படித்ததில் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படித்ததில் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

அறிவுள்ள ஐந்தறிவு விலங்குகள் அறிவில்லா ஆறறிவு மனிதன்



   

           காட்டில் சுட்டெரிக்கும் வெயில். அங்கு வாழும் விலங்குகளுக்கு புலி தான் தலைவன். ஒரு நாள் புலி சொன்னது நாம் வாழ்வதற்கு நீர் வேண்டும் ஆனால் மழை இப்பொழுதெல்லாம் அவ்வளவாக பெய்வதில்லை காரணம்காடுகள் அழிவதேஎன்றது. அப்போது யானை காட்டை அழிப்பது நாம் இல்லை மனிதர்கள் தான் மரங்களை வெட்டி காட்டை அழிக்கின்றனர் என்றது. மேலும் அங்குள்ள விலங்குகள் அனைத்தும் அவர்கள் தங்கள் எதிர்காலத்தை பற்றி நினைப்பதில்லை. அவர்களாக திருந்தினால் தான் உண்டு என்று கூறியது. உடனே புலி கிளி, காகம் போன்ற பறவையிடம் கூறியது கிடைக்கும் பழங்களை தின்று அவற்றின் விதைகளை காட்டில் பரப்புங்கள் என்றது. நாங்கள் தும்பிக்கையால் தண்ணீர் ஊற்றுகிறோம் விதைகள் முளைக்கட்டும், செடிகள் வளரட்டும், காடே பசுமையாகட்டும் என்றது யானைகள். நாம் அனைவரும் உயிர்மூச்சாக கொண்டு காட்டை காப்போம் என்றது புலி. சில ஆண்டுகள் கழிந்தன. காடெங்கும் பசுமை திடீரென வானம் இருண்டது மழை கொட்டியது. காட்டில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பின. விலங்குகளும் பறவைகளும் மகிழ்ச்சியால் ஆடிப் பாடின. அவை புதிய உலகை உருவாக்கி விட்டன. ஆனால்மனிதனாகிய நாம்???????????”

வியாழன், 6 ஏப்ரல், 2017

இந்தியா பரிசோதனை!!

இந்தியா பரிசோதனைக்காக விண்வெளிக்கு
ராக்கெட் அனுப்ப தீர்மானித்தது. கூட ஒரு மனிதனையும்....
போகும் மனிதன் திரும்பி வருவான் என எந்தவித நம்பிக்கையும் இல்லாததால்
நஷ்டபரிகாரம் தருவதாக முன்னதாகவே  தீர்மானம் செய்யப்பட்டது .

பலியாடு யாரென்று தீர்மானிக்கின்ற இன்டர்வியூவில் முதலில் வந்தது ஒரு சர்தார்ஜி.
இரண்டு லட்சம் ரூபா தன் குடும்பத்திற்கு தந்தால் தான் போகத்தயாரென்று கூறினார்.

ஆனால் அதற்கடுத்து வந்த ஹிந்திக்காரன் சொன்னான் தனக்கு ஒரு லட்சம் தந்தா
தான் போவதாக.

அடுத்த ஆளாக வந்தது ஒரு தமிழன்.

காசு கொடுத்தா எந்த நரகத்துக்கும் போகத்தயாரா இருப்பான் இந்த தமிழன்.
ஐம்பதாயிரத்துக்கு சம்மதிப்பான் அப்படினு நெனச்சார் இன்டர்வ்யூ
நடத்துபவர்.

ஆனால்....
தனக்கு மூனு லட்சம் தந்தா அதுல ஒரு லட்சம் ஆபிசர்க்கு தாரேனு தமிழன்
சொன்னதால ஆபிசர் சம்மதிச்சி தமிழன அனுப்புறதுனு தீர்மானம் ஆனது.

ராக்கெட் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
இரண்டு நாட்களுக்குப்பிறகு அதே தமிழன ரோட்ல வச்சி பாத்ததும் அதிர்ச்சி
அடைந்தார் இண்டர்வியூ நடத்திய ஆபிசர்.
அப்ப அந்த தமிழன் சொன்னது ...
"மூணு லட்சத்துல ஒரு லட்சம் உங்களுக்கு தந்தேன். ஒரு லட்சம் கொடுத்து
அந்த ஹிந்திக்காரன ராக்கெட்ல ஏத்தி விட்டேன்.பாக்கி ஒருலட்சம் நா
எடுத்துக்கிட்டேன்."
!!!!!!!!!!!!!!!!!!!

