சனி, 3 டிசம்பர், 2022

புங்கை மரம்

புங்கையின் அடியில்
டயரை கட்டி ஊஞ்சலாடினோம்...
ஆயிரம் அரியணையில் 
அமர்ந்தாலும் கிட்டாத மகிழ்வு
வாழ்க்கையைத் திரும்பி பார்த்தேன்
உதடுகளில் பேச்சில்லை
கண்ணீர் நிற்கவில்லை
சில்லென்று தீண்டிச்செல்லும்  
காற்றைப் போல
விரைந்து கடந்ததே 
அந்நாட்கள்........
ஜவ்வு மிட்டைமென்று
நாவைப் பார்த்து 
மகிழ்ந்தோம்......
தாத்தா சட்டையில்
 சில்லறை திருட - பாட்டி பின்னாலே துரத்த
கண்ணாமூச்சி விளையாடினோம்...
ஆற்றங்கரையில் சிப்பிபொருக்க
துணியை வைத்து மீன் பிடிக்க
நாள் முழுதையும் தேய்த்தோம்....
விடுமுறை முடிய இரண்டு நாட்கள்
அப்பா கதவைத் தட்டியதும் 
கண்களின் கதவைக்
கண்ணீர் தட்டியது.... 
ஒரே நொடியில்
பணமரம் ஏறியது,
மாங்காய் திருடியது,
ஊர்ப்பொட்டிக்கடை,
நீச்சலடித்த கிணறு,
கண்முன் வந்து சென்றது....
விருப்பமின்றி கிளம்பினேன் 
இன்று நினைவுகளா ய்
என் ஓரங்களில் 
வடிந்தது......
  D.Diayana   II -BA English.  Ksrcasw