செ.வைசாலி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செ.வைசாலி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

இளம்பெண் பேச்சாளர்கள் தேடல்..




#3teentalk #talkathon #ksrcasw  #2K19

இளம் பெண் பேச்சாளர்களை உருவாக்கும் மேடைகளில் ஒன்றாக எமது கல்லூரியும் செயல்பட்டு வருகிறது என்பதில் பேரின்பம் அடைகிறோம்..

ஒரு மேடை..
மூன்று பரிசுகள்...
மூன்று விருதுகள்..
ஒரு வெற்றியாளர்..

பெண்ணே நீ பேச தொடங்கினால் நாடும் வளர்கிறது என்று ஒரு மறைப்பொருள் உள்ளது.. அதை உணர்ந்து உங்கள் பேச்சாற்றலை வெளிப்படுத்த வாரீர்...

அக்டோபர் 17..
#ksrcasw... #talkathan..
தலைப்பு - இணைய உலகில் பெண்களின் நிலை.

மேலும் விவரங்களுக்கு

முனைவர் பு.பிரபுராம்   - தமிழ்த்துறைத் தலைவர் 

82488-23125

திங்கள், 21 மே, 2018

நீண்ட நாட்களுக்கு பிறகு...



தென்றல் காற்று காதுகளை வருடிக் கொண்டும்..
மழைச்சாரல் உடலை நனைத்துக் கொண்டும்..
எனது உதடுகளோ மெல்லிசை வரிகளை முணுமுணுக்கிறது..
கைகளோ தாளம் இசைக்க கால்களோ துள்ளிக் குதிக்கின்றன..
மிதந்து வரும் மண்வாசனையில் உள்ளம் தொலைந்து போகிறது..
போர்வைக்குள் மறைந்து மறைந்து வெளியில் எட்டிப் பார்க்கிறது உடல்..
மரங்களை வெட்டியதால் கோவம் கொண்டு பொழிகிறதா.?
இல்லை ஏழை விவசாயிகள் சிரிக்கட்டும் என்று பொழிகிறதா.?
நாட்டில் நிலவும் அநியாயத்தை கண்டு அழுகிறதா.?
நீ வந்தாலும் அவஸ்தை தான்...
வராவிட்டாலும் அவஸ்தை தான்...
இயற்கையை செயற்கையால் மறைக்க இயலுமா..?
எவ்வளவுதான் தொழில்நுட்ப வளர்ச்சி கண்டாலும்
குளியலறையில்  செயற்கை ஷவரில் குளிப்பதை விட
இயற்கையாக அமைந்த ஷவரில் குளிக்கவே விரும்புகிறது..

என்ன சொல்வது என்று தெரியாமல்  எனக்கு எட்டிய வார்த்தைகளை கோர்த்து  எழுதிவிட்டேன். . மழையில் நனைந்த படி எனது எழுத்துக்களும் நனைக்கிறது..

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

யார் குற்றவாளி..?



உன்னை பெற்றவளும் உன் உடன் பிறந்தவளும் பெண் தானே அவர்களிடம் யாரேனும் இப்படி செய்தால் ஒப்புக் கொள்வாயா.?

நான்கு சுவர்களின் நடுவில் நடக்கும் இரகசியமான புனிதமான கலவியை என்றைக்கு நான்கு திரைகள் போட்டு கூத்தாடிகளும் ஊடகங்களும் திரையிட ஆரம்பித்தோ அன்றே அந்த புனிதம் தோல்வி அடைந்தது...

மேலும் பாலியல் கல்வியை வழங்க தவறிய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் கவனக் குறைவும் இதற்கு ஒரு காரணம் தான்..

பெண்களை தசைகளாவும்  ஆண்களை தவறாகவும் சித்தரித்த ஊடகமே பெண்களுக்கு எதிராக தொடரும் வன்கொடுமைகளுக்கு மற்றொரு காரணம்..

