வியாழன், 11 பிப்ரவரி, 2016

வரலாற்று நாயகன் சார்லஸ் டார்வின்..!!




சார்லஸ் டார்வின் இவர் பரிணாம வளர்ச்சி சித்தாந்தத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர்.
இவர் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ம் நாள் இங்கிலாந்து நகரில் பிறந்தார்.
இவரது தாத்தாவும்  தந்தையும் மருத்துவர்களாக  இருந்ததால் இவரையும் மருத்துவம் படிக்க எடின்பர்க் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தார் இவரது தந்தை.
இவர் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை  பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.அப்போதெல்லாம் மயக்க மருந்து இன்றி அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதால் அந்தக் குழந்தை பட்ட வேதனையைக் கண்டும் கேட்டும் மருத்துவத்தின் மீது இருந்த ஆர்வத்தை இழந்தார்.
இது இவரது தந்தைக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அடுத்த இவர் கேம்ஃப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இறையியல் பட்டம் பெற்றார்.
அப்போது அதே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் பேராசிரியராக இருந்த ஜான் ஸ்டீஃபன் ஹேன்ஸ்லோ என்பவரிடம் நெருங்கிய நட்பு கொண்டார் டார்வின்.
அவர் மூலமாக கேப்டன் ராபர்ட்  என்பவரின் நட்பு இவருக்கு கிடைத்தது.எனவே ராபர்ட் தலைமையில் தென் அமெரிக்க கடலோரப் பகுதியில் ஆய்வு செய்ய செல்லவிருந்த HMS  BEAGLE என் கப்பலில் இவருடன் டார்வினும் 1831-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி தனது ஆய்வு பயணத்தைத் தொடங்கினர்.
ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த அந்த பயணம் தான் பரிணாம வளர்ச்சி சித்தாந்தம் உருவாவதற்கு அடிப்படை காரணமாக அமைந்தது.இந்த பயணத்தின்  போது அந்தக் கப்பல் உலகையே ஒரு வலம் வந்தது.
பல இடரும்,இன்னல்கறும் நிறைந்த அந்த பயணத்தில் தான் சேகரித்த விபரங்களையும் ஆய்வுகளையும் வைத்து அவர்  THE VOYAGE OF THE BEAGLE என்ற புத்தகத்தை வெளிட்டார்.
சிறிது நாட்கள் கழித்து பல ஆய்வுக்குப் பிறகு 1859-ம் ஆண்டு உலகையே வியப்பில் ஆழ்த்திய இயற்கையில் உயிரினங்களின் தோற்றம் என்ற புத்தகத்தை வெளிட்டார்.
அடுத்ததாக மனித பரம்பரை 1871-ம் ஆண்டு வெளியானது.இந்த நூலில் மனிதனின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி மிக விரிவாக எழுதியுள்ளார்.
இந்நூல் உராங்குட்டன்,சிம்பான்சி,கொரில்லா போன்ற குரங்குகளுக்கு உள்ள நான்கு கைகளும் ரோமமயமாய் உள்ள ஒரு மிருக பாரம்பரியத்திலிருந்து சீர் பெற்று தோன்றியவனே மனிதன் எனத் தகுந்த ஆதாரங்களுடன் காட்டுகிறார்.
இவருக்கு எழுதுவதில் அதிக ஆர்வம் இல்லை என்றாலும் மொத்ததில் பதினெட்டு நூல்களை எழுதியுள்ளார்.
அவர் கடைசியாக எழுதிய நூல் மனிதனும் மிருகங்களும் தம் உணர்ச்சிகளை வெளியிடும் விதம் என்பதாகும்.
மனிதகுல மூதாதையரின் முகவரியை உலகிற்குக் காட்டிய முன்னோடி அறிவு ஒளியான சார்லஸ் டார்வின் 1882-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி அடங்கிப் போனார்.  









சாலை



கள்ளும் முள்ளுமாக நிறைந்திருந்தேன்;
மண் சாலையாக மாற்றினார்கள்!
மண் சாலையாக இருந்தேன்;
     தார் சாலையாக மாற்றினார்கள்!
தார் சாலையாக இருந்தேன்;
     காங்கிரீட் சாலையாக மாற்றினார்கள்!
இப்படி எல்லாம் மாறினாலும் என்
     மேனி மட்டும் குழிகளாலே நிறைந்துள்ளது!
இது நான் செய்த தவறா? இல்லை
என்னை செய்தவர்களின் தவறா?
                                         
                                                                        இப்படிக்கு,
                                                              கண்ணீருடன் சாலை.

