வியாழன், 6 செப்டம்பர், 2018

யார் ஆசிரியர்?

     
                                                                 ஆசிரியர் என்பவர் நம் தவறை சுட்டி காட்டி அதை திருத்துபவர், மேலும் அந்த தவறை செய்ய விடாமல் நம்மை நல்வழிப்படுத்துபவர், நம் திறமைகளை ஆராய்ந்து அதை வெளிக்கொண்டுவருபவர், நமக்கான குறிக்கோளை வகுத்து தருபவர். நமக்கு தெரியாத ஒரு செயலை செய்ய சொல்லி தரும் ஒரு சிறு பிள்ளை கூட நமக்கு ஆசிரியர் தான்.எனவே நான் பிறந்தது முதல் இப்போது வரை என்னை அறவழியில் செல்ல உதவிய என் தாய் தந்தைக்கு, நண்பர்களுக்கும், என் ஆசிரியர் அனைவருக்கும் என் அன்பும் மரியாதையும் கலந்த ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள்.

ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே


பண்டைய காலங்களிலெல்லாம் ஒரு  பெண் குழந்தையைப் பெற்று விட்டால் என்றால் அவளால் தான் அந்த குழந்தை பிறந்தது என்றும் பெண் குழந்தை பிறந்ததற்கும் தந்தைக்கும் சம்மதமே இல்லை என்பது போன்ற ஒரு சூழலும் அறியாமையும் இருந்தது.
தற்போதைய காலகட்டத்தில் நாகரீக மாற்றத்தாலும் அதிகப்படியான மக்கள் கல்வியறிவு பெற்றிருப்பதாலும் இது குறைந்திருக்கிறது.
இருந்தாலும் எனக்குத் தெரிந்ததை பகிர்ந்து கொள்வது எனது கடமை என்ற நோக்கில் எழுதுவதே இந்த பதிவு...


பிறப்பு என்பது ஆணின் விந்துவிலிருந்து ஒரு செல் பெண்ணின் கருமுட்டையிலுள்ள ஒற்றைச் செல்லுக்குள் நுழையும் போது ஏற்படுகிறது.
செல்லில் 46 குரோமோசோம்கள் உள்ளன.இதனை 23 ஜோடிகளாகப் பிரிக்கலாம்.
23 ல் 22 குரோமோசோம்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரியான அமைப்பைக் கொண்டிருக்கும்..
23 வது ஜோடி தான் இருவருக்கும் வேறுபடுகிறது.
ஆணிடம் உள்ள செல்லின் கடைசி ஜோடி   XY ஆகவும்.. பெண்ணிடம்  XY ஆகவும் இருக்கிறது.
கர்ப்பமுறும் போது தாய் தந்தை செல்கள் இணைகின்றன.
23 ஆண் குரோமோசோம்களும் 23 பெண் குரோமோசோம்களும் ஜோடி சேரும் போது ஆணின் விந்து செல்லிருந்து X தேர்ந்தெடுக்கப் படுகிறதா அல்லது Y தேர்ந்தெடுக்கப் படுகிறதா என்பதைப் பொறுத்துத்தான் குழந்தையின் பாலினம் அமையும்...
XX சேர்ந்தால் பெண் குழந்தையும்
YY சேர்ந்தாலும் ஆண் குழந்தையும் பிறக்கும்.
குழந்தையின் பாலினம் என்பது ஆணின் குரோமோசோம்களால் தான் நிர்ணயிக்கப் படுகிறது.
குழந்தை பெறுதல் என்பதில் இருவருடைய பங்களிப்புமே இருக்கிறது.
எனவே குழந்தைய பெத்துப் பாத்தா தான உங்களுக்கு என் கஷ்டம் தெரியும் என்று பெண்களும்..
 இந்த குழந்தை பொறந்திருச்சே அந்த குழந்தை பொறந்திருச்சே என வருத்தப் படாமல் ஆண்களும்....
நான் எனும் மடமையிலிருந்து நாம் எனும் வெளிச்சத்திற்கு வரும் போது தான் குடும்பம் வலுப்பெறும்...
குழந்தையும் வளமாய் வாழும்...

குழந்தை இல்லையே என ஏங்குபவரின் நிலையை நினைத்துப் பாருங்கள்  நீங்களெல்லாம் எவ்வளவு பெரிய பாக்கியசாலிகள் என்பது புரியும்...

மசக்கையும் இல்லை..
மாங்காய் தின்னும் ஆசையும் இல்லை..
வளைகாப்பு வளையல் ஒலி எதுவும் இல்லை.
ஆனாலும் குழந்தை பெறுகிறது குப்பைத் தொட்டி..

இந்த வரிகளை வாசிக்கும் போதே நம் மனம் இறுகிப் போகிறதென்றால் நேரில் பார்க்கும் போது எப்படி இருக்கும் நினைத்துப் பாருங்கள்...

