திங்கள், 17 பிப்ரவரி, 2020

பவித்திரம்

 91.அன்புள்ள ஆசிரியருக்கு
அன்புள்ள ஆசிரியருக்கு
அன்பளிப்பு அளிப்பதற்கு
ஆசான்வில் தொடுப்பதற்கு
அமுதமதில் தெளிப்பதற்கு
அர்த்தங்களை உரைப்பதற்கு
ஆசான்களே கூடி வருகஎமக்கு
அறிவுப்பொருள் தந்து அருள்க

92.காலம்
வாழ்ந்த காலம்
கவிதையைப் போன்றது
வாழும் காலம்
கடிதமே ஆனது
வாழ்க்கையே ஓர்
கதைபோல் தோன்றுது

93.சேதி
பாடியது பாதி
பாடுவது மீதி
நாடே நம் வீதி
நன்மை தரும் நீதி
நட்பே  நம் ஜாதி
இதுவே ஏன் சேதி

94.மறுக்குமா
காண மறுக்குமா
நம் கண்கள்
கேட்க மறுக்குமா
நம் செவிகள்
பேச மறுக்குமா
நம் இதழ்கள்
என் மனம் மறுக்குமா
உன்னை நினைக்க

95.இல்லை
நீ ஒன்றும் அழகில்லை
அழகால் எதுவும் பயனில்லை
உன் அறிவிற்கோர் எல்லையில்லை
ஆனாலும் அதை நீ வாடவிடுவதில்லை
நீ அன்பிற்கு அணையிட
அது ஆற்றோர  அலையில்லை
உனக்கு அக்கடலினும் சுமை கொள்ளை
ஆனால் அதை நீ பொருட்படுத்தவில்லை
எனவே நீ வெற்றியை விட்டதில்லை
தோல்வியைத் தொட்டதில்லை

96.என் ஆசிரியை
என் செவிலித்தாயே
என்னை நீ ஜெவித்தாயே
நீர் ஓர் பெண் மகளின் தாயே
எம்முள் ஓர் பொன்மகளும் நீயே
உன் ஆற்றல்தான் உன் மேனி
அச்சமின்றி பணியாற்றலாம் வா நீ
உந்தன் சிரிப்பே  உனக்குச் சிறப்பு
உந்தன் உன்னதமேஇங்கு
தோன்றுது எனக்கு

97.உனக்கென நான்
பூ மணம்
உதிரியாகும் வரை நிலைக்கும்
என் மனம் உனக்காக
உயிர்சாயும் வரை நிலைக்கும்

98.அகிம்சையின் காந்தியடிகள்
அமைதி வழி சுதந்திரம் பெற்ற
ஆத்ம சாந்தியே
அறம்வழி வாழ்க்கை வாழ்ந்த
அமுத சுரபியே
அன்றாடம் அன்பை வளர்த்த
அய்யனும் நீயேஎமக்கு
ஆதரவாகத் தோள் தந்த
ஆற்றல் தலைவனே
அச்சம் இன்றிப் போராடி
அந்நியனை வென்றவனே
அகிம்சை நாயகனே
மகாத்மா காந்தியானவனே

99.உனைப் பிரிந்தும் நான் உன்னால் தானே
உயிர்துறக்க நினைத்தால்கூட
உனைப்பிரியும் நிலையென்றேன்
என் உயிராக நீ நின்றால்கூட
உனைப்பிரிந்து நான் நின்றேன்
விழி இமைக்காது காத்திருக்க என்
விழியின் எல்லை நான் மறக்கிறேன்
விழிக்கையிலும் இருளில் வாழ்ந்து
இங்கு நான் தாழ்கிறேன்
இமைக்கையிலும் ஒளியைக் கண்டு
பயந்து நான் வீழ்கிறேன்
என் உயிரே இன்னோடியும் உன்னை
நினைத்தே வாழ்கிறேன்
உன்னைக் கண்ட நொடியினிலே
சாகாவரம் பெற்றிருந்தேன்
இலையுதிர் காலத்திலும் 
இரையாமல்தான் நானிருந்தேன்
என் இதயம் உன்னால் இரையா
இறப்பும் இன்று இனிதென்றேன்
என்னை அறியா நான் அழுகையிலே
மழைத்துளி போலும் என்றிருந்தேன்
சுட்டெரிக்கும் வெய்யிலிலும் குளிரால்
நானும் உறைந்து நின்றேன்
சுலைப்பணிக் குன்றிலேறி  வெட்கை
உதறி நான் சென்றேன்
உன்னைக் காணும் வரம் கிடைத்தால்
ஏறி மலையை நான் அணைப்பேன்
ஆழ்கடலை அதில் தெளிப்பேன்
பாலை வனத்தினில் பயிரிடுவேன்
பசும்பொன் அதில் விளைப்பேன்
பரிசம் போட நீ வருக!!!! பாவை மனம் அமுதனுக!!!!
காத்திருப்பேன் மனமுருக!!!! என்னைக்
காண வந்து இக்கவி பெறுக!!!!
கவிதை ரசம் நீ பருக!!!! காட்சி வசம்தான் தருக!!!!

