சுதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஏப்ரல், 2017

காற்று



             
                              
நீரோடையில் ஓடிவிளையாடும்
குழந்தைகளுக்குத் தெரியுமா?
நாம் விஷக்காற்றை சுவாசிக்கிறோம் என்று
நாம் எப்போது இயற்கை காற்றை சுவாசிப்போம்
மரங்களை வெட்டுவதை நிறுத்தி விட்டு
வளர்க்கத் தொடங்கினால் மட்டுமே
இயற்கைக் காற்றை சுவாசிப்போம் .........!   

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினால்
காற்று இறுகியது
குப்பைகளை கொட்டி எரிப்பதினால் புகை –ஆனது
காற்றியில் கலக்கும் போது நோய்வாய்ப்படுகிறது.
புகை பிடிப்பதினால் காற்று ரணமானது.
எப்படி சுவாசிப்பது ?
நுரையீரல் இப்போது இரும்பினால் வேண்டும் எனக்கு .
சுவாசிக்கும் காற்றே விஷம் ஆனால்
தொட்டில் கூட கல்லறையாக மாறிவிடும் .
அடுத்த நூற்றாண்டு மனிதன் இருப்பனோ இல்லையோ ?
இனியவது  மரங்கள்  ஊன்றி  தூய்மையான
காற்றை சுவாசிப்போம் .
வாழ்வதற்க்கு உணவு எவ்வளவு முக்கியமோ –அது போல்தான்                       
சுவாசிப்பதற்க்கு காற்று முக்கியமான ஒன்றாகும்.
     

   
          

              

வீரமாமுனிவர் கூறும் 96 வகைச் சிற்றிலக்கியங்கள்




1)சாதகம்                  42)வதோரணமஞ்சரி
2)பிள்ளைத்தமிழ்           43)எண்செய்யுள்                 
3)பரணி                   44)தொகைநிலைச் செய்யுள்
4)கலம்பகம்                45)ஒலியல் அந்தாதி
4)கலம்பகம்                46)பதற்றந்தாதி
6)ஐந்திசணைச் செய்யுள்    47)நூற்றந்தாதி
7)வருக்கக் கோவை         48)உலா
8)மும்மணிக்கோவை       49)உலாமடல்
9)அங்கமாலை             50)வளமடல்
10)அட்டமங்கலம்           51)ஒருபா ஒருபஃது
11)அநுராகமாலை           52)இருபா இருபஃது
12)இரட்டைம்மணிமாலை   53)ஆற்றுப்படை
13)இணைமணிமாலை      54)கண்படை நிலை
14)நவமணிமாலை          55)துயிலெடை நிலை
15)நான்மணிமாலை         56)பெயரின்னிசை
16)நாமமாலை              57)ஊரின்னிசை
17)பலசந்த மாலை         58)பெயர் நேரிசை
18)கலம்பகமாலை          59)ஊர் நேரிசை
19)மணிமாலை             60)ஊர் வெண்பா
20)புகழ்ச்சி மாலை          61)விளக்க நிலை
21)பொருமகிழ்ச்சிமாலை    62)புறநிலை
22)வருத்தமாலை           63)கடைநிலை
23)மெய்கீர்த்தி மாலை      64)கையறுநிலை
24)காப்புமாலை             65)தசாங்கப்பத்து
25)வேனில்மாலை          66)தசாங்கத் தயல்
26)வசந்தமாலை            67)நயனப்பத்து
27)தாரகைமாலை           68)பயோதரப்பத்து
28)உற்பவமாலை           69)பாதாதி கேசம்
29)தானைமாலை           70)அரசன் விருத்தம்
30)மும்மணிமாலை         71)கேசாதி பாதம்
31)தண்டகமாலை           72)அலங்காரப்பஞ்சகம்
32)வீரவெட்சிமாலை        73)கைக்கிளை
33)வெற்றிக்கந்தை மஞ்சரி        74)மங்கல வள்ளை
34)போர்க்கெழு வஞ்சி       75)தூது
35)வரலாற்று வஞ்சி         76)நாற்பது
36)செருக்கள வஞ்சி         77)குழமகன்
37)காஞ்சிமாலை           78)தாண்டகம்
38)நொச்சிமாலை           79)பதிகம்
39)உழிஞைமாலை          80)சதகம்  
40)தும்பைமாலை           81)செவியறிவுறூஉ
41)வாகைமாலை           82)வாயுறை வாழ்த்து
83)புறநிலை வாழ்த்து       91)விருத்த விலக்கணம்
84)பவனிக்காதல்            92)முதுகாஞ்சி
85)குறத்திப்பாட்டு                 93)இயன்மொழி வாழ்த்து
86)உழத்திப்பாட்டு           94)பெருமங்கலம்
87)ஊசல்                   95)பெருங்காப்பியம்
88)எழுகூற்றிருக்கை         96)சிறுகாப்பியம்
89)கடிகை வெண்பா        
90)சின்னப்பூர்                


முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல



நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல விவசாய விஞ்ஞானிகள்....

