புதன், 9 மார்ச், 2016

மணமாகும்,தன் மகனுக்கு: ஒரு தாயின் அறிவுரை…


திருமணம் ஆவதற்கு முன்னால் உன்னிடம் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். இது உனக்கு வியப்பாக இருக்கலாம். பெண்ணுக்குத்தானே இப்படிச் சொல்லுவார்கள் என்று நினைக்கிறாயா? இல்லை கண்ணா... நாங்கள் மனம் திறந்து சொல்வதைச் சொல்லி விடுகிறோம். காதில் போட்டு வைத்தால் சில விஷயங்கள் மனதிலும் இறங்கும். அதுவே தக்க சமயத்தில் உதவக்கூடும்!
பெஸ்ட் அம்மா பெஸ்ட்!
இதுவரையில் பெண்ணென்று வீட்டில் உன் அம்மாவை மட்டுமே பார்த்திருக்கிறாய். அவள் சமைப்பதையும், வீட்டை வைத்துக் கொள்வதையும், பாடம் சொல்லித் தருவதையும் பாடுவதையும், கோலம் போடுவதையும், பண்டிகைகளை முழுமையாகக் கொண்டாடுவதையும் எதிலும் திறம்பட எடுக்கும் முடிவையும் பார்த்து என் அம்மாதான் பெஸ்ட் என்று எண்ணியதில் தப்பில்லை. உள்ளூர எனக்கு அது பெரிய கிரீடம்தான்!
இனிமேல் அதையே மனதில் அசைபோடாதே! அதைத் தாண்டி வா! அம்மா பெஸ்ட் என்ற உன் கருத்தை உள்ளத்தின் ஆழத்தில் மட்டும் வைத்துக்கொள். வார்த்தைகளில் உன்னவளுக்குத் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. தாய் சொல்லைத் தட்டாதே! சிறிய முகமூடிதான். அதைத் திறம்படப் பயன்படுத்து! அது எல்லோரையும் மகிழ்விப்பதைப் புரிந்துகொள்வாய்.
தாய்க்குப் பின் தாரம்!
நலங்கு மஞ்சள் காயும் முன்பே பிரம்மதண்டத்தைத் தலையில் வைத்தது போல் எங்க அம்மா ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்., அவர்களை அனுசரித்துக் கொண்டு போக வேண்டும் என்ற வசனங்களைப் பேசாதே! அப்படிச் சொன்னால் அவளுக்கு மனதில், அப்படியானால் அம்மா பிள்ளையாகவே இருக்க வேண்டியதுதானே. அப்புறம் எதுக்கு நான்? என்று சிறு கசப்பு உணர்வு தோன்றும். அவள்தான் உன் உலகம் என்பதை அவளுக்குப் புரியவை. அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுக் கொள்வார்கள் என்றும் சொல்லாதே! அதையே என்றாவது உன் மீது திருப்பக் காரணமாக நீ இருக்கக்கூடாது. சண்டையில்லாவிட்டால் நீ கேட்டதெல்லாம் கிடைத்திருக்குமா?
காபியை சர், புர் என்று உறிஞ்சிக் குடிக்காதே. உனக்கொரு மனைவி வந்தால், நல்லா வளர்த்திருக்கா என்று என்னைக் குறை சொல்வாள் என்று அடிக்கடி சொல்வேனே. இன்று உன்னுடைய நடை உடை பாவனையில் உயர்வைக் கண்டு நான் பூரிக்கிறேன். வரப் போகிறவள் பெருமையடைவாள். நல்ல ஆசானாகப் பணி ஆற்றிய நிறைவு எனக்கு.
தாயா? தாரமா?
அம்மா சமையலைத் தவிர வேறொன்றும் நீ அறியாததால் அது மிக உயர்வாக உனக்குத் தோன்றுவதில் வியப்பில்லை. இருந்தாலும் வார்த்தைக்கு வார்த்தை, எங்க அம்மா செய்கிற மாதிரி சேப்பங்கிழங்கு ரோஸ்ட், முருங்கைக்காய் சாம்பார் மாதிரி வராது என்று ஒப்பிட்டுப் பேசாதே! உன் அம்மாவுக்கு உன் மனைவியாகப் போகிற பெண்ணைப் போலக் கார் ஓட்டவும், வங்கிப் பணி ஆற்றவும், டைம் மேனேஜ்மெண்ட்டும் தெரியாதப்பா! நான் அன்றைய கெட்டிக்காரி! இவள் இன்றைய மங்கை!
அம்மாவின் கட்டளைகள் ஆறு!
உனக்கு உன்னிடம் உள்ள பேரன்பை மனதில் கொண்டு நான் சொல்லும் அறிவுரைகள் ஆறு:
1. அம்மா புராணம் பாடாதே!
2. அம்மாவோடு ஒப்பிடாதே!
4. அம்மாவைக் கொஞ்சம் பீடத்திலிருந்து இறக்கி வை. அவளும் சற்று இளைப்பாறட்டும்!
5. அம்மா தேவைப்பட்டபோதெல்லாம் உதவிக்கு வருவாள் என்பதை மட்டும் சொல்லி வை!
உன்னவளுடைய அம்மாவையும் மதிக்கக் கற்றுக் கொள்



தமிழ்நாடு மின் நிறுவனத்தில் 2175 பணி..!!

தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகத்தில் 2175 தொழில்நுட்ப உதவியாளர், மின்னியல், தொழில்நுடப் உதவியாளர், இயந்தரவியல், உதவி வரைவாளர், களப்பணி உதவியாளர்(பயிற்சி), சோதகர் வேதியர், இளநிலை உதவியாளர், நிர்வாகம், இளநிலை உதவியாளர் கணக்கு, இளநிலை தணிக்கையாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் தட்டச்சர் போன்ற பணிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்காக, தகுதியுள்ள உள்ளவர்களிடமிருந்து எழுத்துத்தேர்விற்கு 02.03.2016 முதல் 16.03.2016 வரை இணைய வழிமூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களும், ஆட்குறைப்பு காரணமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட அரசுத்துறையில் பணியாற்றி வேலையிழந்த பணியாளர்களும், முன்னாள் இராணுவ வீரர்களும், பட்டயப்படிப்பு மற்றும் தொழிற்பழகுனர் பயிற்சி (ஐடிஐ) பெற்று முந்தைய தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் முடித்தவர்கள் கீழ்வரும் பணியிடங்களுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

அறிவிப்பு எண்.01/2016 தேதி: 28.02.2016

அறிவிப்பு எண்.02/2016 தேதி: 29.02.2016


பணி: தொழில்நுட்ப உதவியாளர் - 500


பணி: தொழில்நுட்ப உதவியாளர், இயந்திரவியல் - 25

பணி: உதவி வரைவாளர் - 50


பணி: கள உதவியாளர் (பயிற்சி) - 900


பணி: சோதகர் வேதியர் - 100


பணி: இளநிலை உதவியாளர் (நிர்வாகம்) - 100


பணி: இளநிலை உதவியாளர் (கணக்கு) - 250


பணி: இளநிலை தணிக்கையாளர் - 900


பணி: சுருக்கெழுத்து தட்டச்சர் - 25


பணி: தட்டச்சர் - 200


வயது வரம்பு : ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுவதால் அந்தந்த பணிக்கான வயது வரம்பை இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும். 01.07.2015 தேதியின்படி கணக்கிடப்படுகிறது.


தகுதி: பொறியியில் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் அல்லது இன்ஸ்ட்ரூமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, மெக்கானிக்கல், கைவினைஞர் சான்று வரைவாளர் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ, வேதியியல் துறையில் பி.ஏ., பி,எஸ்சி, பி.காம், மின்னியல், கம்பியாளர் பிரிவில் ஐடிஐ மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினரும் ரூ.500. ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ரூ.250, அனைத்து பிரிவினை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு - 250

விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 02.03.2016

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.03.2016

தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 18.03.2016

தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம்: ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது (உத்தேசமாக). இதற்கான தேதி பின்னர்www.tangedco.directrecuitment.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tangedco.directrecuitment.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.



செவ்வாய், 8 மார்ச், 2016

அடிசன் அன்ட் ஸ்டீல்

அடிசன் அன்ட் ஸ்டீல்(18ஆம் நூற்றாண்டு)

இவர்கள் இருவரும் வார இதல்களின் தந்தை எனக்கருதப்படுவர்.இவர்கள் வாழ்ந்த காலத்தில் மக்கள் புது விதமான இலக்கியத்தை வார இதழ்கள் மூலம் எதிர்ப்பார்த்தனர்.மேலும் அலெக்ஸான்டர் போப் ஆண்டில்,
                        டானியல் டிஃஓ
                        ஜொனாத்தன் ஸ்விஇப்ட்
                        சர் ரிச்சார்ட் ஸ்டீல் மற்றும்
                        ஜொசப் அடிசன்   
என்பவர்களும் சிறந்த வார எழுத்தாளர்களாக கருதப்பட்டனர்.
இவர்கள் இருவரும் பதினெட்டாம் நாற்றாண்டில் சிறந்த இடத்தை தமக்கென தக்கவைத்துக் கொண்டனர்.
அடிசன்:
இவர் ஒரு நகரவாசி.மிகவும் கூச்ச சுபாகம் உடையவர்,தன் நம்பிக்கை உடையவர் மற்றும் கட்டுப்பாடுடையவர்.முக்கியமான இவரது படைப்புகள்,
                        ``தி கெம்பைன்’’
                        ``கேடொ’’
                        ``ரொசமன்ட்’’
                        ``தி டிரூமர்’’
என்பனவாகும்.இவர்கள் இருவரும் சேர்ந்து``தி ஸ்ப்பெக்டேட்டர்’’என்ள இதழைத் தொடங்கினர்.இதில்``சர் ரேஜர் டி கவர்ட்லீ’’என்ற கற்பனை கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்தினர்.


