வியாழன், 14 செப்டம்பர், 2017

ஆண், பெண் மூளையின் வித்தியாசம் அறிவோம்

உண்மையில் ஆண், பெண் இரு பாலினத்தவருக்கும் உடல் மட்டும் வித்தியாசப்படவில்லை, மூளையும் வித்தியாசப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த ஆண்களும், பெண்களும் நினைப்பது என்னவென்றால், ஆண், பெண் இருவருக்கும் உடலமைப்புகள் தான் வித்தியாசம். மற்றபடி மனம், மூளை போன்றவை ஒன்றுதான் என்று நினைக்கிறார்கள். உண்மையில் இரு பாலினத்தவருக்கும் உடல் மட்டும் வித்தியாசப்படவில்லை. மூளையும் வித்தியாசப்படுகிறது.

இப்படி மூளை வித்தியாசப்படுவதால் தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாக புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். ஆணின் மூளையும், பெண்ணின் மூளையும் வெவ்வேறு விதமாக வேலை செய்கின்றன என்பதுதான் அவர்கள் சொல்லும் காரணம்.

பெண்களின் மூளை அமைப்பு மூன்று மையங்களை கொண்டதாக இருக்கிறது. முதல் மையம் உணர்ச்சிகளை அப்படியே கிரகித்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இரண்டாவது மையம் மொழி வளத்துக்கானது. இது வார்த்தைகளையும், உரையாடலையும் ரசிக்கும் தன்மை கொண்டது. மூன்றாவது மையம் முகத்தின் சாயலை கொண்டு ஒருவரை துல்லியமாக எடைபோடும் தன்மை கொண்டது.



ஆண் மூளையிலும் இந்த மூன்று வகையான மையங்கள் உள்ளன. ஆனால், அது வேறுவிதமாக செயல்படுகிறது. ஒரு விஷயத்தை பெண் பேசுவதுபோல் விவரித்து, கொஞ்சம் வளவளவென்று இழுத்து கூற முடிவதில்லை. ஒரு ஆண், தான் உணரும் அந்த உணர்ச்சியை ஒரு பெண்ணைப் போல் மொழியால் விவரிக்க முடிவதில்லை. எதிராளியின் முக அமைப்பை கொண்டு அவர் மனதை புரிந்துகொள்ள முடிவதில்லை.

ஆணுக்கான மூளை அமைப்பு கண்ணில் காணும் காட்சிகளுக்கே முக்கியத்துவம் தருகிறது. அதனால்தான் அவனுக்கு பெண்ணின் கவர்ச்சியான காட்சிகளை பார்த்தால் மட்டுமே மகிழ்ச்சியளிக்கிறது. பெரும்பாலும் அழகான பெண்களையே ஆண்கள் விரும்புவதற்கு மூளையே காரணம். ஆனால், பெண்ணின் மூளை இப்படியல்ல. பெண்ணுக்கு பார்வை இன்பம் என்று ஒன்று இல்லை. அதனால் பெண்ணுக்கு பார்ப்பதால் மகிழ்ச்சி கிடைப்பதில்லை.

அவளுக்கு பேச்சு மூலம்தான் மகிழ்ச்சி கிடைக்கிறது. ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் ஆணை பெண்களுக்கு பிடிக்கிறது. ஆண் அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இதுபோன்ற அடிப்படையான குண வேறுபாடுகள் ஆண், பெண் இருவருக்கும் உண்டு. இதைப் பற்றி சரியான புரிதல் இரு பாலருக்கும் இல்லாததாலேயே காதலிக்கும் போதும், திருமணத்திற்கு பிறகும் ஏமாற்றம் அடைகிறார்கள்.

ஆண் தன்னிடம் ஆசையாக நாலு வார்த்தை பேசவில்லை என்று பெண் புலம்புவதும், தனது பாலியல் தேவைகளை பெண் புரிந்துகொள்ளவே இல்லை என்று ஆண் நொந்துகொள்வதும் நடந்து கொண்டேயிருக்கிறது. மண வாழ்க்கையிலும், காதலிலும் விரிசல் ஏற்படாமல் இருக்க ஆண், பெண் புரிந்து கொள்தல் மிக மிக அவசியம் என்கிறார்கள் உளவியலாளர்கள்.படம்


இலைச்சாற்றில் ஆரோக்கியம் :-

* அருகம்புல் சாறு - ஆரோக்கியத்தை தரும்.
* இளநீர் சாறு - இளமையை கொடுக்கும்.
* வாழைத்தண்டு சாறு - வயிற்றுக்கல் போக்கும்.
* வல்லாரை சாறு - நரம்பு வலிகளை போக்கும்.
* புதினா சாறு - விக்கல் போன்ற நோய்களை நீக்கும்.
* நெல்லிக்கனி சாறு - நல்ல அழகை கொடுக்கும்.
* துளசி சாறு - தொண்டைச்சளி, சோர்வு நீக்கும்.
* முசுமுசுக்கை சாறு - மூக்கு நீர் வற்றும்.
* அகத்தி இலை சாறு - அடிவயிற்று மலத்தை நீக்கும்.
* கடுக்காய் சாறு - கட்டுடலை கொடுக்கும்.
* முடக்கத்தான் சாறு - மூட்டுவலி போக்கும்.
* கல்யாண முருங்கை சாறு - உடலை குறைக்கும்.
* தூதுவளை சாறு - தும்மல், சளி எல்லாம் நீக்கும்.
* ஆடாதொடா சாறு - ஆஸ்துமா தொல்லை நீக்கும்.
* கரிசலாங்கண்ணி சாறுதொடர்புடைய படம் - கண் பார்வை அதிகரிக்கும்.