100.மாயமாய்
மேகத்தில் கருநீலமாய்
வானம்போல் தொலைதூரமாய்
நிலவைப்போல் வெண்மணமாய்
சூரியனைப்போல் வெகுவேகமாய்
பூமியைச் சுற்றி வந்தாயே வீரமாய் நான்
காற்றைப்போல் சில காலமாய் உன்னைத்
தொடர்கிறேனே உன் தேகமாய் இன்று
நான் உன்னில் தொலைந்தேனே
ஏதோ மாயமாய்

பவித்திரம்

82.கனவு
ஒரு நாள் கண்ட கனவு
ஒரு நாள் ஆகும் நினைவு
இருபால் கொண்ட துணிவு
நம் மனம் பெற்ற அமைவு
பெற்றதோர் திருமணம் என்ற உறவு.

83.நட்பு
கனம் கண்டு தயங்காதிருந்தால்
குணம் கண்டு மறுக்காதிருந்தால்
இனம் கண்டு வெறுக்காதிருந்தால்
இறுதிவரை இணைந்திருப்பவர்கள் மட்டுமல்ல
இரண்டு நிமிடம் பேசிச் சிரித்தவர்களும் மட்டுமல்ல
இமையசைக்கும் நேரத்தில் இழந்தவர்களும் நண்பர்கள் தான்

84.என்னுள்ளே எண்ணங்கள்
ஏதோ எண்ணங்கள் எண்ணுள்ளே தோன்றியதே
அதை எண்ணித்தான் பார்க்கையிலே
என்னைத்தான் காணலயே
விடியலையே காணாமல் என் விழிகள் இருக்கிறதே
இருளைத்தான் போக்கிவிட்டால் - என்
இதயம்தான் தவிக்காதே
எரிமலையே வெடித்தாலும் என்னுள்ளே
பனித்துளியாய்ப் பொழிகிறதே
பனிமலையே சரிந்தாலும்உன்
வெப்பம் என்னைக் கொல்கிறதே
சூரியனாய் நீ சுட்டெரித்தால்
சுகமாய் நான் செத்தொழிவேன்
நிலவாய் நீ ஒளிதந்தால்
நீங்காமல் நின்றிருப்பேன்
நீதிசொல்ல நீ வந்தால்
குற்றங்கள்தான் வாழாதே
நிஜத்தைச் சொல்லி நீ சென்றால்
என் மனமும் தான் வாடாதே
சொல்லாமலே உன் விழிசொல்ல
மெளனம் கொண்டு நீயும் ஏங்காதே

85.உன் நினைவு வேண்டும்
உன்னைப் பார்த்த சில நாட்கள் கடக்க நிலையாகும் 
இன்னேரத்தில் நீ என்னைப் பிரிய நேர்ந்த காரணம் என்னவோ 
அறிய மனமில்லை
உன் அன்பில் வாழவே இந்நொடியும் எனக்கு ஆசை கொள்ளை
அழாத விழிகள் உலகில் இல்லை அழுகின்ற விழிகள் உனக்கு
கொள்ளை புன்னகை தேடியதே உன்னை என் இடம் எங்கேயென
புலம்பலும் கூடியதே நீதானே என்
உன்னுள் உணா்வாய் வாழ ஆசைப்பட்ட என் இதயத்திற்கு
நினைவாய் வாழும் தகுதியேனும் கிட்டுமோ தெரியவில்லை
ஆனால் உன் நினைவோ என் நிறைவிலும் கூடநிற்கும்
நீண்டநாள் கனவு, நனவாகும் என்று எதிர்பார்ப்பது வழக்கம்
ஆனால், இன்று என் சிலநாள் நினைவு நீண்டகாலக்
கனவிலும் வேண்டும்
உறக்கத்தில் அணையா உயிராக
உணர்வில் உந்துகோலாக
உன் உறவு வேண்டுமடி என் உயிர்தான் வாடுமடி

86.தேடல்
உன்னைக் காணாத காரணமே
என் கண்கள் கலங்க
உன்னுள் வாழ்கின்ற உணர்வுகளே
என் காதல் சிறக்க
உன்னகம் சேர நாடுகிறேன்
உன்னைத்தான் - நான்
இங்கு தேடுகிறேன்

87.உன்னைத் தொடர்வேன்
தொட முடியாத உயரத்தை
நான் உன்னால் தொட்டேன் அன்று
இன்று உன்னுடன் தொடர்கிறேன்
என் உயிருடன் என்றும் தொடர்வேன்

88.வீழ்ந்தேன்
என் கண்கள் என்ன பாவம் செய்தன
உன்னைக் காணாது தவிக்கின்றன
என் நெஞ்சம் கொண்ட தவத்தின் வரவோ
உன் நினைவு கொள்கிறது
ஏன் பஞ்சம்? உன்னைக் காணாமலா
நீ சொல் கொஞ்சம் இதுவே முடிவா ?
நம் காதல் என்ன சிதறிய கடுகா
விரும்பியே விடத்தினை விழுங்கிவிடவா
வீரத்தை இழந்து வீழிந்தேன்  தலைவா

89.ஓடு
உயிர்வாழு உறவோடு
உன்னதம் உன் உயர்வோடு
உமக்காக விரைந்தோடு
வேர்த்தாலும் கரைந்தோடு
காற்றோடு கலந்தோடு
காயங்கள் கடந்தோடு
தலைகனம் தவிர்த்தோடு
சரிந்தாலும் நீ மீண்டும் எழுந்தோடு

90.சிறந்தது
குயிலின் அழகை விட
மயிலின் அழகு சிறந்தது
மயிலின் குரலை விட
குயிலின் குரல் சிறந்தது