விருப்பத்துடன் தொடுவதால் ஒரு பெண் தாயாக மாறுகிறாள்.. விருப்பமின்றி தொடுவதால் ஒரு பெண் விலைமகள் ஆகிறாள்.. வற்புறுத்தி தொடுவதால் ஒரு பெண் கற்பை மட்டுமின்றி உயிரையே இழக்கிறாள்...

பாரதி காண விரும்பிய புதுமை பெண்ணாக வெளி வர நினைக்கும் பெண்களுக்கு இவைகளை காணும் போது அச்சம் மட்டுமே வெளி வருகிறது.. யாருடைய பிழை.? காதலுக்கும் காமத்துக்கும் வேறுபாடு தெரியவில்லையா.? இல்லை பெண்மைக்கு பாதுகாப்பு இல்லையா.?

போதும் கலாச்சாரத்தை மாற்றியதற்கு தண்டனையாக கருதுகிறேன்.. ஆடை குறைந்தது ஆண்மை பெருகியது பெண்மையை அழிந்தது.. போதும் இனியாவது விழித்துக் கொள் தமிழினமே... மேலை நாட்டவர்கள் கற்புடனும் உயிருடனும் இருக்கிறார்கள்..

நமது நிலை.? நமது நிகழ்காலம்.? நமது அடுத்த தலைமுறை.? இன்னும் அப் டேட் என்று சொல்லியது போதும்.. தந்தை களுக்கு ஒரு வேண்டுகோள் தங்களின்  மனைவி மற்றும் குழந்தைகள்  ஆகியோரின் ஆடையிலும் கலாச்சாரத்திலும் கவனமாக இருங்கள்.

டைட் லெக்கின்ஸ் டாப்ஸ் ஜீன்ஸ் மிடி என்று போட்டது போதும்.. உடலை மறைக்கவே ஆடை.. உடலை அழகுப் படுத்த ஆடை இல்லை..

ஆதங்கத்துடன் வைசாலி செல்வம்..

ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

காமத்தோடு பெண்ணை நெருங்கும் ஆண்களுக்கு...




முகநூலில் படித்ததில் மிகவும் சிந்திக்க வைத்த பதிவு..
ஆசிரியர் : சுரேஷ் சுவி.

தாலி கட்டிய அன்றிரவோ இல்லை
மனதால் இணைந்த அந்த நிமிடங்களிலோ
அப்படி ஒரு ஆத்மார்த்தமான அரவணைப்பு
ஆடை கலைப்பு என
சுகமாக அரங்கேறும்
பல நிகழ்வுகள்

உனக்கு எப்படியோ தெரியவில்லை
எனக்கு மிகுந்த வலி இருப்பினும்
சுகமாக அனுபவித்தேன்

அன்றிலிருந்து
நிகழும் நிகழ்வுகளை அடுக்குகின்றேன் பார்

அதிகாலை எழுந்து
குளித்து சமைத்து
முத்தத்தோடு உனக்கு
உணவை கொடுத்து அனுப்பிய பின்பு
துணி துவைத்து
வீடு சுத்தம் செய்து
ஆடைகள் சமன் செய்து
அழகாக மடித்து வைத்து
உன் அம்மாவுக்கு இல்லை நம் அம்மாவுக்கு
பணிவிடை செய்து
மகனையும் மகளையும் பாடசாலை
அனுப்பி வைத்து
மறுபடியும் சமைத்து
நமது பிள்ளைகளை
பாசத்தோடும் கண்டிப்போடும் கண்காணித்து
ஓடிக்கொண்டே இருக்கிறேன் நான்

இன்னும் ஒன்று
சொல்கிறேன் கேள்

முதல் முறை கூடலின் போது
ஒரு வலி உணர்ந்தேனே
அதை விடவும் ரணம் என்றார்கள்
மகப்பேறு
பயந்து நடுங்கி நகர்ந்து கொண்டிருந்தேன்
பெருமையோடு நம் பிள்ளையை
வயிற்றில் சுமந்து
பெறுமாதம் வந்தவுடன் சொன்னார்கள்
குழந்தை வலம் மாறியதால்
வயிற்றை வெட்டி தான் எடுக்க வேண்டும்
என்று

