வெள்ளி, 31 ஜனவரி, 2020

வெற்றி

வெற்றி என்பது
மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும்
அயராமல் முயற்சியைத்
தொடர்வதால் கிட்டுகிறது.

வியாழன், 30 ஜனவரி, 2020

வில்லிபாரதத்தின் மரபுக் குறிப்பு

மகாபாரதப் பருவங்களில் வில்லிப்புத்தூராரால் எழுதாமல் விடுக்கப்பட்ட பருவங்கள் 8. அவை,
1.ஸ்திரீ பருவம்.
2.சாந்தி பருவம்.
3.அனுசாசன பருவம்.
4.அசுவமேத பருவம்.
5.ஆரம பருவம்.
6.மௌசல பருவம்.
7.மகாப்ரஸ்தான பருவம்.
8.ஸ்வர்க்கா ரோஷண பருவம்.

தனிமரம்

நான் தனி மரம்தான்
பல கிளைகளைப் படைப்பேன்
அதில் பாசத்தைக் கொடுப்பேன்
நேசத்தைச் சோலையாக்குவேன்
நந்தவனச் சொல்லை ஏற்று நாளும்
அதை வளர்ப்பேன்
நல்லதோர் உலகம்
அதை நாளை நான் கொடுக்க உழைப்பேன்.


22.7.19 அன்று தினத்தந்தி  நாளிதழில் வெளியான கவிதை.

குணம்

அறிவு உங்களுக்கு
அதிகாரத்தை வழங்கலாம்
குணம்தான்
மரியாதையைப் பெற்றுத் தரும்

குறுகிய வாழ்க்கை




நாம் ஆசைப்படும் பல விஷயங்கள் கேட்கும்போது கிடைப்பதில்லை
அது நமக்குக் கிடைக்கும்போது தேவையில்லாத ஒன்றாக மாறிவிடுகிறது.
எனவே நாம் வாழும் இந்தக் குறுகிய வாழ்வில் அனைவரிடமும் அன்பாகவும், பிறருக்கு விட்டு கொடுத்து, எதிர்காலைத்தை எண்ணிக் கவலைப்படாமல் இப்போது நம் கையில் உள்ள நிஜமான நிகழ்காலத்தைச் சந்தோசமாக வாழ்வோம்.

செவ்வாய், 28 ஜனவரி, 2020

திருமணத்தின் போது மோதிர விரலில் மோதிரம் அணிவது ஏன்?

நமது இரண்டு கைகளிலும் உள்ள நடு விரல்களை உட்புறமாக மடக்கிக்கொள்ள, மற்ற அனைத்து விரல்களையும் தனித்து பிரிக்க முடியும். ஆனால், மோதிர விரலை மட்டும் தனித்துப் பிரிக்க முடியாது. அதுபோல, கணவனும் மனைவியும் தங்களது இன்ப, துன்பங்களில் எப்போதும் ஒருவருக்கொருவர் பங்கேற்று அனுசரணையாக வாழவேண்டும். இக்காரணத்தினாலேயே திருமணத்தின்போது மோதிர விரலில் மோதிரம் அணிவிக்கப்படுகிறது.

அன்புத் தோழி

எனது தாயிடம் இருந்து கிடைக்காத சுகத்தை
உனது கைத்தீண்டலே எனக்கு அளித்தது

ஆனால்

ஆண் : நான் உங்களை விரும்புகிறேன்.
பெண் : உனது தகுதி என்ன?  சொந்தமாக வீடு வைத்து இருக்கிறாயா?
ஆண் : இல்லை. ஆனால்...
பெண் : பி. எம். ட்புல்யு. கார் வைத்திருக்கிறாயா?
ஆண் : இல்லை. ஆனால்...
பெண்: ஆனால் என்று சொல்வதை நிறுத்து..வேலையாவது பார்க்கிறாயா?
ஆண் : இல்லை. ஆனால்...
பெண் : போதும், போதும் நிறுத்து. எந்தத் தகுதியும் இல்லாத உன்னை
               எவ்வாறு ஏற்றுக்கொள்வது...
               (பெண் சென்று விடுகிறாள்)
ஆண் : எனக்குச் சொந்தமாக வீடு இல்லை. ஏனெனில் எனக்குச் சொந்தமாக வில்லா உள்ளது. என்னிடம் லம்பொஉர்க்ஹினி கார் இருக்கும்போது அதை விட விலை குறைவான பி. எம். டபில்யு.-க்கு அவசியம் இல்லாது போயிற்று. சம்பளம் கொடுக்கும் முதலாளியாக இருக்கும் நான் மற்றவர்களிடம் கைகட்டி வேலை பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. என்னை ஏற்றுகொள்ளும் தகுதி அவளுக்குத்தான் இல்லை.

முயற்சி

கருக்காத வெண்மேகம் மழையாகாது
செதுக்காத கல் சிற்பமாகாது
உரசாத தீக்குச்சி நெருப்பாகாது
தெளிவில்லாத நீரில் முகம் தெரியாது
அதேபோல முயற்சி இல்லாத கனவு வெற்றியாகாது


15.7.19 அன்று தினத்தந்தி  நாளிதழில் வெளியான கவிதை.

செவ்வாய், 21 ஜனவரி, 2020

அம்மா

சுட்டெரித்திடும் சூரியனும் நீ
வளம்தரும் மழையும் நீ
மனதில் விதை விதைத்தவளும் நீ
மவுனத்தின் காரணமும் நீ
மகிழ்ச்சியின் காரணமும் நீ
தேவதையின் வடிவமும் நீயே
என் தாயும் நீயே... அம்மா...


8.7.19அன்று தினத்தந்தி  நாளிதழில் வெளியான கவிதை.

நேரம் இல்லை

இதயம் நொருங்குவதற்கு இது கண்ணாடி இல்லை
கதவுகள் திறப்பதற்கு இது வீடு இல்லை
மனதிலே வைப்பதற்கு இடம் இல்லை
என் கதையைச் சொல்வதற்கு இது நேரம் இல்லை

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

குழந்தை

மனதைப் பறிக்கும் பொன்நிறம்
விழிகளைக் கவர்ந்த உன் புன்னகை
செவிகளில் ஒலிக்கும் உன் சிறிய சொற்கள்
புதையலைப்போல் என் கையில்
கிடைத்த நீ என் செல்வா

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

தென்னை மரமே

ஒற்றைக் காலில் நின்று உலகைப் பார்க்கிறது
தாகம் தீர்க்க இளநீர் தருகிறது
குடிசை அமைக்க ஓலையைத் தந்தது
தாயைப்போல் இளம் குருத்தில் இருந்தது
தேங்காயாக வளர்வதற்குப் பத்துமாதம்
பிள்ளைபோல் சுமந்த தென்னைமரமே

ஈ.கன்னிகா
இளங்கலை இரண்டாமாண்டு ஆங்கிலம்