மீ.ச.மைனாவதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீ.ச.மைனாவதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 நவம்பர், 2018

தாமரை இலைத் தத்துவங்கள்

துன்பத்திலிருந்து வெளிவர,
துணையை நாடும், ஒவ்வொரு
நொடியும், தோல்வி அடைகிறோம்.
தன்னம்பிக்கையோடு வெளியே வா !
தடைகள்கூட தயங்கி நிற்கும்,
தனிமைகூட வரமாய் அமையும்.
நெருங்கிப் பழகினால் நசுக்கப்படுவாய், 
ஒதுங்கி வாழ்ந்தால் ஒடுக்கப்படுவாய்,
ஆகையால் தாமரை இலையாய் இரு.

ஞாயிறு, 28 அக்டோபர், 2018

என் அம்புலி தோழி

வாழ்க்கையைப்  புரிய வைத்த
வானின் வதனம் நீ !
தனிமையில் வாடிய போது
தோள் கொடுத்தத் தோழி நீ !
ஒப்பனை செய்யாத
ஓவியம் நீ !
உன்னை நெருங்க முயலவில்லை,
உறவு முறியக்கூடாது என்பதால்.
தொலைவில் இருந்தே,
தொடர்வேன் உன்னை ஒரு தோழியாக !


ஞாயிறு, 21 அக்டோபர், 2018

பாரதிக்கு ஓர் புகழாரம்

முண்டாசு கட்டாலும் ,
முருக்கு மீசையாலும் ,
என்னை மூழ்கடித்தாய்.

அடர்ந்த புருவத்தாலும் ,
அனல் பார்வையாலும் ,
என்னை ஆட்கொண்டாய்.

புரட்சி வார்த்தைகளாலும் ,
புதிய சிந்தனையாலும் ,
என்னை பூரிக்க வைத்தாய்.

ஓர் மகளாய் உன்மேல்
மாறாத காதல் கொண்டேன்.



ஞாயிறு, 14 அக்டோபர், 2018

வெற்றியை நோக்கி

                    சிந்திக்க முயலும் சில நொடியும்

                    சிறைபிடிக்கப்படுகிறது.

                    கவலையால் அல்ல,

                    வாழ்க்கைப் பற்றிய கற்பனையால்.

                    கற்பனை உண்மையாகும் வரை

                    காய்நகர்த்தப் போகிறேன்.

                    இடையில் துவண்டுபோவேன். 
                    
                    ஆனால் தோற்கமாட்டேன்.

செவ்வாய், 9 அக்டோபர், 2018

என் தங்கத் தாரகைக்கு

                           சற்றும் எதிர்பாராத நேரத்தில் ,
                           
                           சாவின் வலியை  உணர்த்தும் , ஓர்
                           
                           உன்னத ஆயுதம் என் தாயின் கண்ணீர் .
                            
                          
                           அதே போல்
                       
                           சாகா வரம் தரும் , ஓர்
                       
                           சத்தியச் சாரல்

                           என் அன்னையின் புன்னகை .


திங்கள், 8 அக்டோபர், 2018

கசக்கும் சில உண்மைகள்

                                  ஆடை என்னும் அவசியத்தை
                        
                                    அறைகுறையாக அணியும் வரை,
                         
                             குமரி என்பது மதுவாகும் ,
                         
                                    குற்றம் புரிவது எளிதாகும் ,
                          
                             பதுமை என்பதை மறந்துவிட்டு ,
                          
                                    புதுமையை நாட விரும்பாதே .
                           
                            அடக்கம் என்னும் அரும்மருந்து ,
                          
                                   அவசியம் அறிந்து அதை அருந்து .         

ஞாயிறு, 7 அக்டோபர், 2018

பெண் குழந்தைகளின் நிலை (கோபத்தின் வெளிபாடு)

                        சுற்றித்  திரியும்  அசுரர்களால்
                                   சூறையாடப்படும்  பெண்சிசுக்கள்
                       கன்னித்  தன்மை  அழிந்து
                                   கதறுகிறது  தமிழகம்
                       அவலம்  போக்க  அகிம்சை  முறையில்
                                  அடங்கிக்  கிடக்கும்  அர்ப்பப்  பதர்கள். 

சனி, 6 அக்டோபர், 2018

அன்னைக்குச் சில ஆசை வரிகள்

தொட்டணைத்துத் தூக்கி
தொட்டிலில் போட்டு,
முத்தமெனும் முத்திரையால்
முகத்தினை நிரப்பி,
பாசம் என்னும் இசையினிலே
தாலாட்டுப் பாடி,
கல்வி என்னும் கலையறிய
கல்லூரி அனுப்பி,
அணிகலன்கள் பலபூட்டி
அழகு பார்க்கும்,
அன்பு சிறிதும் குறையாத,
அழகு பொழியும் அன்னையை,
நினைவது தவறும் வரை
நித்தமும் மதித்திருப்பேன்.

வெள்ளி, 5 அக்டோபர், 2018

தமிழ் பண்பாட்டுச்சிறப்பு

பட்டில்  தெரியும்  பண்பாடும்,
பொட்டில்  தெரியும்  புன்னகையும்,
மஞ்சளில்  தெரியும்  மங்களமும்,
மலரில்  கமலும்  நறுமணமும்,
தலைகீழாக  நின்றாலும்,
தலைவிரி  கோலத்தில்  தெரிவதில்லை.