ஒரு விவசாயி இடத்தை வாங்கும் முன், முதல் நாள் இரவு ஒரு சேவலோடு போய் தங்குவார்..

விடியற்காலையில் சேவல் வழக்கம்போல் கூவினால் மண்ணில் ‘உசுரு’ இருக்குண்ணு அர்த்தம். கூவாவிட்டால்
மண்ணில் சத்து இல்லைன்னு அர்த்தம்...

சேவல் நன்றாக கூவினால் மட்டுமே அந்த இடத்தை வாங்குவர்..இதிலுள்ள முக்கியமான உண்மை என்னவென்றால் சேவல் மண்ணைக்கீர அதனுள் உள்ள புழுக்களை தின்று மறுநாள் தெம்பாகக்கூவும்.

தோண்டி புழு கிடைக்கவில்லை என்றால் அந்த கூவலின் ஆற்றலில் தெரிந்துவிடும். புழு அதிகம் இருக்கும் மண் விவசாயத்திற்கு ஏற்றது.

ஒரு விவசாய கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்க்குள் மேய விடவேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் .

அப்படி அவை படுக்கும் இடங்களை 4, 5 நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத் தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத் தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்...

அறிவியல் வளர்ந்து விட்டது எங்களால் எதையும் சாதிக்க முடியும்ன்னு சொல்லி மக்களை நோயாளியாக்கி அவன் உயிரை காப்பாற்ற அவனையே மிரட்டி காசு பறிப்பதுதான் உங்கள் உண்மையான அறிவியல் வளர்ச்சி.

ஆனால் இயற்கையை கடவுளாக பாவித்து வணங்கி இயற்கையோடு வாழும் மனிதன் உங்களுக்கு படிப்பறிவில்லாதவன்.

கற்றுக்கொள்ளுங்கள் இதுபோல் நம் பாட்டன்,பூட்டன் இன்னும் ஒளித்து வைத்துள்ளான் பல விஷயங்களை...!!!

உழைப்பின் உன்னதம்




ஓர் அழகான கதை. உழைப்பின் உன்னதத்தை உணர்த்துகின்ற கதை-

கடற்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அதன் கிளை ஒன்று மிக நீண்டு கடல் நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில் கடற்குருவி ஒன்று கூடு கட்டியது. அதனுள் நாலைந்து முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது. ஆண் குருவியும் பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.

ஒரு நாள் பெரும் காற்று வீசியது. பெரிய அலைகள் பொங்கி எழுந்தன. கிளையில் இருந்த கூடு நழுவி காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது. குருவிகள் மனம் பதறிக் கதறின. கடல் நீரில் விழுந்து கூடு மூழ்கிய இடத்திற்கு மேலாக கீச், கீச் என்று கத்தியபடியே சுற்றிச் சுற்றி வந்தன.

பெண் குருவி மனம் உடைந்து சொல்லியது. எப்படியாவது முட்டைகளை மீண்டும் நான் காண வேண்டும். இல்லையேல் நான் உயிர் வாழ மாட்டேன் என்றது .

ஆண் குருவி சொன்னது. அவசரப்படாதே ஒரு வழி இருக்கிறது. நமது கூடு கரையின் ஓரமாகத் தான் விழுந்துள்ளது. கூட்டுடன் சேர்ந்து முட்டைகள் விழுந்ததால் நிச்சயம் உடைந்திருக்காது. அதனால் இந்த கடலிலுள்ள தண்ணீரை வற்றவைத்து விட்டால் போதும். முட்டைகளை நாம் மீட்டுவிடலாம்.என்று பெண் குருவிக்கு தன்னம்பிக்கை ஊட்டியது .

கடலை எப்படி வற்றவைப்பது?

முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர இன்னும் பல நாட்கள் ஆகலாம். எனவே நாம் இடைவிடாமல் சில நாட்கள் முயல வேண்டும். நம் வாயில் கொள்ளும் மட்டும் தண்ணீரை எடுத்துக் கொண்டு பறந்து சென்று தொலைவில் கொட்டுவோம். மறுபடியும் திரும்பி வந்து மீண்டும் நீரை நிரப்பிக் கொண்டு போய் தொலைவில் உமிழ்வோம். இப்படியே இடைவிடாமல் செய்து கடல் நீரை வேறு இடத்தில் ஊற்றினால் கடல் நீர் மட்டம் குறைந்து தரை தெரியும். நமது முட்டைகள் வெளிப்படும்.

இதையடுத்து இரண்டு குருவிகளும் தன்னம்பிக்கையுடன் ஊக்கத்துடன் செயலில் இறங்கின. விர்ரென்று பறந்து போய் தங்களது சிறிய அலகில் இரண்டு விழுங்கு நீரை நிரப்பிக் கொண்டன. பறந்து சென்று தொலைவில் போய் உமிழ்ந்தன. மீண்டும் பறந்து வந்து இரண்டு வாய் தண்ணீரை அள்ளின. கொண்டுபோய் தொலைவில் கக்கின.

இப்படியே இரவு பகல் நாள் முழுவதும் இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது, இவற்றின் நீர் அகற்றும் படலம்.

அப்போது அந்தக் கடற்கரை ஓரமாக முனிவர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். மகா சக்திகள் நிறைந்த மகான் அவர். ஆளில்லாத அந்தப் பகுதியில் கீச் கீச் என்ற சப்தம் கேட்கவும் அவர் திரும்பிப் பார்த்தார். இரண்டு குருவிகள் பறந்து போவது கண்டு சிரித்தபடி மேலே நடந்தார்.

மீண்டும் கீச் கீச் என்ற சப்தம். குருவிகள் கடலுக்கு மேல் பறந்தன. எதையோ அள்ளின. மீண்டும் பறந்தன. இப்படி பலமுறை நடைபெறவும், முனிவருக்கு வியப்பு. கடலில் இருக்கும் எதைக் கொத்துகின்றன இவை? அங்கு இரை ஏதும் இல்லையே என்று நினைத்தார் அவர்.

உடனே அந்த மகான் கண்களை மூடினார். உள்ளுக்குள் அமிழ்ந்தார். மறுகணம் அவர் மனதில் எல்லா நிகழ்ச்சிகளும் படம்போல் ஓடின. அவர் மனம் உருகியது. முட்டைகளை இழந்த தாயின் தவிப்பும் கடலையே வற்ற வைத்தாவது முட்டைகளை மீட்க வேண்டும் என்ற அதன் துடிப்பும் அவரது உள்ளத்தை நெகிழச் செய்தன.

உடனே தனது தவ பலத்தை ஒன்று திரட்டிய முனிவர் கையை உயர்த்தினார். மறுகணம் கடல் சில அடிகள் பின் வாங்கியது. அங்கே கூட்டுடன் இருந்த முட்டைகள் தென்பட்டன. குருவிகள் அதைப் பார்த்து குதூகலத்துடன் கீச்சிட்டன. ஆளுக்கொன்றாக முட்டைகளை பற்றிக் கொண்டு போய் வேறிடத்தில் சேர்த்தன.

நான் அப்போதே சொன்னேன் பார்த்தாயா? நமது ஒரு நாள் உழைப்பில் கடல் நீரை குறைத்து முட்டைகளை மீட்டு விட்டோம் பார்த்தாயா? என்றது ஆண் குருவி பெருமிதமாக.

முனிவர் சிரித்தபடி தொடர்ந்து நடந்தார். இங்கே குருவிகள் முட்டைகளை மீட்டது அவற்றின் உழைப்பாலா? இல்லை. முனிவரின் அருளால். ஆனால் அந்தக் குருவிகளுக்கு முனிவர் என்ற ஒருவரைப் பற்றியோ தவ வலிமை என்றால் என்ன என்பது பற்றியோ, எதுவுமே தெரியாது.ஆனால் தன்னம்பிக்கையுடன் கடல் நீரை அள்ளின .

அதே சமயம் குருவிகள் மட்டுமே கடல் நீரை மொண்டு சென்று ஊற்றிக் கொண்டிருக்காவிட்டால் முனிவர் தம் வழியே போயிருப்பார்.
அவரை மனம் நெகிழ வைத்தது எது? அவற்றின் உழைப்பும் முயற்சியும்தான். ஆக இங்கே முட்டைகள் மீட்கப்பட்டது, குருவிகளாலும் தான். முனிவராலும் தான். முனிவரின் ஆற்றல் அவற்றுக்குப் பக்க பலமாக வந்து சேர்ந்தது. குருவிகளின் உழைப்புத்தான் அதற்கு அடிப்படையாக அமைந்தது.

