சனி, 22 செப்டம்பர், 2018

சில தமிழாக்கப்பட்ட தன்னம்பிக்கை பொன்மொழிகள்;

             சில தமிழாக்கப்பட்ட தன்னம்பிக்கை பொன்மொழிகள்;

1. பலர் தொடங்குகின்றனர் சிலரே முடிக்கிளனர்.( beginners are many         finishers are few)

2. கற்பது கடினம் ஆனால் தோற்றுப்போவது அதனினும் கடினம். (studying sucks but not more than failure )

3.மிகப் பெரிய வெற்றியே மிகப் பெரிய பதில். ( the best revenge is massive success )

4. பணி முடியும் வரை தூங்காதே. (Don't sleep until the job is done)

5. கணவு இல்லாதவர்களுக்கே காரணங்கள் படைக்கப்பட்டன. (Excuses are for those who have no desire to succeed)

6. வைரமாக முதலில் வெட்டுக்களை தாங்க பழக வேண்டும். (To be a diamond, you should have guts to bear cuts )

7. நீ கற்றுக்கொள்ள தயாராக இல்லை எனில் எவராலும் உனக்கு உதவ இயலாது, நீ உறுதியாக இருந்தால் எவராலும் உன்னை தடுக்க முடியாது. (If you are not willing to learn, no one can help you. if you are determined to learn, no one can stop you).

8. உனக்கு நீ ஏற்படுத்திக்கொண்ட சுவருகளே உன்னை தடுக்கின்றன. (You are confused only by the walls you build yourself).

9. நமது முளை ஒரு ஆயுதம் அதில் ஏற்றப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். (Your mind is a weapon keep it loaded)

10. எல்லா முடிவும் ஒரு புதூ ஆரம்பம். (Every end is a new beginning).

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

விவேகம்

வெல்லும் வரை வேகமாக இரு
வென்ற பின் விவேகத்துடன் இரு
ஏன்எனில் வேகமும் விவேகமும்
இல்லா வாழ்க்கை சக்கரம் இல்லா
வண்டி போல நின்றுவிடும்........

புதன், 19 செப்டம்பர், 2018

தித்திக்கும் தமிழே

தித்திக்கும் தேனைவிட சுவையான தமிழே !!!
உன்னை என்னவென்று போற்றுவேன் !!!
திசையெங்கும் தடையின்றி சுலபமாக பரவியிருக்கிறாய் நீ !!!
தினமும் விடையின்றி பலமாக யோசிக்கிறேன் உன்னை மட்டும் எவ்வாறு மக்கள் போற்றுகிறார்கள் என்று!!!
தேசம் முழுவதும் உன் வாசம் வீசுகிறதே!!!
உன்னோடு நட்புக் கொள்ள ஆசை படுகிறேன் நான்!!
செம்மொழியாம் தமிழ் மொழி
என  புகழ்ந்து  பிறநாட்டினர் பெருமைபடுகிறனர் !!!
எம்மொழியாம் தமிழ்மொழி என நான் மகிழ்ந்து பிறநாட்டினரிடம் 
பெருமைப்பேசிவருகிறேன் !!!
   வெறும் பேச்சில் மட்டுமல்ல!!!
       ‌ என் உயிர் மூச்சிலும் !!!
           வாழ்க தமிழ்!வளர்க தமிழ்!!

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

விசுவாசம்


எந்த இடத்தில் நீ இருந்தாலும்
எவ்வுயரத்தில் நீ பறந்தாலும்
ஊக்குவித்வனையும் உதவியவனையும்
ஒரு போதும் மறக்காமல் நன்றியுடன் இரு
ஏன் எனில் நம்பிக்கையும் நன்றிவிஸ்வாசமே
உன் வெற்றியின் கரு.......

வியாழன், 13 செப்டம்பர், 2018

வாழ்க்கை


நம் வாழ்க்கை ஒரு கட்டுரை
நம் பிறப்பு அதற்கு ஒரு முன்னுரை
நாம் வாழ்கை அதற்கு ஒரு பொருளுரை
ஆனால் நம் இறப்பு அதற்கு ஒரு முடிவுரையாக இல்லாமல்
நம் வாழ்வின் முத்திரையாக இருக்க வேண்டும்