செவ்வாய், 8 மார்ச், 2016

மின்னஞ்சலைக் கண்டுபிடித்தவர் ஒரு தமிழன்..!!

இன்று உலக மக்கள் அனைவருமே தனித்தனியாக ஒரு முகவரியை வைத்துள்ளன.புரியவில்லையா.ஒரே வீட்டில் இருந்தாலும் தனித் தனியே ஒரு முகவரி அத்தாங்க மின்னஞ்சல் முகவரி தான் அப்படி சொல்லுறேன் நண்பர்களே..!!
இன்றைய உலகில் ஒவ்வொருவருக்கும் மின்னஞ்சல் என்பது மிகவும் தேவையான ஒன்று என்று ஆகிவிட்டது.



இந்த மின்னஞ்சலைக் கண்டுபிடித்தவர் ஒரு ‘தமிழன்’ என அறியும்போது ‘தமிழன் என்று சொல்லடா; தலைநிமிர்ந்து நில்லடா’ என்று நெற்றிப் புருவம் மேலே ஏறுகின்றது! நரம்புகளில் ஏதோ ஓர் உணர்வு முறுக்கேறுகின்றது.

வெள்ளைத் தாளில் தூவலைப்(பேனா)  பிடித்து கடிதம் எழுதிய பாரம்பரிய முறையை மாற்றிப்போட்டு மின்னியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்மடல் எழுதும் புதிய பரிணாமம்தான் இந்த மின்னஞ்சல். ஆனால், இன்றோ அதனுடைய பயன்பாடு பல்வகைப்பட்டதாக மாறிவிட்டது. நவின உலகத்தில் மின்சாரம் இல்லாமல் எப்படி வாழ முடியாதோ அப்படி ஆகிவிட்டது இந்த மின்னஞ்சல். இ-மெயில் எனப்படும் மின்னஞ்சல் இல்லாமல் இன்றைய உலகத்தில் வாழ முடியாது என்னும் நிலைமை வந்துவிட்டது.   

ஆகக் கடைசியாக வந்திருக்கும் முகநூல் (Facebook), டுவிட்டர் (Twitter), கூகிள் + (g+) யூ டியூப் (You Tube) என்று எந்தத் தொழில்நுட்பத்தை எடுத்துக்கொண்டாலும் இந்த மின்னஞ்சல் இல்லாமல் எதுவும் செயல்படாது; எதிலும் நாம் செயல்பட முடியாது.

சிவா ஐயாதுரை, மின்னஞ்சலைக் கண்டுபிடித்த பொழுது 14 வயது இளைஞராக இருந்தார் என்னும் செய்தியை அறியும்போது நமக்குப் பெரும் வியப்பும் பெருமிதமும் ஏற்படுகிறது.

இளமசிவா ஐயாதுரை

30 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் மின்னஞ்சல் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து உலகத்திற்கு அறிமுகப்படுத்திய பொழுது அதனை அமெரிக்க அரசாங்கம் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ இவருக்கு உரிய உறுதிபாட்டையும் காப்புரிமையையும் கொடுக்கவில்லை. இதனால், மின்னஞ்சலுக்குப் பலரும் சொந்தம் கொண்டாடினர்.

ஆனாலும், 4 ஆண்டுகள் கழித்து 1982ஆம் ஆண்டு ஆகத்து 30ஆம் நாள் சிவா ஐயாதுரையின் அரிய கண்டுபிடிப்புக்கு உரிய உறுதிப்பாடும் மின்னஞ்சல் காப்புரிமையும் (e-mail copyright)  வழங்கப்பட்டது.


இ-மெயில் (e-mail) என்ற பெயரை உருவாக்கியவரும் இவர்தான். அதோடு, மின்னஞ்சலின் உள்ளடக்கங்கள் (inbox, outbox, draft), செயல்முறைகள் (reply, forward, attachment, broadcasting), குறிப்பான்கள் (to, from, subject, Cc, Bcc, Date, Body) ஆகிய எல்லாவற்றையும் உருவாக்கியவரும் பெயரிட்டவரும் இவரேதான்.

சிவா ஐயாத்துரையின் கண்டுபிடிப்பு இன்று உலகத்தையே கட்டிப்போட்டுத் தன் வயப்படுத்தி இருக்கிறது. தமிழனால் முடியும்! தமிழன் சாதிக்கப் பிறந்தவன்! என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் சாதனைத் தமிழன் சிவா ஐயாதுரை.

