பயிலரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயிலரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 டிசம்பர், 2015

கணிதத் துறைப் பயிலரங்கம்


30.12.15 இன்று காலை பத்து மணிக்கு கணிதத்துறையின் பயிலரங்கம் நடைபெற்றது.  இப்பயிலரங்கில் கே.எஸ்.ஆா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் அரிமா டாக்டா் கே.எஸ்.ரங்கசாமி MJFஅவா்கள் தலைமை தாங்கினாா்.

செயலாளா் ஆா் சீனிவாசன் அவா்களும், செயல் இயக்குநா் திருமதி கவிதா சீனிவாசன் அவா்களும் முன்னிலை வகித்தனா்.

கணிதத் துறைத் தலைவா் ஹரிஹரன் அவா்கள் வரவேற்க, பயிலரங்கம் இனிதே தொடங்கியது. கே.எஸ்.ஆா் மகளிா் கல்லூரியின் முதல்வா் முனைவா் மா.கார்த்திகேயன் அவா்களும், கே.எஸ்.ஆா் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வா் முனைவா் இராதாகிருஷ்ணன் அவா்களும் வாழ்த்துரை வழங்கினா்.

சிறப்பு விருந்தினராக சென்னை வேல்டெக் பல்கலைக்கழத்திலிருந்து வந்திருந்த பேராசிரியா் முனைவா் வி.சுந்தரபாண்டியன் அவா்களும், திருநெல்வேலி மனோன்மணீயம் பல்கலைக்கழகத்தின் கணிதத்துரைப் பேராசிாியர் முனைவா் தமிழ்ச்செல்வன் அவா்களும் பயிலரங்கத்துக்கு வந்திருந்த மாணவா்களுக்கும் பேராசிரியர்களுக்கும் கணிதத்தின் அடிப்படை விதிகளையும், கணிதத்தை எளிமையாக கற்கும், கற்பிக்கும் வழிமுறைகளையும் விளக்கினா். கணிதத்தை தமிழிலே கற்பிக்க வேண்டும் அப்போதுதான் புரிதல் ஏற்படும் என்ற கருத்தையும் உலகநாடுகளின் கல்விமுறையை சான்று காட்டி விளக்கினா்.கணிதத்துறைப் பேராசிரியா் திருஇராமகிருஷ்ணன் அவா்கள் நன்றியுரை கூற பயிலரங்கம் இனிதே நிறைவடைந்தது.