ஹிஸ் டிசரேசன் அபான் ரோஸ்ட் பிக்
--ச்சார்லஸ்
லேம்ப்
லேம்ப் உலகரிந்த
விமர்சகரும் கட்டுரையாளருமாவார்.அவரது கட்டுரைகள் நகைச்சுவைக்கு பெயர் போனவை.எப்படி
பன்றி இறைச்சி சமைக்கப்பட்டது என்ற முறையை இக்கட்டுரையில் கூறியிருப்பார்.சீன பழங்குறிப்பில்
இவை தற்செயலாக கன்டுபிடிக்கப்பட்ட பரிசு என்று கூறுகிறது.
ஒரு காலத்தில் போ—போ(bo-bo)என்ற சிறுவன்
தன் தந்தையான ஹோ—டி(ho—ti)யின் பன்றி மந்தையில் இருந்தான்.பன்றிகளுக்கு ஹோ—டி அப்போது
உணவு வாங்க சென்றான்.மந்தையை தன் மூத்த மகனான போ—போவிடம் விட்டு சென்றான்.அவனோ சுட்டி
அங்கும் இங்குமாய் திரிந்து நெருப்புடன் விளையாடிக் கொண்டிருந்த அவனுக்கு ஓர் அதிர்ச்சி.
அந்த
நெருப்பின் ஒரு சிறு துளி தனது மூன்று பன்றி மந்தையில் பட்டு இடத்தையே சாம்பல் ஆக்கிவிட்டது.சில
பன்றிகள் ஒடி தப்பித்துவிட்டன.சில பன்றிகள் காயத்துடனும் ஓடின.ஆனால் ஒன்பது பன்றிகள்
முழுவதும் எறிந்து போயின.செய்வதறியாது திகைத்து தந்தையிடம் என்ன கூறுவது என்று எண்ணிக்கொண்டிருந்த
அவனுக்கு தன் வாழ்நாளில் நுகராத அப்படி ஒரு அற்புதமான மணம் வீசியது.அது என்னவென்று
காப்பகறிகள்,கோதுமை, மரக்கட்டை என பலவற்றை நுகர்ந்து பார்த்து இருதியில் பன்றி என்று
கண்டரிந்தார்.அதனை அருகில் சென்று தன் விரலால் தொட்டான்.கையில் பட்ட நெருப்பை அனைக்க
தன் விரல்களை சூப்பினான்.அவனுக்கு அதில் அற்புதமான சுவை கிடைத்தது.
பிறகு அதில் மெதுவாக ஒரு கறித்துண்டை எடுத்து
தன் வாயில் ருசித்தான்.ஹோ—டி வந்த பின் தன் மகனை திட்டினான்.எதையும் பொருட்படுத்தாமல்
தின்றுகொண்டே இருந்தான்.போ—போ பின்பு தன் தந்தையும் சுவைத்து பார்க்க சொல்லி இருவரும்
சேர்ந்து அனைத்து பன்றியையும் சுவைத்தனர்.இந்த விஷயம் வெளியே தெரிந்து நீதிமன்றம் வரை
சென்றது.நீதிபதி அந்த கரியை சுவைத்து பார்த்து அவர்களுக்கு விடுதலை அளித்தார்.பின்பு
அதனை எப்படி செய்வது என்று தெரிந்து கொண்டு போ—போவை போல தன் பன்றி மந்தை முழுவதையும்
எரித்தார். பின்னர்,அனைத்து இடங்களிலும் சீன பன்னி மந்தைகள் எரிக்கப்பட்டன.சில நாட்களுக்கு
பிறகு இதனை முறையாக சமைக்க அடுப்பு கண்டுபிடிக்கப்பட்டன.