ஷெரிடன்

                                                                           ஷெரிடன்


ரிச்சார்ட்டு பிரினெஸ்லி ஷெரிடன்(1751-1816)டப்லினில் பிறந்து ஹாரோவ்ஸில் கல்வி தகுதி பெற்றார்.தனது இருபத்தி மூன்றாவது வயதில் தம் முதல் நாடகமான``ரைவல்ஸ்’’என்ற நாடகத்தையும் பின் இருபத்து ஒன்பது வயதில் ``கரிடிக்’’என்ற நாடகத்தை எழுதினார்.பின்பு ஸ்ட்ராட்போட் என்ற இடத்தில் தாடாலுமன்றத்தின் உருப்பினராகி(எம்.பி)ஆகி சமூகத்திலும் அரசியலிலும் பரபரப்பான வாழ்கையை வாழ்ந்தார்.பின்னர்``டுரூஇலேன்’’என்ற  திரையரங்கின் செயலாளர் ஆனார்.
ஷெரிடனின் இலக்கிய வாழ்வு:
இவர் எழுதிய அனைத்து நூல்களிலும் புகழ் பெற்ற இரு நூல்கள் என்றால்
தி ரைவல்ஸ்
தி ஸ்கூல் ஃபார் ஸ்கான்டல்
என்பதாகும்.அவரது ரைவல்ஸ் என்ற நகைச்சுவை கதை அவருக்கு அபார வேற்றியை கொடுத்த்து.அதனை அடுத்து``சென்ட்.பாட்டிக்ஸ் டே’’அல்லது தி ஸ்கீமிங் லிட்ரேச்சர்’’எனப்படும்.பின்பு எழுதப்பட்ட``டியூனா’’நாடகத்திற்கு இவர் மருமகன்,``தாமஸ் லின்லி’’இசையமைத்தார்.அவரது சில சிறந்த படைப்பான  ``தி ஸ்கூல் ஃபார் ஸ்கான்டல்’’மற்றும் கடைசி பனைப்பாட``கிரிடிக்’’கிளும் இவர் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிரார்.
ஷெரிடனின் தனித்தன்மை
இவரது அனைத்து கதைகளின் நகைச்சுவையிலுமே``ரேஸ்டோரேஷன் காமிடி’’கலந்திருக்கும்.தி``கிரிடிக்’’என்ற படைப்பில் தனி ஒரு நடையை இவர் உருவாக்கியுள்ளார்.                                                                           ஷெரிடன்
ரிச்சார்ட்டு பிரினெஸ்லி ஷெரிடன்(1751-1816)டப்லினில் பிறந்து ஹாரோவ்ஸில் கல்வி தகுதி பெற்றார்.தனது இருபத்தி மூன்றாவது வயதில் தம் முதல் நாடகமான``ரைவல்ஸ்’’என்ற நாடகத்தையும் பின் இருபத்து ஒன்பது வயதில் ``கரிடிக்’’என்ற நாடகத்தை எழுதினார்.பின்பு ஸ்ட்ராட்போட் என்ற இடத்தில் தாடாலுமன்றத்தின் உருப்பினராகி(எம்.பி)ஆகி சமூகத்திலும் அரசியலிலும் பரபரப்பான வாழ்கையை வாழ்ந்தார்.பின்னர்``டுரூஇலேன்’’என்ற  திரையரங்கின் செயலாளர் ஆனார்.
ஷெரிடனின் இலக்கிய வாழ்வு:
இவர் எழுதிய அனைத்து நூல்களிலும் புகழ் பெற்ற இரு நூல்கள் என்றால்
தி ரைவல்ஸ்
தி ஸ்கூல் ஃபார் ஸ்கான்டல்
என்பதாகும்.அவரது ரைவல்ஸ் என்ற நகைச்சுவை கதை அவருக்கு அபார வேற்றியை கொடுத்த்து.அதனை அடுத்து``சென்ட்.பாட்டிக்ஸ் டே’’அல்லது தி ஸ்கீமிங் லிட்ரேச்சர்’’எனப்படும்.பின்பு எழுதப்பட்ட``டியூனா’’நாடகத்திற்கு இவர் மருமகன்,``தாமஸ் லின்லி’’இசையமைத்தார்.அவரது சில சிறந்த படைப்பான  ``தி ஸ்கூல் ஃபார் ஸ்கான்டல்’’மற்றும் கடைசி பனைப்பாட``கிரிடிக்’’கிளும் இவர் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிரார்.
ஷெரிடனின் தனித்தன்மை
இவரது அனைத்து கதைகளின் நகைச்சுவையிலுமே``ரேஸ்டோரேஷன் காமிடி’’கலந்திருக்கும்.தி``கிரிடிக்’’என்ற படைப்பில் தனி ஒரு நடையை இவர் உருவாக்கியுள்ளார்.மிஸ்ஸஸ்.மெலப்ராப்

என்ற கதாப்பாத்திரம் மூலம்.இவரது வேறு சில குறிப்பிடத்தக்க கதாப்பாத்திரங்கள்,
பாப் அக்ரிஸ்
சர் ஃரட்புல் ப்லஜியரி,லேடி டியசில் என்பதாகும். என்ற கதாப்பாத்திரம் மூலம்.இவரது வேறு சில குறிப்பிடத்தக்க கதாப்பாத்திரங்கள்,
பாப் அக்ரிஸ்

சர் ஃரட்புல் ப்லஜியரி,லேடி டியசில் என்பதாகும்.