இப்பொழுது
சொல்கிறேன் கேளுங்கள்

ஆடை சற்று விலகியவுடன்
எட்டி எட்டி பார்ப்பீர்களே
மறைவான பகுதி தெரிகிறதா என்று
முழுதாக உரித்து சுவையாக சுவைத்து
சூட்டைத் தணிப்பீர்களே
அப்போதெல்லாம் காம விருந்தாக
தெரிந்தவளை இப்போது பாருங்கள்

நன்றாக பாருங்கள்
விழிகளை விழித்துப் பாருங்கள்

நீங்கள் அடைய துடிக்கும்
மறைவான பகுதிக்கு மேல்
சதையை வெட்டி தைத்துள்ளார்களே
இதை நன்றாக பாருங்கள்

என்னை வெட்டியேனும்
என் குழந்தையை பத்திரமாக
வெளியில் எடுங்கள் என்று
ஒரு பெண் சொல்கிறாளே
உங்களை வெட்ட நீங்கள் சம்மதிப்பீர்களா?

இச்சை கொண்டு
நோக்கும் ஆண்கள்
இதை நன்றாக பார்த்து
பிறிதொரு பெண்ணை நோக்குங்கள்
கண்டிப்பாக காமம் கலக்காது
உங்கள் கண்களில்
தாய்மையின் மகத்துவம்
மட்டுமே தென்படும்
என்பேன் நான்!!

கூடலின் வலி
மகப்பேறின் வலி
வயிற்றை வெட்டித்
தைத்ததன் வலி
இவையெல்லாம்
மறந்து போகும்
இந்த மழலையின் முகம் பார்க்கையில்

ஒவ்வொரு பெண்ணும்
ஒவ்வொரு அதிசயம்....!!!

புதன், 7 பிப்ரவரி, 2018

நவீன இந்தியாவின் சிறப்பு அம்சங்கள்...



ரூபாய் மாற்றம்.
ஜி.எஸ்.டி
ஆதார் அட்டை அமைப்பு.
ஜல்லிக்கட்டு தடை.
தமிழ்நாட்டின்  முதலமைச்சர்கள்.(குழப்பம்)
அனிதா மரணம்.
அம்மா இட்லி சாப்பிட்டாரா. ?இல்லையா.?
தர்மகோல் சாகசம்.
விவசாயிகள் மரணம்.
கூத்தாடிகளும் அரசியலில்.
ஜியோ சிம் அதிரடி சலுகைகள். 
+1 பொதுத் தேர்வாக அறிவிப்பு.
ஸ்மார்ட் ரேசன் கார்டு. 
10 இலட்சம் சம்பளம் பெறுபவர்களுக்கு ரேசன் பொருட்கள் ரத்து.
பெரியார் விருது.
( டாக்டர் )தமிழிசை சவுந்தரராஜன்.
ஓட்டுநர் ஊதிய உயர்வு.
பேருந்து பயணச்சீட்டு விலை உயர்வு.
இலவச ஸ்கூட்டர்.
மதுபானங்கள் மூலம் இலாபம்.
பல்கலைக்கழக ஊழல்.
பட்ஜெட் தாக்கல்.

இன்னும் பல அம்சங்களை உள்ளடக்கியது டிஜிட்டல் இந்தியா. இது சிரிப்புக்கு அல்ல சிந்திக்க.. நமக்கு தெரிந்து இவ்வளவு நடைபெற்று வருகிறது. நமக்கு தெரியாமல் நமது உழைப்பை திருடும் கார்ப்பரேட் நிறுவனங்கள்,அரசியல்வாதிகள், அரசு மற்றும் ஊடகங்கள்.. இவற்றிற்கு விலை போன மக்கள்..

இதுவா சுதந்திர இந்தியா. ?
இதற்கு ஆங்கிலேயர் ஆட்சியிலே  இருந்திருக்கலாம்..
ஊழல் இலஞ்சம் இலாபம் கொலை கொள்ளை.. இன்னும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று தெரியாமல் ஆட்டு மந்தையை போல ஒரு வாழ்க்கை..