கருக்கலைப்பு எவ்வளவு பெரிய கொடுமை...


தாய்மை என்றாலே புனிதம்...
அந்த தாய்மை எல்லா இடங்களிலும் வெல்லட்டும்...
பாலினம் கடந்த காதல் வென்றால் குடும்பமும் குழந்தையும் சேர்த்து இந்த பிரபஞ்சமும் முன்னேறும்...

அன்புள்ள ஆசானுக்கு

ஆசிரியர் தின விழாவிலே எங்கள் கல்லூரி முதல்வருக்காய் நான் எழுதி அவர் முன் அரங்கேற்றம் செய்த என் கவிதை...
கமல்ஹாசனுக்கு அடுத்து பல முறை தசாவதாரம் எடுத்தவர் நீங்கள் தான்‌...
தாய் தந்தைக்கு மகனாய்...
மனைவிக்கு ஏற்ற கணவராய்...
மகனுக்கும் எங்களைப் போன்ற மகள்களுக்கும் தந்தையாய்...
ஆசிரியர்களுக்கெல்லாம் நண்பணாய்...
ஆசிரியைகளுக்கெல்லாம் அண்ணணாய்...
தாளாளருக்கு தனயனாய்...
துணைத் தாளாளருக்கு தளபதியாய்...
புத்தகங்கள் எழுதிட்ட எழுத்தாளராய்...
கவி புனையும் கவிஞராய்..கலைஞராய்...
திரையில் நடிக்க தெரிந்த நடிகராய்...
மலரினும் மெல்லிய இதயம் படைத்திட்ட நல் இதயங்களே எனத் தொடங்கி பேச்சால் கட்டிப் போடும் பேச்சாளராய்...
பல அவதாரம் எடுத்திட்டவரே...
அவதாரங்கள் தொடரட்டும்...
அன்பு பெருகட்டும்...
ஆயுள் நீளட்டும்...
பல்லாண்டுகள் தொடரட்டும் உங்கள் அறியாமை இருளகற்றும் பணி.
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ஐயா....

உதவி

               
                                                            பணம் இருந்தால் தூரத்து சொந்தம் கூட நெருங்கிய சொந்தம் ஆகும். பணம் இல்லையென்றால் நெருங்கிய சொந்தம் கூட தூரம் ஆகிவிடும். சொந்ததிர்கே உதவ மறுக்கும் இந்த சூழ்நிலையில் யாரென்று தெரியாத கேரளத்து மக்களுக்கு உதவிய சிறு பிள்ளை நிச்சயம் பாராட்ட படவேண்டியவர் தான். தான் சிறுக சிறுக சைக்கிள் வாங்க சேமித்த பணத்தை கேரளத்து மக்களுக்கு தர வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது அரிது.  அந்த மாணவி செய்த உதவிக்காக பிரபல சைக்கிள் நிறுவனம் அவளின் எண்ணத்தை பாராட்டி சைக்கிள் ஒன்றை பரிசாக தந்தனர். அவளின் தொண்டு  மேலும் சிறக்கட்டும்.

ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

அன்பு

             ஆறு வயது சிறுவன் ஒருவன் தன் நான்கு வயது தங்கையைஅழைத்து கொண்டு கடை  தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான்.                                         ஒரு கடையின் வாசலில் இருந்த    பொம்மைகளை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து 'எந்த பொம்மை வேண்டும்?' என்றான்.                                                                 அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரனையுடன் கடையின் முதலாளியை பார்த்து "அந்த பொம்மை என்ன விலை?" என்று கேட்டான்.                                               அதற்கு சிரித்துக்கொன்டே அந்த முதலாளி, 'உன்னிடம் எவ்வளவு உள்ளது?"என்று கேட்டார்.  அதற்கு அந்த சிறுவன் தன விளையாட, சேர்த்து வைத்து இருந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான். இது போதுமா என்று கவலையுடன் கேட்டான். அதற்கு அந்த கடைக்காரர் அவனின் கவலையான முகத்தை பார்த்து கொன்டே எனக்கு நான்கு சிப்பிகள் போதும் என்றார். சிறுவன் மகிழ்யோடு தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்து கொண்டு சென்றான்.                                    இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த அந்த கடையின் வேலையாள் முதலாளியிடம். அய்யா ஒன்றுக்கு உதவாத சிப்பிகளை வாங்கிக்கொண்டு விலை உயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டீர்கள் என்றான்.                 அதற்கு அந்த முதலாளி அந்த சிறுவனுக்கு பணம் கொடுத்தால் தான் பொம்மை கிடைக்கும் என்று புரியாத வயது. அவனுக்கு அந்த சிப்பிகள் தன் உயர்ந்தவை. நாம் பணம் கேட்டால்வவன் எண்ணத்தில் பணம் தன உயர்ந்தது என்ற மாற்றம் வந்து விடும் அதை தடுத்து விட்டேன்.                என்றோ ஒரு நாள் அவன் பெரியவன் ஆகி இந்த சம்பவங்களை நினைத்து பார்க்கையில் இந்த உலகம் நல்லவர்கலால் ஆனது என்ற நல்ல எண்ணம் அவன் மனதில் தோன்றும்.                                                         ஆகையால் அவன் எல்லோரிடமும் அன்பு காட்ட தொடங்குவார். உலகம் அன்பினால் கட்டமைக்கப்பட வேண்டும் என்றார்.                                         அன்பு என்ற ஒரு வார்த்தையில் தான் இன்னும் இந்த உலகமும் உயிரங்களும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

