செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

பதிலடி

லாயிட் ஜாா்ஜ் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது ஒருவன் எழுந்து உங்கள் தாத்தா ஒரு கழுதை வண்டியை ஓட்டியவா் என்பது ஞாபகம் இருக்கிறதா ? என்று ஏளனமாகக் கேட்டான் உடனே லாயிட் ஜாா்ஜ் அமைதியாக என் தாத்தாவின் வண்டி தொலைந்து விட்டது கழுதை மட்டும் உயிரோடு இருப்பதை இப்போது கண்டுகொண்டேன் என்றாா். 

உழைப்பாளியின் வருத்தம்

உழைப்பவன் வருத்தம்
அடைந்தால் உலகம்
அழிந்துவிடும். – பொய்இல் புலவர்(திருவள்ளுவர்). 

திங்கள், 3 பிப்ரவரி, 2020

எமில்

“எமில் அடொல்ஃப் வான் பெ(ஹ்)ரிங்

பிறப்பு - மார்ச் 15, 1854
இறப்பு - மார்ச் 31, 1917
நாடு - ஜெர்மனி

இவர் தொண்டை அடைப்பான் எனும் கொடூர நோய்க்குத் தடுப்பூசி மருந்து கண்டறிந்த மனிதக் காவலர். உயிர் குடிக்கும் இந்நோய்க்கு அற்புதமான தீர்வைத் தந்ததற்காக 1901-ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான முதல் நோபல் பரிசு எமிலுக்கு வழங்கப்பட்டது” (நோபல் வெற்றியாளர்கள், பாகம் 3, விகடன் பிரசுரம், முதற்பதிப்பு, சூன் - 2009, பக்கம் 10-12)

சிறையில் பிறந்த இலக்கியங்கள்.

திலகர் - கீதை ரகசியம்.
வ.உ.சி - மெய்யறிவு,மனம் போல வாழ்வு.
ராஜேந்ததிர பிரசாத்  - தனது சுயசரிதை.
ஹிட்லர் - மெயின் கேம்ப்.
தாமஸ் பெயின்  - சுதந்திரத்துக்குப் போராட வேண்டும்.
ஒ ஹென்றி   - சிறுகதைகள்..

மலர்களின் இளமைப் பருவம்

அரும்பு
நனை
முகை
மொக்குள்
முகிழ்
மொட்டு