இந்தியா வல்லரசு பிறகு முதலில் இந்தியாவில் நல்லரசு தான் முக்கியம்..மாற்றத்தின் மாய நிறங்களை கண்டறிய முற்படுங்கள்.

சனி, 2 டிசம்பர், 2017

பெண் காமத்துக்கா.? காதலுக்கா.?




India's daughter documentary film..

இன்று தான் இந்த குறும்படத்தை பார்த்தேன்.என்னுள் அடக்க முடியாத அளவுக்கு கோபமும் தாங்கி கொள்ள முடியாத அளவுக்கு கோபம் கலந்த கண்ணீருமே இந்த பதிவுக்கு காரணம்.

பெண்களுக்கும் உணர்வுகள் உண்டு. ஆனால்  அவளை காமப் போதைக்கு ஊறுகாயாகப் பயன்படுத்துவது தனது அம்மாவை விற்றுக் குடிப்பதற்கு சமம். இதற்கு காரணம் யார். ? ஒரு குழந்தை நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னையின் வளர்ப்பு தான் என்று நாம் யாவரும் அறிவோம். ஆனால்  ஒரு குழந்தையின் வளர்ப்புக்கு அன்னையை தவிர இன்னும் சிலருக்கு பங்கு உண்டு. ஆம் அது அந்த குழந்தையின் தந்தை அவரை அடுத்து அவளது ஆசிரியர்கள் இவர்கள் மூவரின் வளர்ப்பில் தான் ஒரு குழந்தை வளரும்.கல்வி இல்லாத குழந்தைகளும் இந்த சமூகத்தால் வளர்க்கப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் லட்சுமி குறும்படம் நம்மை கோவத்திலும் சிந்திக்க வைத்தது.ஒரு சராசரி  அலுவலகம் சென்று நடுத்தர வாழ்க்கையை நடத்தும் பெண்ணை குறித்து இருந்தது.

இந்த  இரண்டு குறும்படத்தையும் பார்த்த பிறகு தான் எனக்கு புரிந்தது ஒவ்வொரு பெண்ணையும் தசையாக மட்டுமே பார்க்கும் ஆண்களுக்கு மத்தியில் ஒரு இலட்சுமி உருவாக்கப்படுகிறாள். உணர்வுகளையும் அன்பையும் சேர்த்து ஒரு ஆண் பெண்ணை நெருங்கும் போது அவள் தாய்மை அடைகிறாள். ஆனால்  அதே பெண்ணை வெறும் காமத்தோடு மட்டும் நெருக்கடி கொடுக்கையில் அவள் விலைமகளை விட இழிவான நிலைக்கு தள்ளப்படுகிறாள்.

பெண்ணியம் பற்றி இன்று நிறைய பேசுகிறோம். பெண்ணின் சுதந்திரம் அவளிடம் உள்ளது ஆனால் சில பெண்களின் சுதந்திரம் சமூகத்தை சார்ந்தே உள்ளது. பெண்மையை சதையாகவும் ஆண்மையை தவறாகவும் சித்தரிக்கும் ஊடகங்களின் விளைவும் ஆசிரியர்களின் கவனக் குறைவும் தான் இதற்கு காரணம் என்பது எனது கருத்து. ஆம் ஆசிரியர்களை நான் குறிப்பிடுவதற்கு காரணம் பாலியல் என்பது உடலை மட்டும் அல்ல உணர்வுகளையும் குறித்தது.

பெரும்பாலும் அறிவியல் பாடத்தில் பாலியல் குறித்த விவரங்களை அடக்கிய பாடங்களை கற்றுத் தரும்  ஆசிரியர்கள்  அதனை மேற்கொள்ளும் போதே சீ... ஐ..யோ... என்றும் அதனை மாணவர்களுக்கு எடுக்க கூச்சப்படுவதால் தான் அவர்களுக்கு பாலியல் என்றாலே பெரும் குற்றாமகவும் பெண்களிடம் தான் அதனை அடைய முடியும் அதற்காக அவர்களை பயன்படுத்தலாம் என்ற தாக்கமும் ஆண்கள் மத்தியில் ஏற்படுகிறது ( ஒரு சில ஆண்களுக்கு  மட்டும் ) என்பது எனது கருத்து.