ஸ்டீல்:
இவர் ஒரு மேதை.இவர் அடிசனுடன் பொது அறங்கில் அரசியல் சார்பாக பல வாதங்களை மேற்க்கொண்டாலும் படைப்புலகத்தில் இருவரும் ஒன்று சேர்திடுவர்.இவரது படைப்புகள்,
                  தி ஃயூனரல்
                  தி லையிங் லவ்வர்
                  தி டின்டர் ஹஸ்பன்ட்டு
                  தி கான்சியஸ் லவ்வர்ஸ்
                  தி இங்கிலிஷ்மென்
என்பன குறிப்பிடத்தக்கன.


            

டாக்டர் சாமுவெல் ஜான்சன்

                                                 டக்டர்.ஜானெசன்(18ஆம் நூற்றாண்டு)

டாக்டர் சாமுவெல் ஜான்சன் ஒரு கவிஞர்,மருமொழி கூறுபவர், கட்டுரையாலர்,நாவலர்,மற்றும் லொக்ஸிகோகிராப்பர்.இவர் கடிதங்கள் எழுதுவதிலும் மொழிபெயர்ப்பிலும் வல்லவர்.இவர் லண்டன் என்ற கவிதையை``கெவ்ஸ் மாகசினில்’’வெளியிட்டு அதில் தம்மை இனைத்துக்கொண்டார்.பின்னர்``தி வனிடி ஆஃப்ஹூமன் விஷ்ஷஸ்’’ மற்றும் சோகக்கதையான``ஐரன்’’என்ற கதையை நியே கிலாசிகள் முரையில் எழுதினார்.அவர் ஒரு வார இதலான``தி ராம்ப்லர்’’ என்பனைத் தொடங்கினார்.அதனை அடுத்து``தி அட்வென்ச்சுரர்’’,``தி இட்லர்’’என பல்வேறு வார இதல்களைத் தொடங்கினார்.இவை அனைத்திலும்``தி ராம்ப்லர்’’ புகழ் பெற்றதாகும்.

மேலும் இவர் ஆங்கில வார்த்தைகளுக்கான அற்த்தத்தை தெறிந்துகொள்ளும் வகையில்``டிக்ஸ்னரியை’’இந்த உலகிற்கு அறிமுகம் செய்தார்.இவரது வேறு படைப்புகள்,
            ஷெக்ஸ்ப்பியர்(மருமொழி கூறும் நூல்)
            ராசிலஸ்(தத்துவக் கதைகள்)
            தி லவ்ஸ் ஆப் தி மொஸ்ட் எமினன்ட் இங்கிலிஷ் போயட்ஸ்
என்பனவாகும்.இவர் பின்னர்``வொஸ்ட் மினிஸ்டர் அபே’’என்னும் இடத்தில் புதைக்கப்பட்டார்.இந்த இடத்தில் கவிஞர்களை மட்டும் தான் புதைப்பர்.
இவரது எழுதும் நடை:

இவர் படைப்புகளில் நாகரீகம்,அதிக அளவு பொது அறிவுடன் எழுதுவார். இவரின் தரமும் சுவையும் இவரை ஒரு கன்சர்வேட்டிவ்(அரசியல் கட்சி) என்று உணர்த்துகிரது.பொதுவாக இவர் ஒரு எதிற்மறை நபர்.ஜன்சன் ``லைப் ஈஸ் புராக்ரஸ் ஃரம் வான்ட் டு நாட் ஃரம் எஞ்சாய்மென்ட் டு எஞ்சாய்மென்ட்’’ என்பார்.

வாய்ப்புக்களை உருவாக்குவோம் சாதனை படைப்போம்

விண்வெளியில் கால் பதித்த கல்பனா சாவ்லாவோ;
தன் முதுகில் குழந்தையை சுமந்து; கையில்
வாளை ஏந்தி போர் புரிந்த ஜான்சி ராணியோ;
பாரதத்தின் முதல் பெண் மருத்துவரான
     முத்துலட்சுமி ரட்டியோ;
பாரதத்தின் முதல் பெண் நீதிபதியான
     பத்மினி ஜேசுதுரையோ;
பாரதத்தின் முதல் பெண் காவல் துறை அதிகாரியான
     கிரண் பேடியோ;
வாய்ப்புக்காக காத்திருக்கவில்லை!
தன் இலட்சியத்தின் வழி வாய்ப்புக்களை
உருவாக்கிக் கொண்டதால் தான் சாதனை
என்னும் சிகரத்தை எட்டிப்பிடித்தார்கள் ஆனால்
நாம் மட்டும் ஏன் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்?
இந்த மகளிர் தினத்தில் இருந்தாவது வாய்ப்புக்காக
காத்திருக்காமல் வாய்ப்புக்களை உருவாக்கி

சாதனை படைக்க முயற்சிப்போம்!