புதன், 25 அக்டோபர், 2017

பாடித்ததில் பிடித்தவை

நேற்றைய இழப்புகளையும் நாளைய எதிர்பார்ப்புகளையும் மனதில் சுமந்து நம்மை அறியாமலே நாம் நமது நிகழ்கால நிம்மதியை இழந்து கொண்டு இருக்கிறோம் என்பதே
எவரும் அறிந்து கொள்ள விரும்பாத எதார்த்தமான உண்மை!!

நிரந்தரம் எதுவுமில்லை என அறிவு உணர்ந்தாலும் மனது அதனை ஏற்க மறுத்து அடங்காத ஆசைகளை அது தனக்குள்ளே சுமக்கிறது!!!
nirandharam க்கான பட முடிவு

செவ்வாய், 24 அக்டோபர், 2017

ஆறிலும் சாவு நூரிலும் சாவு





மகாபாரதத்தில் கர்னனின் தாய் குந்தி தேவி பாண்டவர்களுடன் கர்னனை சேர்ந்து கொள்ளுமாறு கேட்கிறாள் அப்போது" நான் பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவதாக வந்தாலும் எனக்கு சாவு நிச்சயம் .கெளரவர்களுடன் சேர்ந்து நூறாவதாக வந்தாலும் எனக்கு மரணம் தான் ... எனவே செய்நன்றி காரணமாக நான் கெளரவர்களுடனே இருக்கிறேன் "என்று தன் தாய்க்கு மறுமொழி கூறினான் கர்ணன் ...அதாவது ஐந்து பேருடன் ஆறாவதாக சேர்ந்தாலும் மரணம்  நிச்சயம் நூறு பேருடன் சேர்ந்தாலும் தனக்கு மரணம் நிச்சயம்  என்பது தான் இதற்கு விளக்கம்.....
mahabharatham க்கான பட முடிவு

எனது கை

நீ விழுந்த போதெல்லாம் தாங்கிப் பிடிக்கும் இந்தக் கை..

மனம் உடையும்போதெல்லாம் தட்டிக் கொடுக்கும் இந்தக் கை..

தனியே நீ அழும்போதெல்லாம் உன் கண்ணீரைத் துடைக்கும் இந்தக் கை..

அது வேறு யார் கையும் அல்ல.. உன்னுள் உள்ள உனது தன்னம்பிக்கை..

அதை மட்டும் ஒரு போதும் இழந்து விடாதே..!
thannambikkai க்கான பட முடிவு

தினம் ஓர் சிந்தனை

தைரியம் எண்ணற்ற எதிரியை கொன்று விடும்!!!!
ஏழு முறை விழுந்தாலும் எட்டாவது முறை எழு
தவறான பாதையில் வெகுதொலைவில் வந்தாலும் திரும்பிச்செல்!!!
வெற்றியை எதிர்நோக்கும் எண்ணம் இருந்தால் ஒற்றை சிறகிலும் பறக்கலாம்!!!
ஜெயிப்பது எப்படி என்று யோசிக்காதே! தோற்றது எதனால் என்று யோசித்து பார்!!! ஜெயிப்பது நீயாக மட்டுமே இருப்பாய்!!!
thairiyam க்கான பட முடிவு

படித்ததில் ரசித்தவை

* வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாமல் போராடும் வீரனைப் போல செயல்படுங்கள்.
* தன்னம்பிக்கையை இழப்பது என்பது தெய்வ நம்பிக்கையை இழப்பதை விட மோசமானது.
* அரை மனதுடன் முயற்சியில் ஈடுபடாதீர்கள். ஆர்வமில்லாத செயலால் நன்மை ஏற்படுவதில்லை.
* எடுத்துச் சொல்வதை விட மற்றவர் முன் எடுத்துக்காட்டாக வாழ்வதே மதிப்பு மிக்கதாகும்.
* எண்ணத்தில் ஒழுக்கம் இருந்தால், செயல்களிலும் அது பிரதிபலிக்கும்.
* 'மண்ணில் பிறந்ததன் பயன் மற்றவர்க்கு உதவி செய்வதே' என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
படம்