வெள்ளி, 18 நவம்பர், 2016

டூ வாட் யூ சே

                                                            டூ வாட் யூ சே
                                    --டைனி டாட்
                 

ஒரு சிறிய கிராமத்தில் வயதான முதியவர் ஒருவர் வசித்து வந்தார்.நிறைய முறை அவர்``எனக்கு குடும்பம் என்று எதுவும் இல்லை.இதற்கு நான் இறப்பதே மேல்’’ என்று கூறுவார்.தினமும் காலையில் காட்டிற் சென்று விரகு வெட்டி சேர்ப்பார்.பிறகு அதனை சந்தையில் விற்று விடுவார்.அந்த பணத்தைக் கொண்டு சிறிய உணவு வண்டியில் உணவு உட்கொள்வார்.ஒரு நாள் அவர்க்கு காய்ச்சல் வந்தது.இருந்தும் அவர் வேலைக்கு சென்றார்,ஏனெனில் அந்த காய்ச்சலை குணப்படுத்துவதற்கும் உணவிற்கும் வேறு பணம் அவரிடம் இல்லை.அந்த கட்டைகளை தன் முதுகில் சுமந்து திரும்ப ``எனக்கு எந்த உதவியும் இல்லை இதற்கு எமன் என்னை கொண்டு செல்லலாம்?’’ என்றார்.

            அந்த சொல் எமனிற்கு கேட்டு அவர் முன் காட்சி அளித்து, தன்னுடன் சொர்க்கத்திற்கு வர அழைத்தார்.அதற்கு அந்த முதியவர்``எமதர்ம ராஜா நான் ஏதோ உதவிக்காக புளம்பிக்கொண்டிருந்தேன்?’’ என்றார்.பின்பு எமராஜா அவருக்கு கட்டைகளை தூக்க உதவி புரிந்து புன்முறுவலுடன் தன் மனதிற்குள்``மக்கள் தன் சொல்களை நம்புவதில்லை,’’என்று எண்ணினார்..


தி ஃபூலிஷ் டாக்ஸ்

                                                                           தி ஃபூலிஷ் டாக்ஸ்
                                          --டைனி டாட் ஸ்டோரிஸ்
               

ஒரு ஊரில் ஆடு மேய்பவர் ஒருவரிடம் நிறைய ஆடுகள் இருந்தன.அவர் அவைகளை பாதுகாக்க இரு ஆக்ரோசமான நாய்களை பழக்கி வைத்திருந்தார்.அந்த நாய்களும் ஆடுகளை பாதுகாத்துக்கொண்டு உண்மையாக நடந்து கொண்டன.

ஒரு இரவில் நரி அந்த டுகளை நோட்டமிட்டது.அருகில் சென்று அந்த ஆடுகளை நெருங்கும் போது நாய்கள் நரியை குறைத்து விரட்டின.அந்த நரி அப்பொழுது ஏதாவது,சதி திட்டம் தீட்டினால்தான் இதனை ருசிக்க முடியும் என்று எண்ணியது.கடினமாக இருந்தாலும் திடீரென ஒரு தீர்வு தோன்றியது.அதனை செயல்படுத்த இரு நாய்களிடம் சென்று,``சங்கிலி மூலம் கட்டப்பட்டு மனிதர்களுக்காக நீ உழைப்பதை எண்ணி நான் வருந்தினேன்.என்னுடைய காட்டிற்கு வந்து நீங்கள் இருங்கள்.அங்கு நீங்கள் சுதந்திரமாக சுற்றித் திரிந்து விரும்பியதை உண்ணலாம்’’,என்றது.அந்த நரியின் எண்ணம் அந்த நாய்களைக் கவர்ந்து.



            தந்திரமாக அந்த நாய்களை தன் குகைக்குள் செலுத்தியது.அங்கு ஏற்கவே பதுங்கி இருந்த இரண்டு நரிகள் நாய்களை கடித்தன.பிறகு அனைத்து நரிகளும் ஒன்று சேர்ந்து அந்த ஆடுகளை உண்டனர்.அந்த நாய்களின் அறியாமையிலால் தான் தன் உரிமையாளர்களுக்கும் தனக்கும் தீயன தேடிக்கொண்டன.

தி கிலவர் மேர்சன்ட்

  தி  கிலவர் மேர்சன்ட்
n  டைனி டாட் ஸ்டோரீஸ்..