“எனக்கு பிடித்த பூ-வின் குணங்களிள் உள்ள பெண்”

    





  
     எனக்கு பிடித்த ‘பூ’ “தாமரை” ஆகும். ஏன் தாமரை மலர்களிடம் உள்ள குணங்களை பெண்களோடு ஒப்பிடுகிறேன் என்றால், தாமரை என்பது ஒரு பெரிய அழகான பூ. அதன் இலைகளில் தண்ணீர் விழுந்தால், அது அதை ஒரு பொருட்டென எடுத்துக் கொள்ளாது, கீழே விழச்செய்துவிடும். அதுபோல, பெண்ணானவள் அந்த தண்ணீர் துளிப்போல் இருக்கும் பிரச்சனைகளை, ஒரு பொட்டாக எடுத்துக்கொள்ள மாட்டால்.
     தாமரை மலரை சுற்றியும் தண்ணீர் நிரம்பிக்கிடந்தாலும், மூழ்காமல் தனித்து நின்று மலர்களுக்கே பெருமை சேர்க்கும். அதுபோல, பெண் இந்த சமுதாயத்திலும் இந்த உலகத்தில் தனித்து ஓங்கி நிற்பால்.
      இதுவே , எனக்கு பிடித்த பூவின் குணங்களின் உள்ள பெண்.


பண்பாடுகள்

  
        மனித குலத்தின் மிகப்பழமையான பண்பாடுகளில் இந்தியப் பண்பாடும் ஒன்றாகும். ஒரு நிலையில் இந்தியா பல பண்பாடுகள் அல்லது கலாச்சாரங்களின் கலவை என்றாலும், சீன, ஐரோப்பிய, முஸ்லீம், ஆப்பிரிக்க, பூர்வீக அமெரிக்க பண்பாடுகள் போன்ற ஒரு தனித்துவமான பொது பண்பாடு இந்தியாவுக்கு உண்டு. இப்பண்பாடு பல முனைவுகளில் இருந்து பெறப்பட்ட தாக்கங்களை உள்வாங்கி வெளிப்பட்டு நிற்கின்றது.
    வட இந்தியா ஆசிய பெரு நிலப்பரப்பை அண்மித்து இருந்ததால், அது தென் இந்தியாவைக் காட்டிலும் பல்வேறு ஆளுமைகளுக்கு அல்லது தாக்கங்களுக்கு உட்பட்டது எனலாம். சில வரலாற்று அறிஞர்கள் தென் இந்தியா தொடர் வெளி ஆக்கிரமிப்புக்களுக்குள் உள்ளாகாததால், உண்மையான இந்திய பண்பாடு தென் இந்தியாவிலேயே கூடுதலாக வெளிப்பட்டு நிற்கின்றது என்பர். எனினும், தென் இந்தியாவின் தென் கிழக்கு ஆசிய தொடர்புகள், இலங்கையுடான உறவு, பிற கடல் வழி தொடர்புகள் இந்திய பண்பாட்டின் உருவாக்கத்தில், பரவுதலில் முக்கிய கூறுகள்.

கதை சொல்லும் பழக்கம்


            18 மற்றும் 19 ஆம்  நூற்றாண்டு  வரை வழக்கத்திலிருந்த கதை  சொல்லும்  பழக்கம்இன்று  கால  அளவில்  மறைந்துவிட்டது.  அந்த  காலத்தில்  பாட்டிகள்  தங்களது  பேரன், பேத்திகளை  உட்கார  வைத்து  கதை  சொல்லுவார்கள். ஆனால், இன்று  குழந்தைகள்  அனைவரும்     செல்பேசியுடன்   விளையாண்டுக்  கொண்டு  இருக்கிறார்கள். பாட்டிகள்  ஒரு  பக்கமும், பேரன் பேத்திகள்  ஒரு  பக்கமும்  இருப்பதால்  அவர்களுக்கிடையே  உள்ள அன்பு  குறைந்துவிட்டது.   அதனால்  இன்று  பள்ளி  மற்றும் கல்லூரி  அளவில்  மாணவ, மாணவிகள்  கதை சொல்லும்  பழக்கத்தை  ஆரம்பித்துள்ளார்கள். இனி  அனைத்து  பள்ளி, கல்லூரிகளிலும்  கதை  சொல்லும்  வழக்கத்தை  மேற்க்கொண்டால்  பழைய  சமூகத்தைத்  திரும்ப  பெறலாம்.

தலையணை...





தலையணை இல்லாமல் படுத்து உறங்குவதால் பெறும் நன்மைகள் பற்றி தெரியுமா?

• கழுத்து!

தலையணை இல்லாமல் உறங்குவதால் தோள்பட்டை மற்றும் கழுத்து வலி உண்டாகாமல் தடுக்க முடியும். வலியை குறைக்க முடியும்.

• சீரமைப்பு!

தலையணை இல்லாமல் படுத்து உறங்குவதால் உடலின் எலும்பு நிலைகளை சீராக்க முடியும். ஆனால், சிலருக்கு மருத்துவ நிலை காரணமாக தலையணை பயன்படுத்துவதாக கட்டாயமாக இருக்கும், அவர்கள் தலையணை பயன்படுத்த வேண்டியது அவசியம்.

• முக சுருக்கங்கள்!

தலையணை பயன்படுத்தாமல் உறங்கினால் முகத்தில் சுருக்கங்கள் அதிகமாகாது என கூறப்படுகிறது.

• மெல்லிய தலையணை!


நேராக படுத்து உறங்கும் பழக்கம் உடையவர்களுக்கு மெல்லிய தலையணை சிறந்தது. இது கழுத்து, தலை, தோள்ப்பட்டை பிரச்சனைகள் உண்டாகாமல் காக்கும்
.
• அடர்த்தியான தலையணை!