அன்பு நண்பர்களே .

எல்லையில்லா ஆற்றல் பெற்றவர்களே இளமைப் பருவம் வாழ்வின் இன்றியமையாப் பருவம்.
பருவத்தே பயிர் செய் என்பார்களே. இளமையில் வியர்வை சிந்தாவிட்டால் முதுமையில் கண்ணீர் சிந்த வேண்டி இருக்கும்.

எனவே விழித்திருக்கும் நேரமெல்லாம் உழைத்துக் கொண்டிருங்கள். வாழ்வில் எல்லா நேரமும் நல்ல நேரம்தான். உழைக்காத நேரம்தான் ராகு காலம். திட்டமிடுங்கள். ஒவ்வொன்றையும் திட்டமிட்டு உழைத்திடுங்கள் .

இந்த கதை பாலகுமாரன் அய்யாவின் கடலோர குருவிகள் நாவல் புத்தகத்தில் படித்தவை .

பூமியை விழுங்கி விடும் ஆவேசத்துடன்





பூமியை விழுங்கி விடும் ஆவேசத்துடன் ஆக்ரோஷமாய் தனது அனகோண்டா நாக்குகளை நீட்டியது மழை. பெருமழை என்பதையும் பேய்மழை என்பதையும் வாசித்துப் பழகிய சென்னை வாசிகளுக்கு நேரில் பார்க்கும் வாய்ப்பு இப்போது தான் வாய்த்தது. அது பேரச்சம் கலந்த வாய்ப்பு.

நிமிடம் தோறும் ஒரு இஞ்ச், அரையடி என உயர்ந்த தண்ணீர் சாலைகளை விழுங்கி ஏப்பம் விட்டு, வீட்டு வாசல்படிகளில் அழையா விருந்தாளியாய் நுழையத் துவங்கியது. நதிகள் தங்கள் கழுத்துவரை நீர் வளையங்களை ஏற்கனவே மாட்டியிருந்ததால் துளிகளுக்கே அது தளும்பத் துவங்கியது.

நதிகளிடம் அனுமதிவாங்காமல் மனிதர்கள் காங்கிரீட் மரங்களை நட்டிருந்தார்கள். தண்ணீர், மனிதர்களிடம் அனுமதி வாங்காமல் நதிகளின் பாதையை உருவாக்கிக் கொண்டன. எங்கும் தண்ணீர். எங்கும் பதட்டம். சென்னையில் மழை பெய்யவில்லை என்பதே நீண்டநாள் கவலையாய் இருந்தது. ஏன் கடவுள் மழையை சென்னைக்கு அனுப்பவில்லை என்பது இப்போது தான் புரிகிறது.

மழை பல பாடங்களையும் கற்றுத் தந்தது. மனிதாபிமானத்தின் கதவுகளை அறைந்து சாத்தியிருந்த வீடுகள் கூரைகளையும் சேர்த்தே திறந்தன. தங்கள் பெயருக்குப் பின்னாலும், முன்னாலும் பட்டங்களையும், பதக்கங்களையும் குத்தி வைத்திருந்த மக்கள் கழுத்துவரை தண்ணீரில், சாக்கடைகளை உதாசீனப்படுத்தி நடந்தனர்.

போர்ட்டிகோவில் முழங்காலளவு நீரில் தெரு நதியை வேடிக்கை பார்த்தபடி வாசலில் நின்றிருந்த என்னிடம் ஒருவர் வந்து இரண்டு பால் பாக்கெட்களை நீட்டினார். "உடனே காய்ச்சிடுங்க... இல்லேன்னா கெட்டுடும்" என்றார். யாரது.. நம்மைத் தேடி வந்து பால் பாக்கெட் தருவது ? பால் பாக்கெட் கிடைக்காமல் ஊரே நெட்டோட்டம் ஓடும் இந்த நேரத்தில் என மனதில் குழப்ப ரேகைகள்.

'... நீங்க ?...'  என இழுத்தேன்.

பக்கத்து வீடு தான். மாடில குடியிருக்கேன். என்றார். என் வீட்டை ஒட்டியபடி இருந்தது அந்த வீடு. நாலடி இடைவெளியில் இருந்தது வீட்டுச் சுவர். கூனிக் குறுகினேன்.

'நன்றி.. என்ன பண்றீங்க.. ' என முதன் முறையாக விசாரித்தேன். கால்களுக்குக் கீழே கிடந்த ஈரம் இதயங்களிடையே பரவியது.

