஒவ்வோர் ஆண்டும் பாம்புகளால் கடிபட்டு இறப்பவர்களைவிட, தேனீக்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாம். தேனீ, மனிதனை ஒருமுறை கொட்டினால் அது தன் கொடுக்கை இழந்து விடுகிறது.
  ஆனால் கபட மனிதர்களின் நாவு, ஒருமுறை பேசியதும் அப்படியா விழுந்துவிடுகிறது. தனது வார்த்தைகளால் மற்றவர்களின் மனதை தொடர்ந்து நோகடித்துக் கொண்டால்லவா இருக்கிறது.

                                              (தொடரும்.)