திங்கள், 7 மார்ச், 2016

பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி..!!

மும்பையை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Image result for bank of india

பணி: சார்டர்டு அக்கவுண்டன்ட்

காலியிடங்கள்: 20

வயதுவரம்பு: 21 – 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: சார்டர்டு அக்கவுண்டன்ட் எனப்படும் சி.ஏ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழுவிவாதம், நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையங்கள்: எழுத்துத் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும். எழுத்துத் தேர்வை தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட முக்கிய பெருநகரங்களில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bankofindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் ரூ. 600.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.03.2016

மேலும் முழுமையான விபரங்கள் அறிய www.bankofindia.co.in/english/career.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.

கண்ணீரை கொண்டு சர்க்கரை நோயை கண்டறிய முடியும்..!!

காண்டாக்ட் லென்ஸ் மூலம் உடலில் இருக்கும் சர்க்கரை அளவை கண்டறியும் புதிய கருவியை கூகுள் கண்டறிந்திருக்கின்றது. வாடிக்கையாளர்களின் கண்ணீரின் மூலம் அவர்களின் உடலில் இருக்கும் சர்க்கரை அளவை கண்டறிய முடியும் என கூகுள் நிறுவனத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கண்ணுல விளக்கெண்ணைய ஊத்திட்டு பாருங்க, இது தெரியும் ! இந்த வகை காண்டாக்ட் லென்ஸ்களை சோதனை செய்ய கூகுள் நிறுவனம் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் அனுமதி கோரியிருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் இந்த காண்டாக்ட் லென்ஸ் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை இருக்கும் என்று குவார்ட்ஸ்.காம் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



கண்ணீரை கொண்டு சர்க்கரை நோயை கண்டறிய முடியும்


லென்ஸ் நிறுவனம் பயனாளிகளின் கண்ணீரை கொண்டு உடலில் இருக்கும் சர்க்கரை அளவை கண்டறியும் திட்டத்தை அறிவித்தது. இந்த புதிய கருவியின் மூலம் விரல் நுனியில் இருக்கும் ரத்தத்தை கொண்டு சர்க்கரை அளவை கணக்கிடும் அவசியம் இனி இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. உங்களை கிரங்கடிக்கும் தொழில்நுட்ப தகவல்கள் இந்த வகை காண்டாக்ட் லென்ஸ்கள் சந்தையில் கிடைப்பது குறித்து கேட்ட போது சம்பந்தப்பட்ட அனுமதி பெற்ற பின் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 பாருங்க மக்களே நம் தொழில் நுட்பம் எப்படியெல்லாம் முன்னேற்றம் அடைகிறது..!!!

அன்புள்ள அம்மா

அன்பின் வடிவமான கனிவுள்ளம் கொண்டவள் அவள்!
     தன் குழந்தையின் சிரிப்பில் தன்னையே மறந்திடுவாள்!
முளைத்து விடுவோம் என்னும் எதிர்ப்பார்ப்பில் தான்
     மண்ணுக்குள் புதைகிறது அந்த விதை! ஆனால்
இவளோ தன் குழந்தைக்காக எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி
     தன் வாழ்க்கையையே செலவிடுவாள்!
பிள்ளையின் எச்சில் சோற்றையும் அமிர்தம் என உண்டிடுவாள்!
நிலவை காட்டி நிலாச்சோறு ஊட்டிடுவாள்!
அவளுக்கு தெரியுமா? அந்த நிலவும் ஏக்கம் கொள்ளும்;
     இந்த அன்னையின் அன்பை பெற என்று!
ஒவ்வொன்றிலும் தியாகம் செய்கிறாள்;
     அதிலும் மகிழ்ச்சித் தான் அவளுக்கு!
சிலர் வாழ்க்கையில் தான் தியாகம் செய்வார்கள் ஆனால்
     இவளோ தன் குழந்தைக்காக தன்
வாழ்க்கையையே தியாகம் செய்கிறாள்!
     மனிதரில் மட்டுமா இந்த அன்பு!
ஒவ்வொரு உயிரிலும் அன்னையின் அன்பு
     அதிகமாகிக் கொண்டே தான் இருக்கும்!
நானும் முயற்சிக்கிறேன் அவள் அன்பை வெல்ல!
     ஆனால் முயன்று முயன்று தோற்கிறேன் அந்த
தோல்வியிலும் சுகம் தான் அவள் மடியில்
     குழந்தையாய் தவழும் போது!