பெண்களை போற்றும் பெண்ணியம் தான் வேண்டும்.. பெண்களின் சுதந்திரம் அவளிடம் தான் உள்ளது.. கல்வியின் மூலம் தான் தீர்வு காண முடியும்.. இன்று பெரும்பாலும் இணையத்தில் தான் உலவுகிறோம். சினிமாவிலும் சரி, விளம்பரத்திலும் சரி, படுக்கையறை காட்சிகளை  ஆபாசமாக காட்டுவதே இதற்கு முக்கியக் காரணம். முத்தக் காட்சியில் ஆரம்பித்து பாலியல் வரை அனைத்தும் ஒவ்வொரு சிறுவர்களையும் பாதிக்கிறது. இரண்டு வயது சிறுவன் முதல் கட்டையில் போகும் மனிதன் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்த மாதிரியான காட்சிகள்.

இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு பெற்றோர்களும் தனது குழந்தைகளின் முன்பு சண்டைகள் மட்டுமின்றி பாலுறவு வைத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இன்றைய குழந்தைகளுக்கு வீட்டில் கற்று தரும் பாடத்தை விட இணையத்திலும் சமூகத்திலும் கற்று கொள்ளும் பாடமே அதிகம்.

ஆசிரியர்கள் மட்டும் இதை கற்றுத் தர வேண்டும் என்று இல்லை.  பெற்றோர்களும் தனது குழந்தைகளுக்கு ஆண் பெண் உடலமைப்பு, ஹார்மோன் மாற்றங்கள், ஆண் பெண் வித்யாசம், ஆண் பெண் பருவமடைதல் மற்றும் உடலுறவு பற்றிய விழிப்புணர்வை போன்ற நல்ல முறைகளை சொல்லிக் கொடுத்து வளர்க்கவும்.

இன்னும் எழுதவே நினைக்கிறேன்.. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதும் ஆச்சிரியக்குறி வைப்பதும்  ஒவ்வொருவரின் மனதில் தான் உண்டு..

திங்கள், 27 நவம்பர், 2017

சாணக்கியா 2017





அன்புடையீர் வணக்கம்,

இந்த வருடத்திற்கான சாணக்கியா தேடல்.கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறையின் சார்பில் ஒவ்வொரு வருடமும் சாணக்கியா என்ற தலைப்பில் வணிக வினாடி வினா மற்றும் சிறந்த மேலாளர் போன்ற  போட்டிகள் நடைபெற்று வருகின்றன.இந்த ஆண்டு வருகிற டிசம்பர் 14,2017 அன்று சாணக்கியா நடைபெற உள்ளது.இதில் பங்கேற்க கட்டணம் ஏதும் இல்லை.அனுமதி இலவசம். பங்கேற்பவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழும் உண்டு.மேலும் பார்வையாளர்களுக்கும் சிறந்த பரிசு உண்டு. வணிகவியல் சார்ந்தும் சாராமலும் அனைத்து பாடப்பிரிவினரும் கலந்து கொள்ளலாம்.