மின்சாரம் செத்துப் போய் இரண்டு நாளாகியிருந்தது. நான்கு நாட்கள் அது உயிர்த்தெழவேயில்லை. வீட்டுக்குள் ஒற்றை மெழுகுவர்த்தியைச் சுற்றியமர்ந்து குழந்தைகளுடனும், மனைவியுடனும், வீட்டிலுள்ளவர்களுடனும் கதைபேசிய கணங்களில் உணர்ந்தேன் வெளிச்சம் எவ்வளவு தூரம் எங்கள் உறவுகளுக்குள் இருட்டை விரித்திருக்கிறது என்பதை. இருட்டு எங்களுக்கிடையே வெளிச்சத்தை அதிகரித்திருந்தது.

சுற்றியிருந்து கதைபேசி, விளையாடி, சாப்பிட்டு செலவிட்ட நான்கு நாட்கள் கால்நூற்றாண்டுகளுக்கு முன் நான் வாழ்ந்த வாழ்க்கைக்குள் என்னை இட்டுச் சென்றது. அம்மாவும், அப்பாவும், சகோதர சகோதரிகளும், எங்கள் கிராமத்துத் திண்ணையும் மனதுக்குள் இதமாய் வந்திறங்கியது.

வெளிச்சம் வீட்டில் மூலைகளுக்குள் மனிதர்களைத் துரத்தும். இருட்டோ, ஒற்றைப் புள்ளியில் எல்லோரையும் இணைக்கும் எனும் உண்மையை நான் உணரும் வாய்ப்பாய் அது அமைந்தது.

தொலைக்காட்சி அமைதியாய் மூலையில் கிடந்தது. லேப்டாப்கள் மரத் துண்டுகளைப் போல வீட்டில் மூலைகளில் கிடந்தன. வரிக்குதிரை போல கம்பீரமாய் நிற்கும் செல்போன் சிக்னல், வட்டத்திற்குள் விட்டம் வரைந்து வெறுமனே கிடந்தது. கைப்பிடிக்குள் இருந்த உலகம் சட்டென கைவிட்டுப் பறந்த ஒரு பட்டாம் பூச்சியைப் போல பறந்து மறைந்தது.

மீண்டும் ஒரு முறை தகவல் தொடர்புகள் இன்லென்ட் லெட்டர்களின் முதுகில் பயணித்த காலத்தில் பயணித்த அனுபவம். செல்போன்களும், வாட்ஸப்களும், மின்னஞ்சல்களும் இல்லாத நான்கு நாட்கள் வாசிக்கவும், நேசிக்கவும், எழுதவும் கிடைத்தவை குடும்ப உறவுகள் மட்டுமே. பாசமிகு மனங்கள் மட்டுமே.

புள்ளி வைத்து வட்டம் வரைந்த ஸ்மைலிகளல்ல வாழ்க்கை, இதழில் விரியும் புன்னகை என்பதை புரிந்து கொள்ள இறைவன் அனுப்பிய வரப்பிரசாதமே பெருமழை.

அவசரமாய் ஓடிப் பழகிய கால்கள் ஓய்வெடுத்தன. நேரமில்லை என புலம்பிய மனது அடிக்கடி சொன்னது, "அட அஞ்சு மணி தான் ஆச்சா.. வாங்க கதை சொல்லி விளையாடலாம்...".

நேரம் எப்போதும் நம்மிடம் இருக்கிறது. அதை டிஜிடல் ஸ்ட்ராக்கள் உறுஞ்சிக் கொள்கின்றன என்பது புரிய வைத்த நிகழ்வாய் அது இருந்தது.

ஐந்து நாட்களுக்குப் பின் மீண்டும் மின்சாரம் வீட்டுக்குள் நுழைந்தபோது ஏதோ விரோதி வீட்டுக்குள் நுழைந்தது போல முதன் முறையாய் உணர்ந்தேன். மனைவி சொன்னார்,

"கரண்ட் இல்லாம இருந்ததே நல்லா இருந்துச்சு...".

பிள்ளைகள் சொன்னார்கள், "என்ன டாடி.. நெட்வர்க் வந்துச்சா... போச்சு.. இனிமே லேப்டாப்பைத் தூக்கிடுவீங்க..."

அது மழையல்ல,

பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை !

இந்த ஒரு பதிவை மட்டும் எழுதிவிட்டு லேப்டாப்பை ஒதுக்கி வைப்பதென முடிவு செய்து விட்டேன்.