       

ஒரு மழைக்கால இரவில்,இரு ஆண்கள் அந்த இரவை களிக்க வேண்டும் என்பதற்காக வாடகை அறையெடுத்து தங்கினர்.அங்கு ஒரு அறைதான் இருந்த காரணத்தால் ஒருவருக்கு ஒருவர் தெரியவில்லை என்றாலும் ஓறறையில் தங்கினர்.உண்மையில்,அதில் ஒருவன் திருடன்,ஒருவன் மிகப்பெரிய வைர வியாபாரி.சில காலம் அவரை அவன் பின்தொடர்ந்து வந்தான், அந்த வியாபாரி நிறைய தொகையையும் விலைமதிபற்ற வைரங்களையும் தன்னுடன் கொண்டு வந்தார்.

அந்த இடத்து உரிமையாளர் எப்பொழுது இருவருக்கும் தங்க ஒரே இடத்தை கொடுத்தாரோ, அப்போது, அந்த ஒரே அறையில் தங்கள் உடமைகளை வைத்துக் கொண்டனர்.சில நிமிடங்களுக்கு பிறகு உணவு இடைவேளைக்காக வியாபாரி வெளியே சென்றார்.அந்த திருடன் வியாபாரியின் உடமைகளை சோதனை புரிந்தான்,ஆனால்,அவனுக்கு எதுவும் கிடைக்கவில்லை.விரைவில் அவர் திரும்பி வந்தார்.இருவரும் உரங்கச் சென்றனர்.அடுத்த நாள் காலையில் திருடன்,``ஐயா! நான் ஒரு திருடன் உங்கள் உடமைகளை திருடிச் செல்ல முயற்சி செய்தேன்.ஆனால்,எனக்கு எதுவும் கிடைக்கவில்லை’’ என்று கூறினான்.அதற்கு அந்த வியாபாரி``எனக்கு தெரியும் அதனால் தான் என்னுடைய உடமைகளை உன் பையில் வைத்திருந்தேன் என்று கூறினார்.

ஸ்வீட் ட்ரூத்

                                                                      ஸ்வீட் ட்ரூத்
                                    --டைனி டாட் ஸ்டோரீஸ்

       அன்று சிங்கத்தின் பிறந்த நாள்.காட்டிலுள்ள அனைத்து விலங்குகளும் பறவைகளும் தங்களை நன்கு அலங்கரித்துக்கொண்டு பரிசுகளுடன் வந்தன.


விழா நடக்கும் இடத்தை அனைவரும் அலங்கரித்துக் கொண்டிருந்தன.சிங்கம் தனது பிறந்தநாள் விழாவிற்கு அழைத்திருத்தது. தக்க நேரத்தில் இனிப்பன் வெட்டி பிறந்தநாள் பாடல் பாடப்பட்டது.பின்பு கழுதையின் வருகையின்மையை கண்டரிந்தது சிங்கம் அவசர வேலை ஏதாவது வந்திருக்கும் அதனால் கழுதையால் வர இயலவில்லை என்று எண்ணியது.

            அடுத்த நாள் சிங்கம் தான் நடந்து வந்த வழியில் கழுதையை சந்தித்தது.அங்கு அதன் வருகையின்மையை பற்றி விசாரித்தது.கழுதை அதற்கு, எனக்கு என் வீட்டிலேயே நான் இயல்பாக உணர்கிறேன் அங்கு வருவதற்கு எனக்கு எந்த விருப்பமும் இல்லை என்று அவமதிக்கும் வகையில் கூறியது.


அந்த கழுதை கூறியது உண்மையாக இருந்தாலும்,உண்மையை அழகுற கூறவில்லை.அதனால் ஆத்திரமடைந்த சிங்கம் கழுதையை காட்டைவிட்டு வெளியேற்றிவிட்டது. அதனால்தான், இங்கு மனிதர்களுடன் பொதி சுமக்கிறது.ஏனெனில், மனிதர்களுடன் உண்மையை அழகுற கூற தெரியாதவன்.

கணினி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு..!!


Image result for கணினி தேர்வு


தமிழக அரசு பணியில் தட்டச்சர்,சுருக்கெழுத்தர் பணிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வில் (Certificate in computer on office automation)  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

வரும் டிசம்பர் மாதம் நடத்தப்பட வேண்டிய தேர்வு 2017 ஜனவரி மாதம் 7,8-ம்  தேதிகளில் நடத்தப்படுகிறது.இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 11-ம் தேதி என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.தற்பொழுது அத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ; (www.tndote.org)

மேலும் தகவலுக்கு ;   http://alleducationnewsonline.blogspot.in/