புதன், 10 பிப்ரவரி, 2016

அழகிய காடு..!!



      அந்த அழகிய மாலையில்

முன்னுரை:
ராபட் ப்ராஸ்ட் ஒரு ஆங்கில எழுத்தாளர்.பெரும்பாலும் அவர் கவிதைகளில் அவர் கடந்த அனுபவத்தை பகிர்ந்திருப்பார்.வாழ்க்கையின் இரு பக்கங்களை தெளிவாகக் காட்டுவர்.அவரது அனைத்து கவிதைகளிலுமே முடிவுரையை படிப்பவர் கையில் கொடுப்பார்,ஆனால் இந்த கவிதையில்’’மனிதன் வாழ்வில் கடந்து செல்ல வேண்டிய தொலைவு அதிகம் அதற்குள் அவன் கடமைகளை பூர்த்தி செய்ய வேண்டிம்’’என்று முடிவுரையை கொடுத்திருப்பார்.

கவிஞரின் வியப்பு:

கவிஞர் ராபட் அவரது குதிரையை ஓர் இடத்தில் நிறுத்தினார்.அந்த பனி சூழ்ந்த காடு அவரை வயப்படுத்துகிறது.கண்களை இமைக்காமல் அந்த காட்டின் எழில் கண்டு வியந்து பார்கிறார்.இந்த காட்டினெஉரிமையாளர் அருகாமையில் உள்ள கிராமத்தில் தான் உள்ளார்.இருந்தும் அவர் ஏன் இதை காணவில்லை,ஒரு வழிப்போக்கனாக எனக்கு இந்த வாய்ப்பு கிட்டி இருக்கிறது.



கவிஞரின் குழப்பம்:
இந்த காட்டின் உரிமையாளர் இங்கு கொட்டும் கடும் பனித்துளிகளால் அச்சம் கொண்டிருப்பாரோ?ஆனால்,எனக்கும் என் குதிரைக்கு அந்த பனி ஓர் அழகான காட்சியாகதான் தென்படுகிறது.என் குதிரை அதன் மணியை அடித்து என்னை சுய நினைவிற்கு கொண்டுவர முயற்சி செய்கிறது.என்னை அழைத்து சென்று அதன் பணியை முடிக்க நினைக்கிறது.
                                                    
அழகின் மயக்கம்:
கவிஞர் அந்த காட்டின் அழகில் மூழ்கி இருக்கிறார்.மாலை நேரத்தில் கொட்டும் பனி சூழ்ந்த பசுமையான காடு,ஓர் அரிய காட்சி.ஆனால், அதே நேரம் அந்த நள்ளிரவில் அதிக நேரம் செலவிடுவதில் அர்த்தமில்லை.வாழ்கையில் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் அவருக்கு உண்டு.ஆகையால்,அங்கிருந்து செல்ல முடிவு செய்கிறார்.




காட்சிகளின் உண்மையான அர்த்தம்:
இந்த கவிதையில் கூறப்படுள்ள அனைத்த பொருள்களில் ஓர் அற்தம் உண்டும்.அந்த அடர்ந்த காடு வாழ்கையை பிரிதிபலிக்கிறது(இன்ப,துன்பம்). மாலை நேரம் வாழ்வில் கடந்து செல்ல வேண்டிய தொலைவை காட்டுகிறது. அந்த காட்சிகள் மயக்கம் மரணத்தை பிரதிபலிக்கிறது.

முடிவுரை:
கவிஞர் தனது முடிவுரையில்

‘’வாழ்வில் கடந்து செல்ல வேண்டிய தொலைவிற்குள் கடமைகளை முடிக்க வேண்டும்’’என்ற கருத்தினை ஆழமாக பதிவு செய்கிறார்.

முகநூலில் இருக்கும் பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தும் சைபர் குற்றவாளிகள்..!!



