புதன், 2 மார்ச், 2016

அப்துல் கலாம்

               அன்புள்ள கலாமுக்கு

Image result for அப்துல் கலாம்

  கோடி மக்களில் ஒருத்தியாய் பல கோடி மனங்களின் பிரதிபலிப்பாய் நான் யார் எனக் கூட அறிந்திராத உனக்காக நான் எழுதும் சில வார்த்தைகள் இதோ`……..

        இந்த எழுத்துக்கள் யாவும்
        உன் அஞ்சலிக்காகவோ
        சாதனைக்காகவோ
       சிறந்த விஞ்ஞானிக்காகவோ
       சாதனைகளின் சொந்தக்காரன் என்பதற்காகவோ
       குடியரசு தலைவன் என்பதற்காகவோ
       உன் மனித நேயத்திற்காகவோ அல்ல…
       காரணம் ஒன்று மட்டுமே
என் கலாம் ஒரு ஆசிரியர் என்பதுவே அது என் கண்கள் ஒரு முறை கூட உன்னை நேரில் கண்டதில்லை.
ஆனால் உன்னை பற்றி நான் எழுதுவதை எண்ணி நானும் என் பேனா முனையும்  பெருமை கொள்கிறோம்.
உலகின் மாசுபாட்டை பற்றி சிந்தித்தாய்
இளைஞர்களை பற்றி சிந்திதாய், கனவுளை பற்றி சிந்தித்தாய்
நீ ஒருவன் இல்லையெனில் நாங்கள் அனைவரும் என்ன செய்வோம்
என்பதை மட்டும் சிந்திக்க மறந்து விட்டாயா?
   நான் கேள்வியுற்றேன்.
உன்னை  நேசிக்கும் ஒரு சிறு மாணவி கூறினாளாம்…..
கலாமை ஒரு முறை கண்டிராத
நான் ஏன் ஒரு கலமாக மாறி
நம் நாட்டிற்க்கு சேவை செய்யக்கூடாதென?

உன் மீது எத்தனை அன்பு பார்த்தாயா!.....

கணித்தமிழ்ப் பேரவை தொடக்கவிழா






கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் இன்று (02.03.16 ) கணித்தமிழ் பேரவையின் தொடக்கவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை தாளாளா் அரிமா கே.எஸ்.ரங்கசாமி எம்ஜே.எப் அவா்கள் தொடங்கிவைத்தாா். விழாவில் செயலாளா் திரு ஆா் சீனிவாசன் அவா்களும், செயல் இயக்குநர் திருமதி கவிதா சீனிவாசன் அவா்களும் முன்னிலை வகித்தனா். முதல்வர் முனைவா் மா.காா்த்திகேயன் அவா்கள் வாழ்த்துரை வழங்கினாா். கணித்தமிழ்ப் பேரவையைத் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றிய தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணை இயக்குநரும் கணித்தமிழ்ப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் மா.தமிழ்ப்பரிதி அவா்கள் கணித்தமிழின் தேவையை எடுத்துரைத்து. இணையத்தில் தமிழை உள்ளீடு செய்வதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைத்தாா். மாணவா்கள் கணித்தமிழ் குறித்த பல்வேறு நுட்பங்களையும், வலைப்பதிவு, விக்கிப்பீடியா, குறுஞ்செயலிகள், மென்பொருள்கள் என பல வழிகளிலும் தமிழ் மொழியைப் பயன்படுத்தும் முறைகள் குறித்து அறிந்துகொண்டனா். கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளா் முனைவா் இரா.குணசீலன் அவா்கள் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுபெற்றது.

எடுத்துக்காட்டாக அமைய நினைக்காதே!


   Image result for கேள்வி குறி

ஒவ்வொருவர் வாழ்க்கையின்

தேவைகளும் தேடல்களும்

வேறுவேறாக இருக்கும்பொழுது

எவ்வாறு மற்றவர் நமக்கு

எடுத்துக்காட்டாக,

பாடமாக அமைய முடியும்?

செவ்வாய், 1 மார்ச், 2016

தேவையான தொடர்பு எண்கள்..!!


Image result for கைபேசியில் இருக்க வேண்டிய எண்கள்

நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள் !!

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, 

செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828

வாகனத்தின் பதிவும்,உரிமையாளர்களும்..!!

Image result for வாகனச் சட்டம்


ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். 

0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும். 

எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும்.

விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தெரிந்து கொள்ளுங்கள்








நில்,கவனி,சொல்..!! (சுற்று-1)


Image result for கேள்விகள் குறி

அன்புடையீருக்கு வணக்கம்,

இன்று முதல் எங்கள் கல்லூரி வலைப்பூவின் ஆடுகளத்தில் விளையாடி நட்சத்திரனராக முயற்சி செய்யுங்கள் நட்பு பூக்களே..!!தங்களின் திறமை வெளிப்படுத்த அமைந்த இக்களத்தை பயனுள்ளதாக மாற்றுங்கள்..!!

1.இந்திய வேதங்களை முதன்  முதலில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் யார்..??
அ) ஜியு போப்          ஆ) வீரமாமுனிவர்
இ)மாக்ஸ் முல்லர்   ஈ) யாருமில்லை