ஒருபக்கமாக படுத்து உறங்கும் நபர்களுக்கு அடர்த்தியான தலையணை சிறந்தது. இது தோள்பட்டை மற்றும் காதுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தி கொடுக்கும்.

• தட்டையான தலையணை!

குப்புறப்படுத்து உறங்கும் நபர்களுக்கு தட்டையான தலையணைகள் சிறந்தது.இது தலையின் நிலை அசௌகரியமாக உணராமல் இருக்க உதவும். மேலும், முதுகு, இடுப்பு வலி ஏற்படாமல் தடுக்கும்.

மாணவர்களுக்கு கலாம் கூறிய அறிவுரை




இந்திய விஞ்ஞானத்தின் தந்தை என்றழைக்கப்படும்
டாக்டர் அப்துல்கலாம் மாணவர்களுக்கு சொன்ன அறிவுரை:-
“வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும்
என நினைத்தால் ஒரு இலக்கு வேண்டும்.
ஆனால் அந்த இலக்கு பெரிதாக இருக்க வேண்டும்.
சிறிய இலக்கை வைத்திருப்பது குற்றத்துக்குச் சமம்…
அம்மாவின் பேச்சைக் கேளுங்கள், ஆசிரியர்களை
மதியுங்கள்,”

மூடநம்பிக்கைகள்




         மூடநம்பிக்கைகளை  ஒழிப்பது  என்பது  வருங்கால  இளைஞர்களின்  கைகளிலே  உள்ளது. எப்படியென்றால்,  இனி  வரும்  இளைஞர்களாவது  பூனை  குறுக்கே  போனால்  தடங்கல்  என்று  நினைப்பது, ஜாதகம்  பார்ப்பது, நல்ல  நேரம்  பார்ப்பது போன்றவைகளை  நம்பாமல்  இருக்க  வேண்டும். அதுமட்டுமல்லாமல், பால்குடம்  எடுத்தல், பூ மிதித்தல், பரிகாரம்  செய்தல்  போன்ற செயல்களில்  ஈடுபடாமல்  இருக்க  வேண்டும். ஈடுபடாமல்  இருந்தாலே  போதும்  மூடநம்பிக்கைகள்  ஒழிந்துவிடும். எனவே, மூடநம்பிக்கைகளை  ஒழிப்போம்!  நிம்மதியான  வாழ்வை  வாழ்வோம்!!

இந்தியப் பெண்மணிகள்



Image result for bharatha thai
          இந்தியாவின்  புனித  மண்ணில்   பிறந்தவர்கள்  தான்  சீதை  சாவித்திரி. இந்த  நாட்டுப்  பெண்களிடம்தான்  சேவை  மனப்பான்மை, அன்பு, கருணை, அகமலர்ச்சி, பணிவு  ஆகிய  பண்புகளைக்  காண  முடியும். இப்படி  உலகில்  வேறு  எங்குமே  பார்க்க  முடியாது. மேலைநாட்டுப்  பெண்களைப்  பார்த்தால்  பல  சமயங்களில்  பெண்களாகவே  தெரியாது. அவர்கள்  முழுக்க  முழுக்க  ஆண்களின்  நகல்  போலவே  இருப்பார்கள். பெண்ணுக்கு  உரிய  அச்சம், நாணம் போன்ற பண்புகளை  இந்தியப்  பெண்களிடம்  மட்டுமே  நாம்  பார்க்கமுடியும்.”சீதையைப்  போல்  வாழ்வாயாக”  என்று  நம்  நாட்டுப்  பெரியோர்கள்  பெண்களை  வாழ்த்துவது  வழக்கம்.


விண்ணுக்கு சென்றாலும்- அப்துல் கலாம்

                                      விண்ணுக்கு சென்றாலும் – எங்கள்
                                                கண்ணுக்குள் வாழ்கிறீர்                                       


அப்துல்  கலாம்

கடைக் கோடி கடல் மணலில் கால் பதிந்து
உழைப்பால் வட கோடியின் உச்சம் தொட்ட
உன்னத தலைவர் – நீர்…, 
காலன், நேசிக்கும் இதயங்களோடு – நீர் பேசிக்கொண்டிருக்கும்  போதே
                                                                                                                          
எங்களிடமிருந்து பிரித்து விட்டான்
தூங்காமல் செய்வது தான் கனவு என, கனவுக்கு முப்பரிம்மாணம்  தந்தீர்!
                                                                                                                             
உம் இளைஞர்களை கடந்த ஓராண்டுகளாய் தூங்காமல்   செய்திருக்கீறீர்
                                                                                                          
உம் இறப்பும் கனவு தானோ?
நீர் பூமிக்குள் விதைக்கப்பட்டிருக்கலாம்
புன்னகைக்கும் உம் இதழ்கள் எங்கள் மாணவர்கள், இளைஞர்கள்
இதயத்துக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன….

ஏவுகணையில் ஏற்றினாய் தமிழின் பெருமை

உம்மை நினைப்பது எங்களின் பெருமை……