சமீபத்தில் பிரபல ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரை ஒன்று தீவிர பேஸ்புக் பயனர்களை சற்றே கலக்கத்தில் ஆழ்த்தில் உள்ளது.குறிப்பாக பேஸ்புக்கில் நொடிக்கு நொடி தம்படம்(செல்ஃபி) பதிவேற்றும் பெண்களுக்கு எச்சரிக்கையாகவே அமைந்துள்ளது.முகநூலில் இருக்கும் மிகப்பெரிய குறைப்பாடு யாருடையக் கணக்கில் இருந்தும் யார் வேண்டுமானாலும் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.இந்த ஒரு விஷசயத்தை பயன்படுத்திக் கொண்டுள்ள சைபர் குற்றவாளிகள் ஆபாச வலைத்தளங்களை பிரபலப்படுத்த முகநூலில் இருக்கும் புகைப்படத்தை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.இதற்காக இயங்கும் குழுக்கள் முகநூலில் இருக்கும் அழகானப் பெண்களின் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்துக் கொண்டு அவர்களை தன்னோடு தொடர்புடைய மற்றொரு குழுவிற்கு அனுப்புகிறது.

அந்தக் குழு குறிப்பட்ட அந்த பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக மார்ப் செய்து தங்களின் ஆபாச வலைத்தளங்களுக்கு பயன்படுத்திக்  கொள்கிறது.இப்படி சிக்கும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகம் என்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக சைபர் குற்றங்கள் நிபுணர் கிஸ்லே சவுத்ரி கூறுகையில் இன்று நாம் சந்திக்கும் மிக அச்சுறுத்தலான சைபர் குற்றங்களில் ஒன்று தான் முகநூலில் உள்ள பெண்களின் புகைப்படத்தை ஆபாச வலைத்தளங்களுக்கு பயன்படுத்துவது தான்.கவரும் விதமாக இருக்கும் பெண்களின் புகைப்படத்தை தான் இத்தகைய குற்றங்களுக்கு பெரிதும் பயன்படுத்துப்படுகிறது.இது தொடர்பாக நாங்கள் மிகத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

பாரதியார்

                                         

                     
சீறிவரும் சூறாவளியை
மரங்கள் அறிமுகப்படுத்துவது போல;
தமிழுக்கு உணர்ச்சியூடும் கவிதைகளை
அறிமுகப்படுத்தியவன் நீ!

எதையும் அச்சடித்தாற் போல்
காட்சிப்படுத்தும் திறமையை - உன்
வீட்டுச் சுவரில் தொங்கும்
கண்ணாடியிடமிருந்து தான் கற்றாயோ?

உன் வீர முழக்கத்தை, பிஞ்சு குழந்தைகள்
செவி வழி கேட்டாலும்,
அரும்பாத மீசையை தான்
தடவி போருக்கு சென்றிடுமே!

எத்தனை வருமை சுமையாய்
உன்னை வாட்டினாலும்,உன் கைகள்
சுமந்தது என்னவோ புத்தக சுமையைத் தான்!
அந்த யானையும் உன் கவிதையை
கேட்டிருக்கும் என்று நினைக்கிறேன்;
அந்த வியப்பில் தான் – உன்னை
தூக்கி மகிழ்ந்திருக்கும்; ஆனால்
அதற்கு தெரியுமா நடக்கும்
விபரீதம் என்ன? என்று

உள்ளத்தில் ஒளி உண்டானால்
வாக்கிலே ஒளி உண்டாகும் என்பர்- அதுபோல
நீ எங்கள் உள்ளத்தில் ஒளியாய் நின்று
எங்கள் வார்த்தையிலே ஒளிபொருந்திய
உணர்ச்சி கடலாய் வெளிப்படுகிறாய்!

தமிழே உன் உயிர் மூச்சு என்றாய்!
தமிழ் அன்னை எவ்வளவு காலம் தவமிருந்தாளோ?
உன்னை பெற்றெடுப்பதற்காக என்று தெரியவில்லை!

பாரதி பெண் சுதந்திரத்தின் போர் வாள் நீ!
தமிழுக்குச் செல்ல பிள்ளை நீ!
இந்த உலகை விட்டு உன் உடல் மறைந்தாலும்;
என்றும் எங்கள் மனதில் குடிகொண்டிருப்பவன் நீ!