பெண்கள் வணிகத்திலும் சாணக்கியர் தான் என்பதை நிரூபிக்க சிறந்த ஒரு வாய்ப்பாக அமைய  உள்ளது.ஆர்வமுள்ள கல்லூரி மாணவிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

மேலும் தொடர்புக்கு,
ஆர்.வாசுகி - 8807473229
(வணிகவியல் துறைத்தலைவர்)



புதன், 8 நவம்பர், 2017

பன்னாட்டுக் கருத்தரங்க அறிவிப்பு

கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், தமிழ் மற்றும் ஆங்கிலத்துறை இணைந்து நடத்தும் மூன்றாமாண்டு பன்னாட்டுக் கருத்தரங்கம்.
தலைப்பு - தமிழ் ஆங்கில இலக்கிய ஒப்பாய்வுக் களங்கள்

கருத்தரங்க நாள் - 12.12.2017


கட்டுரை வழங்க இறுதி நாள் - 15.11.2017

தொடர்புக்கு - 9894829151
தாங்கள் கட்டுரை வழங்கி கருத்தரங்கை சிறப்பிக்குமாறு 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




வெள்ளி, 27 அக்டோபர், 2017

உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களே..



வணிக நோக்கில் கல்வியா.?
கல்வியை வைத்து வணிகமா.?
அறிவை பெறுபவர்கள் குறைவா. .?
அறிவை விற்பவர்கள் அதிகமா. ?
அரசும் சட்டங்களும் மக்களுக்கா. ?
மக்கள் அரசுக்கும் சட்டத்திற்குமா.?
இது ஜனநாயக நாடா. .?
பணநாயகர்கள் நாடா. .?
ஏழ்மையை ஒழிக்க தேர்வுகளா. ?
ஏழையை ஒழிக்க தேர்வா. ?
அரசு வேலைக்கு போட்டித் தேர்வுகள் தேவையா. ?
அரசியல் வேலைக்கு தேர்வுகள் தேவையில்லா போட்டியா. .?
ஒரு பக்கம் நீலத் திமிங்கலம் விளையாட்டு மூலம் தற்கொலை. ?
மறு பக்கம் நீட் தேர்வு என்ற பெயரில் தற்கொலை. ?
ஒருபுறம் கந்துவட்டி.?
மறுபுறம் ஜிஎஸ்டி.?

இத்தனை கேள்விகளுக்கு காரணம் என்ன தெரியுமா. ?
நமது மூளையும் உரிமையும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமும் அரசியல்வாதிகளிடமும் விலை போனதே அதன் தொடர்ச்சி தான் இவைகள் அனைத்தும்...


புதன், 25 அக்டோபர், 2017

மூன்று மணிநேரம் தேர்வுகள்.


மூன்று மணிநேரம் தேர்வுகள்...
மூன்றாண்டுகளுக்கு பிறகு..?
மாணவர்களின் எதிர்காலம்..?
இதற்கு யார் காரணம்..?
கல்வி நிறுவனங்களா..?
பெற்றோர்களின் பேராசையா அல்லது அவர்களின் முட்டாள்தனமா ..?
மாணவர்களின் கவனக் குறைவா..?
கல்வி சேவையா அல்லது முதலீடா..?
இவர்களில் யார் மீது தவறு..?


சனி, 22 ஜூலை, 2017

வாசிப்பை நேசிப்போம்


  

நூல்களே நம்மை செதுக்கும் சிற்பியாகவும், நம்மை நல்வழியில் இட்டுச்செல்லும் நண்பனாகவும், வாழ்க்கையை போதிக்கும் ஆசானாகவும், நம்மை நமக்கே அடையாளம் காட்டும் அகக்கண்ணாடியாகவும் இருக்கின்றன.இத்தகைய எழுத்துகள் அன்று ஓலைச்சுவடிகளாகவும் பிற்காலத்தில் நூல்களாகவும் வடிவம் பெற்றன.இன்றோ நூல்கள் எல்லாம் மின்னூல்களாக மாற்றம் பெற்று உள்ளன.இனிவரும் காலத்தில் நூல் வாசிப்பு என்பது இருக்குமா..?? என்பது இன்றைய தலைமுறைக்கும் நாளைய தலைமுறைக்கும் புரிய வைக்க வேண்டிய நிலையே இன்று ஏற்பட்டுள்ளது.
இதனை விளக்கும் விதமாக வாசிப்பு குறித்து திரு.கலியமூர்த்தி எஸ்.பி அவர்கள் பேசிய காணொளியை இங்கு பகிர்ந்துள்ளேன்.