உளறல்களுக்கு பேச்சு வடிவம் கிடைத்த மேடை



எங்க அம்மாவுக்கும் எனக்கும் உள்ள உறவு தொப்புள்கொடி உறவு
திருப்பூர் குமரனுக்கும் இந்த தேசத்துக்கும் உள்ள உறவு தேசியக்கொடி உறவு.
கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள உறவு தாலிக்கொடி உறவு.
இந்த மாதிரி எந்த ஒரு இணைப்பும் இல்லாமல் நண்பர்களிடையே மலர்ந்து மணம் வீசுகின்ற உறவு தான் நட்பு எனும் நேசக்கொடி உறவு.


இந்த வரிகளை என் வாழ்வில் எந்நாளும் மறக்க மாட்டேன் .
ஏனென்றால்
முதன்முதலாய்
தொலைக்காட்சி கேமாராவைப் பார்க்கிறேன்.
சந்தித்திராத கூட்டத்தை சந்திக்கிறேன்.
பெற்றோரை நீங்கள் பேசுவதைப் பார்க்க அழைத்து வாருங்கள் என்று சொல்லி கொடுக்கப்பட்ட சீட்டு இரண்டு கைப்பையிலே கண்ணுறங்குகிறது.


எட்டாம் வகுப்பு பாப்பா என்ன பேசப் போகுது என பார்க்கும் பெருங்கூட்டம்.
பேச்சாளர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் ஒருஙங்கிணைப்பாளர் வாசிக்க என் பெயரை மட்டும் காணவில்லை.
அழுகை கலந்த பயம்.

எல்லா பெயரும் சொல்லி முடித்த பிறகு மேடையில் இருக்கின்ற பேச்சாளர்களின் பெயரையெல்லாம் சொல்லிவிட்டேன்.
இந்த மேடையில் ஒரு  கத்தி அமர்ந்திக்கிறது என்று சொல்லி என்னை அறிமுகம் செய்தார்.

இப்படியெல்லாம் சொல்லுகிறாரே திக்காமல் ஒழுங்காக பேசி முடிப்போமா எனும் பயம் ஆழ்மனதில்...
பேசும் போது லியோனி ஐயாவிடம்
உங்களுக்கு எதாவது கஷ்டம் னா அதப்போய் உங்க அம்மா அப்பா கிட்ட சொல்லுவீங்களா.
இல்ல உங்க அண்ணன் தம்பி கிட்ட சொல்லுவீங்களா.
சொல்ல முடியாதுங்க ஐயா.
நமக்கு ஏற்படுற கஷ்டத்தையும் நஷ்டத்தையும் பகிர்ந்து கொள்ளக் குடிய உறவு ஒன்னு இந்த உலகத்துல இருக்குணா அது நட்பா மட்டுந்தாங்கயா இருக்க முடியும் என நான் இந்த வரியை முடிக்கும் போது அரங்கமை கையொலியால் நிரம்பிப் போனது.
இதற்குப் பின் லியோனி ஐயா என்னிடம் என்ன பத்தி எப்டிமா இவ்ளோ கரக்டா தெரிஞ்சு வைச்சுருக்க என கேட்ட போது ஒரு குழந்தையோட மனது தாய்க்கு தான் தெரியும்.
தாயோட மனது புள்ளைக்கு தான் தெரியும்.
அது போல ஒரு பேச்சுத் தலைவரோட மனசு இன்னொரு பேச்சாளருக்கு தானங்கய்யா தெரியும் என சொல்லினேன். மீண்டும் அரங்கம் கையொலியால் நிரம்பியது.
எப்படியொ வெற்றிகரமாக பேசி முடித்து விட்டேன் என்னும் மனமகிழ்வோடு
 சிறந்த பேச்சாளருக்கான விருதையும் அந்த அரங்கத்தில் வாங்கி விட்டேன்...

முதன்முதலாய் தொலைக்காட்சி காட்டிய கொடுத்த அணுபவம் தற்போது கூட இதை எழுதும் போது அந்த நினைவுகள் ஊசலாடிக் கொண்டே செல்கிறது.


நினைவுகள் மகதாதானவை தான்..