செவ்வாய், 10 அக்டோபர், 2017

தண்ணீர்

நான் மழையாக பூமிக்கு
வரும் போது செல்ல வேண்டிய
இடம் தெரியாமல்
இருந்தேன்...
அப்போது நீ
சிறு நீரோடையாக வந்து
வழி காட்டினாய்...
நான் செல்ல வேண்டிய
இடத்தையும் சொன்னாய்....
அதற்காக முயற்சி செய்யாமல்
இருக்கும் போது தான்
தீடீரென்று
எனக்குள் வேகம் வந்தது...
எனக்கான இடத்தை
அடைய சிந்திக்க
துவங்கினேன்...
என்னை
நதியாக மாற்றி
அனைவருக்கும் பயன்படும் படி
உருவெடுக்க
நினைக்கிறேன்...
என்னை
பயன்படுத்தாமல்
இருந்தால்,
ஒரு நாள்
கடலாகவும்
மாறுவேன்.....

# தண்ணீர் #

-----மு. நித்யா.

கனவு

நீ என் கண் முன்
வரும் போது எல்லாம்
சிகரத்தையே தொட்டது போல
முகத்தில் ஒரு ஆனந்தம்..
அப்போது தெரியவில்லை
அது வெறும் கனவு என்று..
ஒரு நாள் என் கனவு
கனவாகவே
போகும் போது தான்
தெரிந்தது,
அதன் வலி என்னவென்று..
இருந்தும் ஏன் அடிக்கடி
வந்து போகிறாய்.....

# கனவு #

-----மு. நித்யா.
நான் முதலில் உன்னை காணும் போது
வெறும் செடியாக  தான் தெரிந்தாய்
உன்னிடம் தினமும் பேச
நமக்குள் ஒரு உறவு,
நீயும் செழித்து பூக்களாய் மலர்ந்தாய்
நானும் மகிழ்ச்சியில் மலர்ந்தேன்
சில காலம் ஆனது
பூக்கள் வேறு இடம் செல்லும்
நாளும் வந்தது
நீ என்னைவிட்டு
பிரிய போகிறாய் என்று
தெரிந்தும்
அதை ஏற்காமல்
என் மனம் தவிக்கிறது.....

# அழகான பூக்கள் #

---மு. நித்யா

திங்கள், 9 அக்டோபர், 2017




மங்கல ஆரத்தி ......

மங்கள ஆரத்தி எடுப்பது ஏன் தமிழர் பின்பற்றும் கலாச்சாரத்தின் அறிவியல் பூர்வ நன்மைகள்...!
தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.
படம்

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.


அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம். ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷ கிருமிகள் பரவாது தடுக்கிறது.வீட்டினுள் நுழையும் முன்பே சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது.
எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்.
               
                                                                 பொறுமையின் ஆதாயம்...


edison க்கான பட முடிவு 


          தாமஸ் ஆல்வா எடிசன் வெஸ்‌டர்ன் யூனியன் கம்பனி ,வணிகம் சம்பந்தமாகப் பேச அழைத்திருந்தது . அவர் கண்டுபிடித்திருந்த தந்திப்பதிவு நாடா உரிமையை அவர்கள் கேட்டிருந்தார்கள். தன் கண்டுபிடிப்புக்கு என்ன விலை கோருவதென்று எடிசன் தீர்மானித்திருக்க வில்லை அந்த நிறுவனத்தாரிடம் இரண்டு நாள் அவகாசம் கேட்டார்.
தன் மனைவி உடன் ஆலோசித்து 20,000டாலர் விலையாக கோரலாம் என்று முடிவு செய்தார்.
பிறகு, அந்த நிறுவனத்தின் சார்பாய் அவரை வரவேற்ற அதிகாரி கேட்டார் 'நல்லது மிஸ்‌டர் .எடிசன்,நீங்கள் என்ன விலை எதிர் பார்க்கிறீர்கள் ?என்று .
20000டாலர் அதிகமோ என அமைதியாக அமர்ந்திருந்தார்எடிசன். எடிசனின் பதிழுக்காக அதிகாரி காத்திருந்தார் ....
ஆயினும் எடிசன் வாய் திறந்து பேசவில்லை ....
அதிகாரி அதற்கு மேலும் பொறுக்கமுடியாமல் பேச முனைந்தார் .'எடிசன்! ஒரு லட்சம் டாலர்கள் ,சரியா?என்று விலை வைத்தார்.....
    பொறுமையோடிருந்த எடிசனுக்கு ஆதாயம் .பொறுமை இழந்த அதிகாரியால் நிறுவனத்திற்கு இழப்பு.....

எந்த செயலையும் பொறுமையோடு செய்தால் வெற்றி நிச்சயம்...மாறாக அவசர அவசர மாக செய்தால் தோல்வி தான் மிஞ்சும்...

வெள்ளி, 6 அக்டோபர், 2017

தாயின் அருமை

                                            தாயின் அருமை           
                                           

    "அம்மா!...வலித் தாங்க முடியலயே ..அம்மா!...."
"கொஞ்சம் பொறுத்துக்கோ மாலதி ஒண்ணும் ஆகாது நான் இருக்கேன் "
"முடியலங்க ரொம்ப வலிக்குது" ... என்று பிரசவ வலியில் துடிதுடித்து போனாள் மாலதி .
திவாகருக்கு இப்படியெல்லாம் துன்ப பாடுவாள் என நினைத்திருந்தால்  உள்ளே வந்திருக்க மாட்டான்
திடீரென அம்மாவின் நியாபகம் ,...அவனையும் சேர்த்து ஆறு பேர் ,..நாலு ஆண் ரெண்டு பெண் ...எப்படித் துன்ப பட்டிருபாள் ......
    "உங்களுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது "என கூறி சென்றாள் மருத்துவர் .
மாலதி மயங்கி கிடந்தாள் ...
ஆனால் திவகருக்கு தன் தாயின் நினைவாகவே இருந்தது .
யாருக்கோ அவசரமாய் போன் பண்ணினான் .
"மேடம்! நான் திவாகர் பேசறேன்" .
"சொல்லுங்க திவாகர் நேத்தே எல்லா பில்லும் கட்டிடிங்களே!"
"இல்லை மேடம் நான் என் அம்மாவை கூட்டிச் செல்ல இருக்கிறேன் ...அதற்கு தேவையான ஏற்பாடுகளை செயுங்கள்" ...என்றான் திவாகர்.
  "சரி திவாகர் நான் ஏற்பாடுகளை செய்து விட்டு மீண்டும் தங்களுக்கு தெரிவிக்கிறேன்"..என்று கூறி வைத்தார் அந்த முதி
யோர் இல்ல நிர்வாகி. mother image in tamil க்கான பட முடிவு


வயதான தாய் தந்தையிடம் நாலு வார்த்தை அன்பாக பேசினாலே போதும் அவர்களை மகிழ்ச்சியாய் வைத்திருக்க ...ஏன் என்றால் அவர்கள் தேவைகளை விட உணர்வுகளை அதிகம் நேசிப்பவர்கள் ....